| 1 | இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்? | யோபு 15:8-10 யோபு 15:15-10 ஏசா 41:1 ஏசா 41:21-23 எபிரெ 12:1 |
| 2 | கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும். | யோபு 18:4 யோனா 4:9 |
| 3 | நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன். | யோபு 27:8 சங் 37:35 சங் 37:36 சங் 73:3-9 சங் 73:18-20 சங் 92:7 எரே 12:1-3 |
| 4 | அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள். | யோபு 4:10 யோபு 4:11 யோபு 8:4 யோபு 18:16-19 யோபு 27:14 யாத் 20:5 சங் 109:9-15 சங் 119:155 சங் 127:5 |
| 5 | பசித்தவன் அவன் விளைச்சலை முட்செடிகளுக்குள்ளுமிருந்து பறித்துத் தின்றான்; பறிகாரன் அவன் ஆஸ்தியை விழுங்கினான். | உபா 28:33 உபா 28:51 நியா 6:3-6 ஏசா 62:8 |
| 6 | தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை. | யோபு 34:29 உபா 32:27 1சாமு 6:9 சங் 90:7 ஏசா 45:7 புலம் 3:38 ஆமோ 3:6 |
| 7 | அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான். | யோபு 14:1 ஆதி 3:17-19 சங் 90:8 சங் 90:9 1கொரி 10:13 |
| 8 | ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்புவிப்பேன். | யோபு 8:5 யோபு 22:21 யோபு 22:27 ஆதி 32:7-12 2நாளா 33:12 2நாளா 33:13 சங் 50:15 சங் 77:1 சங் 77:2 யோனா 2:1-7 |
| 9 | ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். | யோபு 9:10 யோபு 11:7-9 யோபு 37:5 சங் 40:5 சங் 72:18 சங் 86:10 ரோம 11:33 |
| 10 | தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார். | யோபு 28:26 சங் 65:9-11 சங் 147:8 எரே 5:24 எரே 10:13 எரே 14:22 ஆமோ 4:7 அப் 14:17 |
| 11 | அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார். | 1சாமு 2:7 1சாமு 2:8 சங் 91:14 சங் 107:41 எசே 17:24 லூக் 1:52 லூக் 1:53 |
| 12 | தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார். | யோபு 12:16 யோபு 12:17 நெகே 4:15 சங் 33:10 சங் 33:11 சங் 37:17 நீதி 21:30 ஏசா 8:10 ஏசா 19:3 |
| 13 | அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும். | 2சாமு 15:31 2சாமு 15:34 2சாமு 17:23 எஸ்தர் 6:4-11 எஸ்தர் 7:10 எஸ்தர் 9:25 சங் 7:15 சங் 7:16 சங் 9:15 சங் 9:16 சங் 35:7 சங் 35:8 லூக் 1:51 1கொரி 1:19 1கொரி 1:20 |
| 14 | அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவித் திரிகிறார்கள். | யோபு 12:25 உபா 28:29 நீதி 4:19 ஏசா 59:10 ஆமோ 8:9 |
| 15 | ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார். | சங் 10:14 சங் 10:17 சங் 35:10 சங் 72:4 சங் 72:12 சங் 72:13 சங் 107:41 சங் 109:31 சங் 140:12 |
| 16 | அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும். | 1சாமு 2:8 1சாமு 2:9 சங் 9:18 ஏசா 14:32 சகரி 9:12 |
| 17 | இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். | சங் 94:12 நீதி 3:11 நீதி 3:12 எரே 31:18 எபிரெ 12:5-11 யாக் 1:12 யாக் 5:11 வெளிப் 3:19 |
| 18 | அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. | உபா 32:39 1சாமு 2:6 சங் 147:3 ஏசா 30:26 |
| 19 | ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. | சங் 34:19 சங் 91:3-7 நீதி 24:16 1கொரி 10:13 2கொரி 1:8 2பேது 2:9 |
| 20 | பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார். | ஆதி 45:7 1இரா 17:6 சங் 33:19 நீதி 10:3 ஏசா 33:16 ஆபகூ 3:17 |
| 21 | நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர். | சங் 31:20 சங் 55:21 சங் 57:4 நீதி 12:18 ஏசா 54:17 எரே 18:18 யாக் 3:5-8 |
| 22 | பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர். | 2இரா 19:21 |
| 23 | வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும். | சங் 91:12 சங் 91:13 ஓசி 2:18 ரோம 8:38 ரோம 8:39 |
| 24 | உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர். | யோபு 18:6 யோபு 18:15 யோபு 18:21 யோபு 21:7-9 1சாமு 30:3 ஏசா 4:5 ஏசா 4:6 |
| 25 | உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர். | யோபு 42:13-16 ஆதி 15:5 லேவி 26:9 உபா 28:4 சங் 112:2 சங் 127:3-5 சங் 128:3-6 |
| 26 | தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர். | யோபு 42:16 யோபு 42:17 ஆதி 15:15 ஆதி 25:8 சங் 91:16 நீதி 9:11 நீதி 10:27 |
| 27 | இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான். | யோபு 8:8-10 யோபு 12:2 யோபு 15:9 யோபு 15:10 யோபு 15:17 யோபு 32:11 யோபு 32:12 சங் 111:2 நீதி 2:3-5 |