இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோபு 13

                   
புத்தகங்களைக் காட்டு
1இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது.யோபு 5:9-16 யோபு 12:9-25 யோபு 42:3-6
2நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.யோபு 12:3 யோபு 15:8 யோபு 15:9 யோபு 34:35 யோபு 35:16 யோபு 37:2 யோபு 40:4 யோபு 40:5 யோபு 42:7 1கொரி 8:1 1கொரி 8:2 2கொரி 11:4 2கொரி 11:5 2கொரி 11:16-18 2கொரி 12:11
3சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.யோபு 13:22 யோபு 9:34 யோபு 9:35 யோபு 11:5 யோபு 23:3-7 யோபு 31:35
4நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.யோபு 4:7-11 யோபு 5:1-5 யோபு 8:3 யோபு 8:4 யோபு 18:5-21 யோபு 21:27-34 யோபு 22:6-30 யாத் 20:16 சங் 119:69
5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.யோபு 13:13 யோபு 11:3 யோபு 16:3 யோபு 18:2 யோபு 19:2 யோபு 21:2 யோபு 21:3 யோபு 32:1
6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.யோபு 21:2 யோபு 21:3 யோபு 33:1-3 யோபு 34:2 நியா 9:7 நீதி 8:6 நீதி 8:7
7நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?யோபு 4:7 யோபு 11:2-4 யோபு 17:5 யோபு 32:21 யோபு 32:22 யோபு 36:4 யோவா 16:2 ரோம 3:5-8 2கொரி 4:2
8அவருக்கு முகதாட்சிணியம்பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?யோபு 32:21 யோபு 34:19 யாத் 23:2 யாத் 23:3 நீதி 24:23 மல்கி 2:9
9அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம் பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ?யோபு 34:36 சங் 44:21 சங் 139:23 எரே 17:10
10நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.யோபு 42:7 யோபு 42:8 சங் 50:21 சங் 50:22 சங் 82:2 யாக் 2:9
11அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?சங் 119:120 எரே 5:22 எரே 10:10 மத் 10:28 வெளிப் 15:3 வெளிப் 15:4
12உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச் சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.யோபு 18:17 யாத் 17:14 சங் 34:16 சங் 102:12 சங் 109:15 நீதி 10:7 ஏசா 26:14
13நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.யோபு 13:5 யோபு 7:11 யோபு 10:1 யோபு 21:3
14நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?யோபு 18:4 பிரச 4:5 ஏசா 9:20 ஏசா 49:26
15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.யோபு 13:18 யோபு 19:25-28 யோபு 23:10 சங் 23:4 நீதி 14:32 ரோம 8:38 ரோம 8:39
16அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.யாத் 15:2 சங் 27:1 சங் 62:6 சங் 62:7 சங் 118:14 சங் 118:21 ஏசா 12:2 எரே 3:23 அப் 13:47
17என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.யோபு 13:6 யோபு 33:1
18இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.யோபு 16:21 யோபு 23:4 யோபு 40:7
19என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.யோபு 19:5 யோபு 33:5-7 யோபு 33:32-7 ஏசா 50:7 ஏசா 50:8 ரோம 8:33
20இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.யோபு 9:34 யோபு 9:35
21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.யோபு 10:20 யோபு 22:15-17
22நீர் கூப்பிடும், நான் உத்தரவு கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.யோபு 9:32 யோபு 38:3 யோபு 40:4 யோபு 40:5 யோபு 42:3-6
23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என்பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.யோபு 22:5 சங் 44:20 சங் 44:21
24நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?யோபு 10:2 யோபு 29:2 யோபு 29:3 உபா 32:20 சங் 10:1 சங் 13:1 சங் 44:24 சங் 77:6-9 சங் 88:14 ஏசா 8:17
25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?யோபு 14:3 1சாமு 24:14 ஏசா 17:13 மத் 12:20
26மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.யோபு 3:20 ரூத் 1:20 சங் 88:3-18
27என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.யோபு 33:11 2நாளா 16:10-12 நீதி 7:22 அப் 16:24
28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம் போலவும் அழிந்து போவான்.யோபு 30:17-19 யோபு 30:29-19 யோபு 30:30-19 எண் 12:12
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.