| 1 | சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது. | 1இரா 20:34 |
| 2 | மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும்போது, | 1இரா 22:1 மத் 12:40 மத் 16:21 |
| 3 | இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி, | 1இரா 4:13 உபா 4:43 யோசு 20:8 |
| 4 | யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான். | 2இரா 3:7 2நாளா 18:3 |
| 5 | பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான். | எண் 27:21 யோசு 9:14 நியா 1:1 நியா 20:18 நியா 20:23 நியா 20:29 1சாமு 14:18 1சாமு 23:2 1சாமு 23:4 1சாமு 23:9-12 1சாமு 30:8 2இரா 1:3 2இரா 3:11 1நாளா 10:13 2நாளா 18:4 2நாளா 18:5 நீதி 3:5 நீதி 3:6 எரே 21:2 எரே 42:2-6 எசே 14:3 எசே 20:1-3 |
| 6 | அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். | 1இரா 18:19 2தீமோ 4:3 |
| 7 | பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான். | 2இரா 3:11-13 2நாளா 18:6 2நாளா 18:7 |
| 8 | அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான். | 1இரா 18:4 1இரா 19:10 1இரா 19:14 1இரா 20:41 1இரா 20:42 |
| 9 | அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான். | 2இரா 9:32 2நாளா 18:8 ஏசா 39:7 தானி 1:18 |
| 10 | இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். | 1இரா 22:30 எஸ்தர் 5:1 எஸ்தர் 6:8 எஸ்தர் 6:9 மத் 6:20 மத் 11:8 அப் 12:21 அப் 25:23 |
| 11 | கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். | எரே 27:2 எரே 28:10-14 சகரி 1:18-21 அப் 19:13-16 2கொரி 11:13-15 2தீமோ 3:8 |
| 12 | சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். | 1இரா 22:6-15 1இரா 22:32-36 2நாளா 35:22 |
| 13 | மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான். | சங் 10:11 சங் 11:1 சங் 14:1 சங் 50:21 ஏசா 30:10 ஏசா 30:11 ஓசி 7:3 ஆமோ 7:13-17 மீகா 2:6 மீகா 2:7 மீகா 2:11 1கொரி 2:14-16 |
| 14 | அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். | எண் 22:38 எண் 24:13 2நாளா 18:12 2நாளா 18:13 எரே 23:28 எரே 26:2 எரே 26:3 எரே 42:4 எசே 2:4-8 எசே 3:17-19 அப் 20:26 அப் 20:27 2கொரி 2:17 2கொரி 4:2 கலா 1:10 |
| 15 | அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: 'போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்' என்றான். | 1இரா 18:27 நியா 10:14 2இரா 3:13 2நாளா 18:14 பிரச 11:9 மத் 26:45 |
| 16 | ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான். | யோசு 6:26 1சாமு 14:24 2நாளா 18:15 மத் 26:63 மாற் 5:7 அப் 19:13 |
| 17 | அப்பொழுது அவன்: இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான். | 1சாமு 9:9 எரே 1:11-16 எசே 1:4 அப் 10:11-17 |
| 18 | அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான். | 1இரா 22:8 நீதி 10:24 நீதி 27:22 நீதி 29:1 லூக் 11:45 |
| 19 | அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலது பக்கத்திலும் அவர் இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். | ஏசா 1:10 ஏசா 28:14 எரே 2:4 எரே 29:20 எரே 42:15 எசே 13:2 ஆமோ 7:16 |
| 20 | அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். | யோபு 12:16 எரே 4:10 எசே 14:9 |
| 21 | அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. | 1இரா 22:23 யோபு 1:6 யோபு 1:7 யோபு 2:1 |
| 22 | எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார். | யோபு 1:8-11 யோபு 2:4-6 யோவா 8:44 அப் 5:3 அப் 5:4 2தெச 2:9 2தெச 2:10 1தீமோ 4:1 1யோவா 4:6 வெளிப் 12:9 வெளிப் 12:10 வெளிப் 13:14 வெளிப் 16:13 வெளிப் 16:14 வெளிப் 20:3 வெளிப் 20:7 வெளிப் 20:10 |
| 23 | ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். | யாத் 4:21 யாத் 10:20 உபா 2:30 2நாளா 25:16 ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 44:20 எசே 14:3-5 எசே 14:9-5 மத் 13:13-15 மத் 24:24 மத் 24:25 |
| 24 | அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான். | 2நாளா 18:23 2நாளா 18:24 ஏசா 50:5 ஏசா 50:6 புலம் 3:30 மீகா 5:1 மாற் 14:65 மாற் 15:19 மாற் 15:20 யோவா 15:18 யோவா 15:20 அப் 23:2 |
| 25 | அதற்கு மிகாயா: நீ ஒளித்துக் கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான். | எண் 31:8 ஏசா 9:14-16 எரே 23:15 எரே 28:16 எரே 28:17 எரே 29:21 எரே 29:22 எரே 29:32 ஆமோ 7:17 2பேது 2:1 வெளிப் 19:20 |
| 26 | அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் குமாரனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய், |
| 27 | இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே வருமளவும், இவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான். | 2நாளா 16:10 2நாளா 18:25-27 எரே 20:2 எரே 29:26 எரே 37:15 எரே 38:6 புலம் 3:53-55 மாற் 6:17-28 லூக் 3:20 அப் 5:18 அப் 16:23 அப் 16:24 அப் 24:25-27 அப் 26:10 எபே 3:1 வெளிப் 2:10 |
| 28 | அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான். | எண் 16:29 உபா 18:20-22 2இரா 1:10 2இரா 1:12 ஏசா 44:26 எரே 28:8 எரே 28:9 அப் 13:10 அப் 13:11 |
| 29 | பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள். | 1இரா 22:2-9 2நாளா 18:28 |
| 30 | இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான். | 1இரா 22:10 சங் 12:2 |
| 31 | சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பதிரண்டு தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடே மாத்திரம் யுத்தம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான். | 1இரா 20:24 2நாளா 18:30 |
| 32 | ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனுக்கு நேராகச் சாய்ந்து வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான். | நீதி 13:20 |
| 33 | இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டு அவனைவிட்டு விலகிப்போனார்கள். | 1இரா 22:31 சங் 76:10 |
| 34 | ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள்பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து; நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான். | 2சாமு 15:11 |
| 35 | அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்து போனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது. | 1இரா 22:28 1இரா 20:42 |
| 36 | பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும், போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது. | 1இரா 22:17 1இரா 22:31 1இரா 12:16 2இரா 14:12 |
| 37 | அப்படியே ராஜா இறந்தபின்பு, சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள். |
| 38 | அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது. | 1இரா 21:19 யோசு 23:14 யோசு 23:15 ஏசா 44:25 ஏசா 44:26 ஏசா 48:3-5 எரே 44:21-23 சகரி 1:4-6 மத் 24:35 |
| 39 | ஆகாபின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின தந்த அரமனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. | 1இரா 14:19 1இரா 15:23 1இரா 15:31 1இரா 16:5 1இரா 16:20 1இரா 16:27 |
| 40 | ஆகாப் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய அகசியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். | 1இரா 2:10 1இரா 11:21 1இரா 14:31 உபா 31:16 2சாமு 7:12 |
| 41 | ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான். | 1இரா 22:2 1நாளா 3:10 2நாளா 17:1 2நாளா 20:31 |
| 42 | யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள். | 2இரா 1:17 2இரா 8:16 |
| 43 | அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள். | 1இரா 15:11 1இரா 15:14 2நாளா 14:2-5 2நாளா 14:11-5 2நாளா 15:8 2நாளா 15:17 2நாளா 17:3 |
| 44 | யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடே சமாதானமாயிருந்தான். | 1இரா 22:2 2இரா 8:18 2நாளா 19:2 2நாளா 21:6 2கொரி 6:14 |
| 45 | யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும், அவன் காட்டிய வல்லமையும், அவன் பண்ணினயுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. | 1இரா 11:41 1இரா 14:29 |
| 46 | தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான். | 1இரா 14:24 1இரா 15:12 ஆதி 19:5 உபா 23:17 நியா 19:22 ரோம 1:26 ரோம 1:27 1கொரி 6:9 1தீமோ 1:10 யூதா 1:7 |
| 47 | அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான். | ஆதி 25:23 ஆதி 27:40 ஆதி 36:31-43 2சாமு 8:14 2இரா 3:9 2இரா 8:20 சங் 108:9 சங் 108:10 |
| 48 | பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன்கேபேரிலே உடைந்துபோயின. | 2நாளா 20:35 2நாளா 20:36-21 |
| 49 | அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை. |
| 50 | யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். | 1இரா 22:40 1இரா 2:10 2நாளா 21:1 |
| 51 | ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி, | 1இரா 15:25 2இரா 1:17 |
| 52 | கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைத் செய்து, தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து, | 1இரா 15:26 1இரா 16:30-33 2இரா 1:2-7 |
| 53 | பாகாலைச் சேவித்து, அவனைப் பணிந்துகொண்டு, தன் தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கினான். | 1இரா 16:31 நியா 2:1-11 2இரா 1:2 2இரா 3:2 |