| 1 | இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது. | 1இரா 20:35-43 2நாளா 28:22 எஸ்றா 9:13 எஸ்றா 9:14 ஏசா 9:13 எரே 5:3 |
| 2 | ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான். | ஆதி 3:6 யாத் 20:17 உபா 5:21 1சாமு 8:14 எரே 22:17 ஆபகூ 2:9-11 லூக் 12:15 1தீமோ 6:9 யாக் 1:14 யாக் 1:15 |
| 3 | நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான். | ஆதி 44:7 ஆதி 44:17 யோசு 22:29 யோசு 24:16 1சாமு 12:23 1சாமு 24:6 1சாமு 26:9-11 1நாளா 11:19 யோபு 27:5 ரோம 3:4 ரோம 3:6 ரோம 3:31 ரோம 6:2 ரோம 6:15 ரோம 7:7 ரோம 7:13 1கொரி 6:15 கலா 6:14 |
| 4 | இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய்த் தன் வீட்டிற்கு வந்து, போஜனம் பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். | 1இரா 20:43 யோபு 5:2 ஏசா 57:20 ஏசா 57:21 யோனா 4:1 யோனா 4:9 ஆபகூ 2:9-12 |
| 5 | அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம் பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு, | 1இரா 21:25 1இரா 16:31 1இரா 18:4 1இரா 19:2 ஆதி 3:6 |
| 6 | அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க் கொடு; அல்லது உனக்கு ராசியானால் அதற்குப் பதிலாக வேறே திராட்சத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என் திராட்சத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான். | 1இரா 21:2 எஸ்தர் 5:9-14 எஸ்தர் 6:12 நீதி 14:30 1தீமோ 6:9 1தீமோ 6:10 யாக் 4:2-7 |
| 7 | அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள். | 1சாமு 8:4 2சாமு 13:4 நீதி 30:31 பிரச 4:1 பிரச 8:4 தானி 5:19-21 |
| 8 | அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள். | 2சாமு 11:14 2சாமு 11:15 2நாளா 32:17 எஸ்றா 4:7 எஸ்றா 4:8 எஸ்றா 4:11 நெகே 6:5 எஸ்தர் 3:12-15 எஸ்தர் 8:8-13 |
| 9 | அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, | ஆதி 34:13-17 ஏசா 58:4 மத் 2:8 மத் 23:14 லூக் 20:47 யோவா 18:28 |
| 10 | தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள். | உபா 19:15 மத் 26:59 மத் 26:60 அப் 6:11 |
| 11 | அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள். | யாத் 1:17 யாத் 1:21 யாத் 23:1 யாத் 23:2 லேவி 19:15 1சாமு 22:17 1சாமு 23:20 2இரா 10:6 2இரா 10:7 2நாளா 24:21 நீதி 29:12 நீதி 29:26 தானி 3:18-25 ஓசி 5:11 மீகா 6:16 மத் 2:12 மத் 2:16 அப் 4:19 அப் 5:29 |
| 12 | அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள். | 1இரா 21:8-10 ஏசா 58:4 |
| 13 | அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து, | யாத் 20:16 உபா 5:20 உபா 19:16-21 சங் 27:12 சங் 35:11 நீதி 6:19 நீதி 19:5 நீதி 19:9 நீதி 25:18 மல்கி 3:5 மாற் 14:56-59 |
| 14 | பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள். | 2சாமு 11:14-24 பிரச 5:8 பிரச 8:14 |
| 15 | நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப் போனான் என்றாள். | 1இரா 21:7 நீதி 1:10-16 நீதி 4:17 |
| 16 | நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான். | 2சாமு 1:13-16 2சாமு 4:9-12 2சாமு 11:25-27 2சாமு 23:15-17 சங் 50:18 ஏசா 33:15 ஒபதி 1:12-14 ரோம 1:32 2பேது 2:15 |
| 17 | கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: | 2இரா 1:15 2இரா 1:16 2இரா 5:26 சங் 9:12 ஏசா 26:21 |
| 18 | நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான். | 1இரா 13:32 2நாளா 22:9 |
| 19 | நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். | ஆதி 3:11 ஆதி 4:9 ஆதி 4:10 2சாமு 12:9 மீகா 3:1-4 ஆபகூ 2:9 ஆபகூ 2:12 |
| 20 | அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய். | 1இரா 18:17 1இரா 22:8 2நாளா 18:7 2நாளா 18:17 ஆமோ 5:10 மாற் 12:12 கலா 4:16 வெளிப் 11:10 ஆமோ 5:10 மாற் 12:12 கலா 4:16 வெளிப் 11:10 |
| 21 | நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப் போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து, | 1இரா 14:10 யாத் 20:5 யாத் 20:6 2இரா 9:7-9 2இரா 10:1-7 2இரா 10:11-14 2இரா 10:17-14 2இரா 10:30-14 |
| 22 | நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான். | 1இரா 15:29 1இரா 16:3 1இரா 16:11 |
| 23 | யேசேபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரவேலின் மதில் அருகே தின்னும். | 1இரா 21:25 2இரா 9:10 2இரா 9:30-37 |
| 24 | ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் தின்னும் என்றார். | 1இரா 14:11 1இரா 16:4 ஏசா 14:19 எரே 15:3 எசே 32:4 எசே 32:5 எசே 39:18-20 வெளிப் 19:18 |
| 25 | தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. | 1இரா 21:20 1இரா 16:30-33 2இரா 23:25 |
| 26 | கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னின்று துரத்திவிட்ட எமோரியர் செய்தபடியெல்லாம், அவன் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, மகா அருவருப்பாய் நடந்துகொண்டான். | 2நாளா 15:8 ஏசா 65:4 எரே 16:18 எரே 44:4 எசே 18:12 1பேது 4:3 வெளிப் 21:8 |
| 27 | ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான். | ஆதி 37:34 2இரா 6:30 2இரா 18:37 யோனா 3:6 |
| 28 | அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: |
| 29 | ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார். | எரே 7:17 லூக் 7:44 |