| 1 | யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான். | ஆதி 37:36 ஆதி 45:4 சங் 105:17 அப் 7:9 |
| 2 | கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். | ஆதி 39:21 ஆதி 39:22 ஆதி 21:22 ஆதி 26:24 ஆதி 26:28 ஆதி 28:15 1சாமு 3:19 1சாமு 16:18 1சாமு 18:14 1சாமு 18:28 சங் 1:3 சங் 46:7 சங் 46:11 சங் 91:15 ஏசா 8:9 ஏசா 8:10 ஏசா 41:10 ஏசா 43:2 எரே 15:20 மத் 1:23 அப் 7:9 அப் 7:10 அப் 8:31 |
| 3 | கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; | ஆதி 21:22 ஆதி 26:24 ஆதி 26:28 ஆதி 30:27 ஆதி 30:30 1சாமு 18:14 1சாமு 18:28 சகரி 8:23 மத் 5:16 பிலிப் 2:15 பிலிப் 2:16 வெளிப் 3:9 |
| 4 | யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். | ஆதி 39:21 ஆதி 18:3 ஆதி 19:19 ஆதி 32:5 ஆதி 33:8 ஆதி 33:10 1சாமு 16:22 நெகே 2:4 நெகே 2:5 நீதி 16:7 |
| 5 | அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது. | ஆதி 12:2 ஆதி 19:29 ஆதி 30:27 உபா 28:3-6 2சாமு 6:11 2சாமு 6:12 சங் 21:6 சங் 72:17 அப் 27:24 எபே 1:3 |
| 6 | ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம் தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். | ஆதி 39:4 ஆதி 39:8 ஆதி 39:23 லூக் 16:10 லூக் 19:17 |
| 7 | சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். | ஆதி 6:2 யோபு 31:1 சங் 119:37 எசே 23:5 எசே 23:6 எசே 23:12-16 மத் 5:28 2பேது 2:14 1யோவா 2:16 |
| 8 | அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்கையில் ஒப்பித்திருக்கிறார். | நீதி 1:10 நீதி 2:10 நீதி 2:16-19 நீதி 5:3-8 நீதி 6:20-25 நீதி 6:29-25 நீதி 6:32-25 நீதி 6:33-25 நீதி 7:5 நீதி 7:25-27 நீதி 9:13-18 நீதி 22:14 நீதி 23:26-28 |
| 9 | இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறோன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். | ஆதி 24:2 நெகே 6:11 லூக் 12:48 1கொரி 4:2 தீத் 2:10 |
| 10 | அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. | ஆதி 39:8 நீதி 2:16 நீதி 5:3 நீதி 6:25 நீதி 6:26 நீதி 7:5 நீதி 7:13 நீதி 9:14 நீதி 9:16 நீதி 22:14 நீதி 23:27 |
| 11 | இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை. | யோபு 24:15 நீதி 9:17 எரே 23:24 மல்கி 3:5 எபே 5:3 எபே 5:12 |
| 12 | அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான். | ஆதி 39:8 ஆதி 39:10 நீதி 7:13-27 பிரச 7:26 எசே 16:30 எசே 16:31 |
| 13 | அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, |
| 14 | அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படிக்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். | ஆதி 39:17 ஆதி 10:21 ஆதி 14:13 ஆதி 40:15 சங் 120:3 எசே 22:5 |
| 15 | நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள். |
| 16 | அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து, | சங் 37:12 சங் 37:32 எரே 4:22 எரே 9:3-5 தீத் 3:3 |
| 17 | அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான். | ஆதி 39:14 யாத் 20:16 யாத் 23:1 1இரா 18:17 1இரா 21:9-13 சங் 37:14 சங் 55:3 சங் 120:2-4 நீதி 12:19 நீதி 19:5 நீதி 19:9 மத் 26:65 |
| 18 | அப்பொழுது நான் சத்தமிட்டுக்கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள். |
| 19 | உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது. | யோபு 29:16 நீதி 18:17 நீதி 29:12 அப் 25:16 2தெச 2:11 |
| 20 | யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். | ஆதி 40:15 ஆதி 41:14 சங் 105:18 சங் 105:19 ஏசா 53:8 தானி 3:21 தானி 3:22 2தீமோ 2:9 1பேது 2:19 |
| 21 | கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். | ஆதி 39:2 ஆதி 21:22 ஆதி 49:23 ஆதி 49:24 ஏசா 41:10 ஏசா 43:2 தானி 6:22 ரோம 8:31 ரோம 8:32 ரோம 8:37 1பேது 3:13 1பேது 3:14 1பேது 3:17 1பேது 4:14-16 |
| 22 | சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான். | ஆதி 39:4 ஆதி 39:6 ஆதி 39:7 ஆதி 39:9 ஆதி 40:3 ஆதி 40:4 1சாமு 2:30 சங் 37:3 சங் 37:11 |
| 23 | கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை. | ஆதி 40:3 ஆதி 40:4 |