| 1 | இந்த நடபடிகளுக்குப்பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள். | ஆதி 39:20-23 எஸ்தர் 6:1 |
| 2 | பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு, | சங் 76:10 நீதி 16:14 நீதி 19:12 நீதி 19:19 நீதி 27:4 அப் 12:20 |
| 3 | அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான். | ஆதி 39:20 ஆதி 39:23 |
| 4 | தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்து வந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள். | ஆதி 37:36 ஆதி 39:1 ஆதி 39:21-23 சங் 37:5 |
| 5 | எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள். | ஆதி 40:8 ஆதி 12:1-7 ஆதி 20:3 ஆதி 37:5-10 ஆதி 41:1-7 ஆதி 41:11-7 எண் 12:6 நியா 7:13 நியா 7:14 எஸ்தர் 6:1 யோபு 33:15-17 தானி 2:1-3 தானி 4:5 தானி 4:9 தானி 4:19 தானி 7:1-8 |
| 6 | காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள். | ஆதி 40:8 ஆதி 41:8 தானி 2:1-3 தானி 4:5 தானி 5:6 தானி 7:28 தானி 8:27 |
| 7 | அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான். | நியா 18:24 1சாமு 1:8 2சாமு 13:4 நெகே 2:2 லூக் 24:17 |
| 8 | அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான். | ஆதி 41:15 ஆதி 41:16 யோபு 33:15 யோபு 33:16 சங் 25:14 ஏசா 8:19 தானி 2:11 தானி 2:28 தானி 2:47 தானி 4:8 தானி 5:11-15 1கொரி 12:10 1கொரி 12:11 ஆமோ 3:7 |
| 9 | அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன். | ஆதி 37:5-10 நியா 7:13-15 தானி 2:31 தானி 4:8 தானி 4:10-18 |
| 10 | அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது. |
| 11 | பார்வோனுடைய பாத்திரம் என்கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான். | ஆதி 49:11 லேவி 10:9 நீதி 3:10 |
| 12 | அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம். | ஆதி 40:18 ஆதி 41:12 ஆதி 41:25 ஆதி 41:26 நியா 7:14 தானி 2:36-45 தானி 4:19-33 |
| 13 | மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்; | ஆதி 7:4 |
| 14 | இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். | 1சாமு 25:31 லூக் 23:42 1கொரி 7:21 |
| 15 | நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல்கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான். | ஆதி 37:28 யாத் 21:16 உபா 24:7 1தீமோ 1:10 |
| 16 | அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்; | ஆதி 40:1 ஆதி 40:2 |
| 17 | மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான். | ஆதி 49:20 1நாளா 12:20 |
| 18 | அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம். | ஆதி 40:12 ஆதி 41:26 1கொரி 10:4 1கொரி 11:24 |
| 19 | இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான். | ஆதி 40:22 ஆதி 41:13 உபா 21:22 உபா 21:23 யோசு 8:29 யோசு 10:26 2சாமு 21:6 நீதி 30:17 கலா 3:13 |
| 20 | மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி, | ஆதி 40:13 ஆதி 40:19 |
| 21 | பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான். | ஆதி 40:13 நெகே 2:1 |
| 22 | சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது. | ஆதி 40:8 ஆதி 40:19 ஆதி 41:11-13 ஆதி 41:16-13 எரே 23:28 தானி 2:19-23 தானி 2:30-23 தானி 5:12 அப் 5:30 |
| 23 | ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான். | யோபு 19:14 சங் 31:12 சங் 105:19 பிரச 9:15 பிரச 9:16 ஆமோ 6:6 |