| 1 | ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்ச வரலாறு: | ஆதி 22:17 ஆதி 25:24-34 ஆதி 27:35-41 ஆதி 32:3-7 எண் 20:14-21 உபா 23:7 1நாளா 1:35 ஏசா 63:1 எசே 25:12 |
| 2 | ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும், | ஆதி 9:25 ஆதி 26:34 ஆதி 26:35 ஆதி 27:46 |
| 3 | இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணியிருந்தான். | ஆதி 25:13 ஆதி 28:9 |
| 4 | ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள். | 1நாளா 1:35 |
| 5 | அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த குமாரர். | ஆதி 35:29 |
| 6 | ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப்போனான். | எசே 27:13 வெளிப் 18:13 |
| 7 | அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது. | ஆதி 13:6 ஆதி 13:11 |
| 8 | ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர். | ஆதி 36:20 ஆதி 14:6 ஆதி 32:3 உபா 2:5 யோசு 24:4 1நாளா 4:42 2நாளா 20:10 2நாளா 20:23 எசே 35:2-7 மல்கி 1:3 |
| 9 | சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும், | ஆதி 19:37 |
| 10 | ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர். | ஆதி 36:3 ஆதி 36:4 1நாளா 1:35-54 |
| 11 | எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். | ஆதி 36:15 ஆதி 36:16 1நாளா 1:35 1நாளா 1:36 |
| 12 | திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர். | ஆதி 36:22 1நாளா 1:36 |
| 13 | ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர். | ஆதி 36:17 1நாளா 1:37 |
| 14 | சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் புத்திரரை ஏசாவுக்குப் பெற்றாள். | ஆதி 36:2 ஆதி 36:5 ஆதி 36:18 1நாளா 1:35 |
| 15 | ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ, பிரபு, கேனாஸ் பிரபு, | ஆதி 36:18 1நாளா 1:35 |
| 16 | கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள். | யாத் 15:15 |
| 17 | ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள். | ஆதி 36:4 ஆதி 36:13 1நாளா 1:37 |
| 18 | ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள். | ஆதி 36:5 ஆதி 36:14 1நாளா 1:35 |
| 19 | இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள். |
| 20 | அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, | ஆதி 36:2 ஆதி 36:22-30 ஆதி 14:6 உபா 2:12 உபா 2:22 1நாளா 1:38-42 |
| 21 | திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திரராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள். |
| 22 | லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். | 1நாளா 1:39 |
| 23 | சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள். | 1நாளா 1:40 |
| 24 | சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான். | லேவி 19:19 உபா 2:10 2சாமு 13:29 2சாமு 18:9 1இரா 1:38 1இரா 1:44 1இரா 4:28 சகரி 14:15 |
| 25 | ஆனாகின் பிள்ளைகள், திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் குமாரத்தி. | ஆதி 36:2 ஆதி 36:5 ஆதி 36:14 ஆதி 36:18 1நாளா 1:41 |
| 26 | திஷோனுடைய குமாரர், எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். | 1நாளா 1:41 |
| 27 | ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள். | ஆதி 36:21 1நாளா 1:38 |
| 28 | திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள். | யோபு 1:1 எரே 25:20 புலம் 4:21 |
| 29 | ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள், லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு, | ஆதி 36:20 ஆதி 36:28 1நாளா 1:41 1நாளா 1:42 |
| 30 | திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள். | 2இரா 11:19 ஏசா 23:15 தானி 7:17 தானி 7:23 |
| 31 | இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன: | ஆதி 17:6 ஆதி 17:16 ஆதி 25:23 எண் 20:14 எண் 24:17 எண் 24:18 உபா 17:14-20 உபா 33:5 உபா 33:29 1நாளா 1:43-50 |
| 32 | பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர். |
| 33 | பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான். | ஏசா 34:6 ஏசா 63:1 எரே 49:13 எரே 49:22 ஆமோ 1:12 மீகா 2:12 |
| 34 | யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான். | ஆதி 36:11 ஆதி 36:15 யோபு 2:11 எரே 49:7 |
| 35 | உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர். |
| 36 | ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான். |
| 37 | சம்லா மரித்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். | ஆதி 10:11 1நாளா 1:48 |
| 38 | சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். |
| 39 | அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்துக்குப் பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள். | 1நாளா 1:50 |
| 40 | தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு, | ஆதி 36:31 1நாளா 1:51-54 |
| 41 | அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, |
| 42 | கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, |
| 43 | மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா. | ஆதி 36:15 ஆதி 36:18 ஆதி 36:19 ஆதி 36:30 ஆதி 36:31 யாத் 15:15 எண் 20:14 |