| 1 | தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார். | ஆதி 22:14 உபா 32:36 சங் 46:1 சங் 91:15 |
| 2 | அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். | ஆதி 18:19 யோசு 24:15 சங் 101:2-7 |
| 3 | நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான். | ஆதி 28:12 ஆதி 28:13 ஆதி 32:7 ஆதி 32:24 சங் 46:1 சங் 50:15 சங் 66:13 சங் 66:14 சங் 91:15 சங் 103:1-5 சங் 107:6 சங் 107:8 சங் 116:1 சங் 116:2 சங் 116:16-18 சங் 118:19-22 ஏசா 30:19 |
| 4 | அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான். | யாத் 32:2-4 நியா 8:24-27 ஓசி 2:13 |
| 5 | பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள். | ஆதி 34:30 யாத் 15:15 யாத் 15:16 யாத் 23:27 யாத் 34:24 உபா 11:25 யோசு 2:9-11 யோசு 5:1 1சாமு 11:7 1சாமு 14:15 2நாளா 14:14 2நாளா 17:10 சங் 14:5 |
| 6 | யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள். | ஆதி 12:8 ஆதி 28:19 ஆதி 28:22 நியா 1:22-26 |
| 7 | அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான். | ஆதி 35:1 ஆதி 35:3 பிரச 5:4 பிரச 5:5 |
| 8 | ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று. | ஆதி 24:59 |
| 9 | யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து: | ஆதி 12:7 ஆதி 17:1 ஆதி 18:1 ஆதி 26:2 ஆதி 28:13 ஆதி 31:3 ஆதி 31:11-13 ஆதி 32:1 ஆதி 32:24-30 ஆதி 35:1 ஆதி 46:2 ஆதி 46:3 ஆதி 48:3 ஆதி 48:4 எரே 31:3 ஓசி 12:4 அப் 7:2 |
| 10 | இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார். | ஆதி 17:5 ஆதி 17:15 ஆதி 32:27 ஆதி 32:28 1இரா 18:31 2இரா 17:34 |
| 11 | பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள். | ஆதி 17:1 ஆதி 18:14 ஆதி 43:14 ஆதி 48:3 ஆதி 48:4 யாத் 6:3 2கொரி 6:18 |
| 12 | நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி, | ஆதி 12:7 ஆதி 13:14-17 ஆதி 15:18 ஆதி 26:3 ஆதி 26:4 ஆதி 28:3 ஆதி 28:4 ஆதி 28:13 ஆதி 48:4 யாத் 3:8 யோசு 6:1-21 |
| 13 | தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார். | ஆதி 11:5 ஆதி 17:22 ஆதி 18:33 நியா 6:21 நியா 13:20 லூக் 24:31 |
| 14 | அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணையையும் வார்த்தான். | ஆதி 35:20 ஆதி 28:18 ஆதி 28:19 யாத் 17:15 1சாமு 7:12 |
| 15 | தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான். | ஆதி 28:19 |
| 16 | பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று. | 2இரா 5:19 |
| 17 | பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும் வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். | ஆதி 30:24 1சாமு 4:19-21 |
| 18 | மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான். | ஆதி 30:1 1சாமு 4:20 1சாமு 4:21 சங் 16:10 யாத் 12:7 புலம் 2:12 லூக் 12:20 லூக் 23:46 அப் 7:59 |
| 19 | ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் பண்ணப்பட்டாள். | ஆதி 48:7 |
| 20 | அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண். | ஆதி 35:9 ஆதி 35:14 1சாமு 10:2 2சாமு 18:17 2சாமு 18:18 |
| 21 | இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான். | மீகா 4:8 லூக் 2:8 |
| 22 | இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான். | ஆதி 49:4 லேவி 18:8 2சாமு 16:21 2சாமு 16:22 2சாமு 20:3 1நாளா 5:1 1கொரி 5:1 |
| 23 | யாக்கோபின் குமாரர் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர். | ஆதி 29:32-35 ஆதி 30:18-20 ஆதி 33:2 ஆதி 46:8-15 |
| 24 | யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர். | ஆதி 35:16-18 ஆதி 30:22-24 ஆதி 46:19-22 |
| 25 | தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர். | ஆதி 30:4-8 ஆதி 37:2 ஆதி 46:23-25 |
| 26 | காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர். | ஆதி 30:9-13 ஆதி 46:16-18 |
| 27 | பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர். | ஆதி 27:43-45 ஆதி 28:5 |
| 28 | ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து, | ஆதி 25:7 ஆதி 47:28 ஆதி 50:26 |
| 29 | பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள். | ஆதி 3:19 ஆதி 15:15 ஆதி 25:7 ஆதி 25:8 ஆதி 25:17 ஆதி 27:1 ஆதி 27:2 ஆதி 49:33 யோபு 5:26 பிரச 12:5-7 |