| 1 | யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். | ஆதி 17:8 ஆதி 23:4 ஆதி 28:4 ஆதி 36:7 எபிரெ 11:9-16 |
| 2 | யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். | ஆதி 2:4 ஆதி 5:1 ஆதி 6:9 ஆதி 10:1 |
| 3 | இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். | யோவா 3:35 யோவா 13:22 யோவா 13:23 |
| 4 | அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். | ஆதி 37:5 ஆதி 37:11 ஆதி 37:18-24 ஆதி 4:5 ஆதி 27:41 ஆதி 49:23 1சாமு 16:12 1சாமு 16:13 1சாமு 17:28 சங் 38:19 சங் 69:4 யோவா 7:3-5 யோவா 15:18 யோவா 15:19 தீத் 3:3 1யோவா 2:11 1யோவா 3:10 1யோவா 3:12 1யோவா 4:20 |
| 5 | யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். | ஆதி 28:12 ஆதி 40:5 ஆதி 41:1 ஆதி 42:9 எண் 12:6 நியா 7:13 நியா 7:14 1இரா 3:5 சங் 25:14 தானி 2:1 தானி 4:5 யோவே 2:28 ஆமோ 3:7 |
| 6 | அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்: | ஆதி 44:18 நியா 9:7 |
| 7 | நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான். | ஆதி 42:6 ஆதி 42:9 ஆதி 43:26 ஆதி 44:14 ஆதி 44:19 |
| 8 | அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். | ஆதி 37:4 யாத் 2:14 1சாமு 10:27 1சாமு 17:28 சங் 2:3-6 சங் 118:22 லூக் 19:14 லூக் 20:17 அப் 4:27 அப் 4:28 அப் 7:35 எபிரெ 10:29 |
| 9 | அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். | ஆதி 37:7 ஆதி 41:25 ஆதி 41:32 |
| 10 | இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்து கொண்டான். | ஆதி 27:29 ஏசா 60:14 பிலிப் 2:10 பிலிப் 2:11 |
| 11 | அவன் சகோதரர் அவன் மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான். | ஆதி 26:14-16 சங் 106:16 பிரச 4:4 ஏசா 11:13 ஏசா 26:11 மத் 27:18 மாற் 15:10 அப் 7:9 அப் 13:45 கலா 5:21 தீத் 3:3 யாக் 3:14-16 யாக் 4:5 |
| 12 | பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள். | ஆதி 37:1 ஆதி 33:18 ஆதி 34:25-31 |
| 13 | அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான். | 1சாமு 17:17-20 மத் 10:16 லூக் 20:13 |
| 14 | அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான். | ஆதி 29:6 ஆதி 41:16 1சாமு 17:17 1சாமு 17:18 2சாமு 18:32 1இரா 2:33 சங் 125:5 எரே 29:7 லூக் 19:42 |
| 15 | அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான். | ஆதி 21:14 |
| 16 | அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான். | லூக் 19:10 |
| 17 | அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான். | 2இரா 6:13 |
| 18 | அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி, | 1சாமு 19:1 சங் 31:13 சங் 37:12 சங் 37:32 சங் 94:21 சங் 105:25 சங் 109:4 மத் 21:38 மத் 27:1 மாற் 12:7 மாற் 14:1 லூக் 20:14 லூக் 20:15 யோவா 11:53 அப் 23:12 |
| 19 | ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான், | ஆதி 37:5 ஆதி 37:11 ஆதி 28:12 ஆதி 49:23 |
| 20 | நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள். | சங் 64:5 நீதி 1:11 நீதி 1:12 நீதி 1:16 நீதி 6:17 நீதி 27:4 தீத் 3:3 யோவா 3:12 |
| 21 | ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய், | ஆதி 35:22 ஆதி 42:22 |
| 22 | அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான். | ஆதி 42:22 |
| 23 | யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, | ஆதி 37:3 ஆதி 37:31-33 ஆதி 42:21 சங் 22:18 மத் 27:28 |
| 24 | அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. | சங் 35:7 புலம் 4:20 |
| 25 | பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். | எஸ்தர் 3:15 சங் 14:4 நீதி 30:20 ஆமோ 6:6 |
| 26 | அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? | ஆதி 25:32 சங் 30:9 எரே 41:8 மத் 16:26 ரோம 6:21 |
| 27 | அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள். | ஆதி 37:22 யாத் 21:16 யாத் 21:21 நெகே 5:8 மத் 16:26 மத் 26:15 1தீமோ 1:10 வெளிப் 18:13 |
| 28 | அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். | ஆதி 37:25 ஆதி 25:2 யாத் 2:16 எண் 25:15 எண் 25:17 எண் 31:2 எண் 31:3 எண் 31:8 எண் 31:9 நியா 6:1-3 சங் 83:9 ஏசா 60:6 |
| 29 | பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, | ஆதி 37:34 ஆதி 34:13 எண் 14:6 நியா 11:35 2இரா 19:1 யோபு 1:20 யோவே 2:13 அப் 14:14 |
| 30 | தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான். | ஆதி 37:20 ஆதி 42:13 ஆதி 42:32 ஆதி 42:35 எரே 31:15 |
| 31 | அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து, | ஆதி 37:3 ஆதி 37:23 நீதி 28:13 |
| 32 | பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள். | ஆதி 37:3 ஆதி 44:20-23 லூக் 15:30 |
| 33 | யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான் என்று புலம்பி, | ஆதி 37:20 ஆதி 44:28 1இரா 13:24 2இரா 2:24 நீதி 14:15 யோவா 13:7 |
| 34 | தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். | ஆதி 37:29 யோசு 7:6 2சாமு 1:11 2சாமு 3:31 1இரா 20:31 1இரா 21:27 2இரா 19:1 1நாளா 21:16 எஸ்றா 9:3-5 நெகே 9:1 எஸ்தர் 4:1-3 யோபு 1:20 யோபு 2:12 சங் 69:11 ஏசா 22:12 ஏசா 22:13 ஏசா 32:11 ஏசா 36:22 ஏசா 37:1 ஏசா 37:2 எரே 36:24 யோவே 2:13 யோனா 3:5-8 மத் 11:21 மத் 26:65 அப் 14:14 வெளிப் 11:3 |
| 35 | அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். | ஆதி 31:43 ஆதி 35:22-26 |
| 36 | அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். | ஆதி 37:28 ஆதி 25:1 ஆதி 25:2 ஆதி 39:1 |