| 1 | மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது: | 2யோவா 1:1 |
| 2 | பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். | யாக் 5:12 1பேது 4:8 |
| 3 | சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். | 3யோவா 1:4 2யோவா 1:4 பிலிப் 1:4 1தெச 2:19 1தெச 2:20 |
| 4 | என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. | நீதி 23:24 |
| 5 | பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய். | மத் 24:45 லூக் 12:42 லூக் 16:10-12 2கொரி 4:1-3 கொலோ 3:17 1பேது 4:10 1பேது 4:11 |
| 6 | அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும். | 3யோவா 1:12 பிலேமோ 1:5-7 |
| 7 | ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள். | அப் 8:4 அப் 9:16 2கொரி 4:5 கொலோ 1:24 வெளிப் 2:3 |
| 8 | ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம். | 3யோவா 1:10 மத் 10:14 மத் 10:40 லூக் 11:7 2கொரி 7:2 2கொரி 7:3 |
| 9 | நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. | மத் 20:20-28 மத் 23:4-8 மாற் 9:34 மாற் 10:35-45 லூக் 22:24-27 ரோம 12:10 பிலிப் 2:3-5 தீத் 1:7-16 |
| 10 | ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பேதள்ளுகிறான். | 1கொரி 5:1-5 2கொரி 10:1-11 2கொரி 13:2 |
| 11 | பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை. | யாத் 23:2 சங் 37:27 நீதி 12:11 ஏசா 1:16 ஏசா 1:17 யோவா 10:27 யோவா 12:26 1கொரி 4:16 1கொரி 11:1 எபே 5:1 பிலிப் 3:17 1தெச 1:6 1தெச 2:14 2தீமோ 3:10 எபிரெ 6:12 1பேது 3:13 |
| 12 | தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள். | அப் 10:22 அப் 22:12 1தெச 4:12 1தீமோ 3:7 |
| 13 | எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை. | 2யோவா 1:12 |
| 14 | சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய்ப் பேசிக்கொள்ளுவோம். உனக்கு சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக. | ஆதி 43:23 தானி 4:1 கலா 5:16 எபே 6:23 1பேது 5:14 |