| 1 | தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது: | ஆதி 27:4 ஆதி 27:27-29 ஆதி 49:1 ஆதி 49:28 லூக் 24:50 லூக் 24:51 யோவா 14:27 யோவா 16:33 |
| 2 | கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது. | யாத் 19:18-20 நியா 5:4 நியா 5:5 ஆபகூ 3:3 |
| 3 | மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள். | உபா 7:7 உபா 7:8 யாத் 19:5 யாத் 19:6 சங் 47:4 சங் 147:19 சங் 147:20 எரே 31:3 ஓசி 11:1 மல்கி 1:2 ரோம 9:11-13 எபே 2:4 எபே 2:5 1யோவா 4:19 |
| 4 | மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; அது யாக்கோபின் சபைக்குச் சுதந்தரமாயிற்று. | யோவா 1:17 யோவா 7:19 |
| 5 | ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார். | ஆதி 36:31 யாத் 18:16 யாத் 18:19 எண் 16:13-15 நியா 8:22 நியா 9:2 நியா 17:6 |
| 6 | ரூபன் சாவாமல் பிழைப்பானாக; அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான். | ஆதி 49:3 ஆதி 49:4 ஆதி 49:8 எண் 32:31 எண் 32:32 யோசு 22:1-9 |
| 7 | அவன் யூதாவைக்குறித்து: கர்த்தாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, அவன் தன் ஜனத்தோடே திரும்பச்சேரப்பண்ணும்; அவன் கை பலக்கக்கடவது; அவனுடைய சத்துருக்களுக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயராயிருப்பீராக என்றான். | ஆதி 49:8-12 நியா 1:1-7 சங் 78:68 சங் 78:70 மீகா 5:2 மல்கி 3:1 எபிரெ 7:14 |
| 8 | லேவியரைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக. | யாத் 28:30 யாத் 28:36 லேவி 8:8 எண் 27:21 1சாமு 28:6 எஸ்றா 2:63 நெகே 7:65 |
| 9 | தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நீ உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள். | யாத் 32:25-29 லேவி 10:6 லேவி 21:11 மத் 10:37 மத் 12:48 மத் 22:16 லூக் 14:26 2கொரி 5:16 கலா 1:10 1தெச 2:4 1தீமோ 5:21 |
| 10 | அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும், இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் போதித்து, உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும், உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளையும் இடுவார்கள். | உபா 17:9-11 உபா 24:8 லேவி 10:11 2நாளா 17:8-10 2நாளா 30:22 நெகே 8:1-9 நெகே 8:13-15 நெகே 8:18-15 எசே 44:23 எசே 44:24 ஓசி 4:6 மல்கி 2:6-8 மத் 23:2 மத் 23:3 யோவா 21:15 யோவா 21:16 |
| 11 | கர்த்தாவே, அவன் சம்பத்தை ஆசீர்வதித்து, அவன் கைக்கிரியையின்மேல் பிரியமாயிரும்; அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திராதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும் என்றான். | உபா 18:1-5 எண் 18:8-20 எண் 35:2-8 |
| 12 | பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான். | உபா 33:27-29 யோசு 18:11-28 நியா 1:21 1இரா 12:21 2நாளா 11:1 2நாளா 15:2 2நாளா 17:17-19 சங் 132:14 ஏசா 37:22 ஏசா 37:35 |
| 13 | யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும், | ஆதி 48:5 ஆதி 48:9 ஆதி 48:15-20 ஆதி 49:22-26 |
| 14 | சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும், | உபா 28:8 லேவி 26:4 2சாமு 23:4 சங் 65:9-13 சங் 74:16 சங் 84:11 மல்கி 4:2 மத் 5:45 அப் 14:17 1தீமோ 6:17 |
| 15 | ஆதிபர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும், நித்திய மலைகளில் பிறக்கும் அரும்பொருள்களினாலும், | ஆதி 49:26 ஆபகூ 3:6 யாக் 5:7 |
| 16 | நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. | சங் 24:1 சங் 50:12 சங் 89:11 எரே 8:16 1கொரி 10:26 1கொரி 10:28 |
| 17 | அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே ஜனங்களை ஏகமாய் தேசத்தின் கடையாந்தரங்கள் மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான். | 1நாளா 5:1 |
| 18 | செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு. | ஆதி 49:13-15 யோசு 19:11 நியா 5:14 |
| 19 | ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான். | ஏசா 2:3 எரே 50:4 எரே 50:5 மீகா 4:2 |
| 20 | காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான். | ஆதி 9:26 ஆதி 9:27 யோசு 13:8 யோசு 13:10 யோசு 13:24-28 1நாளா 4:10 1நாளா 12:8 1நாளா 12:37 1நாளா 12:38 சங் 18:19 சங் 18:36 |
| 21 | அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் ஜனத்தின் முன்னணியாய் வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் நடப்பிப்பான் என்றான். | எண் 32:1-6 எண் 32:16-6 எண் 32:17-42 |
| 22 | தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான். | ஆதி 49:16 ஆதி 49:17 யோசு 19:47 நியா 13:2 நியா 13:24 நியா 13:25 நியா 14:6 நியா 14:19 நியா 15:8 நியா 15:15 நியா 16:30 நியா 18:27 1நாளா 12:35 |
| 23 | நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான். | ஆதி 49:21 சங் 36:8 சங் 90:14 ஏசா 9:1 ஏசா 9:2 எரே 31:14 மத் 4:13 மத் 4:16 மத் 11:28 |
| 24 | ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திர பாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான். | ஆதி 49:20 சங் 115:15 சங் 128:3 சங் 128:6 |
| 25 | இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான். | உபா 8:9 லூக் 15:22 எபே 6:15 |
| 26 | யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். | யாத் 15:11 சங் 86:8 ஏசா 40:18 ஏசா 40:25 ஏசா 43:11-13 ஏசா 66:8 எரே 10:6 |
| 27 | அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். | 1சாமு 15:29 சங் 90:1 சங் 90:2 சங் 102:24 ஏசா 9:6 ஏசா 25:4 ஏசா 57:15 எரே 10:10 மீகா 5:2 1தீமோ 1:17 எபிரெ 9:14 |
| 28 | இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும். | யாத் 33:16 எண் 23:9 எரே 23:6 எரே 33:16 எசே 34:25 வெளிப் 21:27 வெளிப் 22:14 வெளிப் 22:15 |
| 29 | இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான். | உபா 4:7 உபா 4:8 எண் 23:20-24 எண் 24:5 2சாமு 7:23 சங் 33:12 சங் 144:15 |