| 1 | ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். | உபா 21:15 உபா 22:13 யாத் 21:10 |
| 2 | அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம். | லேவி 21:7 லேவி 21:14 லேவி 22:13 எண் 30:9 எசே 44:22 மத் 5:32 மாற் 10:11 1கொரி 7:15 |
| 3 | அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும், |
| 4 | அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக. | எரே 3:1 |
| 5 | ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக. | உபா 20:7 ஆதி 2:24 மத் 19:4-6 மாற் 10:6-9 1கொரி 7:10-15 எபே 5:28 எபே 5:29 தீத் 2:4 தீத் 2:5 |
| 6 | திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகுவாங்குவதுபோலாகும். | யாத் 22:26 யாத் 22:27 வெளிப் 18:22 |
| 7 | தன் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயந்தேடி, அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். | யாத் 21:16 எசே 27:13 1தீமோ 1:10 வெளிப் 18:13 |
| 8 | குஷ்டரோகத்தைக்குறித்து லேவியராகிய ஆசாரியர் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக. | லேவி 13:1-14 மத் 8:4 மாற் 1:44 லூக் 5:14 லூக் 17:14 |
| 9 | நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள். | லூக் 17:32 1கொரி 10:6 1கொரி 10:11 |
| 10 | பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம். | உபா 15:8 |
| 11 | வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக. |
| 12 | அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரை செய்யாமல், | உபா 24:17 யோபு 22:6 யோபு 24:3 யோபு 24:9 |
| 13 | அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்து விடவேண்டும்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும். | யாத் 22:26 யாத் 22:27 யோபு 24:7 யோபு 24:8 யோபு 29:11-13 யோபு 31:16-20 எசே 18:7 எசே 18:12 எசே 18:16 எசே 33:15 ஆமோ 2:8 2தீமோ 1:16-18 |
| 14 | உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. | லேவி 25:40-43 யோபு 24:10 யோபு 24:11 யோபு 31:13-15 நீதி 14:31 நீதி 22:16 எசே 22:7 ஆமோ 2:7 ஆமோ 4:1 ஆமோ 8:4 மல்கி 3:5 லூக் 10:7 |
| 15 | அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும். | லேவி 19:13 நீதி 3:27 நீதி 3:28 எரே 22:13 மத் 20:8 மாற் 10:19 யாக் 5:4 |
| 16 | பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும். | 2இரா 14:5 2இரா 14:6 2நாளா 25:4 எரே 31:29 எரே 31:30 எசே 18:20 |
| 17 | நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் வஸ்திரத்தை அடகாக வாங்காமலும் இருந்து, | உபா 16:19 உபா 27:19 யாத் 22:21 யாத் 22:22 யாத் 23:2 யாத் 23:6 யாத் 23:9 1சாமு 12:3 1சாமு 12:4 யோபு 22:8 யோபு 22:9 யோபு 29:11-17 சங் 82:1-5 சங் 94:3-6 சங் 94:20-6 சங் 94:21-6 நீதி 22:22 நீதி 22:23 நீதி 31:5 பிரச 5:8 ஏசா 1:23 ஏசா 3:15 ஏசா 33:15 எரே 5:28 எரே 22:3 எசே 22:7 எசே 22:29 ஆமோ 5:7-12 மீகா 2:1 மீகா 2:2 மீகா 7:3 சகரி 7:10 மல்கி 3:5 லூக் 3:14 யாக் 2:6 |
| 18 | நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். | உபா 24:22 உபா 5:15 உபா 15:15 உபா 16:12 |
| 19 | நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்து வந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைகளுக்கும் விட்டுவிடுவாயாக. | லேவி 19:9 லேவி 19:10 லேவி 23:22 ரூத் 2:16 சங் 41:1 |
| 20 | நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்து விட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக; |
| 21 | நீ உன் திராட்சப்பழங்களை அறுத்த பின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக. | உபா 24:19 லேவி 19:9 லேவி 19:10 |
| 22 | நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். | உபா 24:18 உபா 5:14 உபா 5:15 உபா 7:8 ஏசா 51:1 2கொரி 8:8 2கொரி 8:9 எபே 5:1 எபே 5:2 1யோவா 4:10 1யோவா 4:11 |