| 1 | லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக. | உபா 10:9 உபா 12:19 எண் 18:20 எண் 26:62 யோசு 13:33 யோசு 18:7 1பேது 5:2-4 |
| 2 | அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம். | ஆதி 15:1 சங் 16:5 சங் 73:24-26 சங் 84:11 சங் 119:57 ஏசா 61:6 புலம் 3:24 1பேது 2:5 1பேது 2:9 வெளிப் 1:5 வெளிப் 1:6 |
| 3 | ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். | உபா 12:27 லேவி 7:30-34 |
| 4 | உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும். | உபா 26:9 உபா 26:10 யாத் 22:29 யாத் 23:19 லேவி 23:10 லேவி 23:17 எண் 18:12-24 2நாளா 31:4-10 நெகே 12:44-47 |
| 5 | அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார். | உபா 10:8 உபா 17:12 யாத் 28:1-14 எண் 3:10 எண் 16:5 எண் 16:9 எண் 16:10 எண் 17:5-9 எண் 25:13 |
| 6 | இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வந்தால், | எண் 35:2 எண் 35:3 |
| 7 | அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான். | 2நாளா 31:2-4 |
| 8 | அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிதாக்களுடைய ஆஸ்தியின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காகச் சமமானபாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள். | லேவி 7:8 லேவி 7:9 லேவி 7:14 நெகே 12:44 நெகே 12:47 லூக் 10:7 1கொரி 9:7-14 1தீமோ 5:17 1தீமோ 5:18 |
| 9 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும்போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். | உபா 12:29-31 லேவி 18:26 லேவி 18:27 லேவி 18:30 |
| 10 | தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம்பார்க்கிறவனும், சூனியக்காரனும், | உபா 12:31 லேவி 18:21-30 லேவி 20:2-5 2இரா 16:3 2இரா 17:17 2இரா 21:6 2நாளா 28:3 சங் 106:37 சங் 106:38 எரே 19:4-6 எரே 32:35 |
| 11 | மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். | 1சாமு 28:11-14 |
| 12 | இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். | உபா 9:4 லேவி 18:24 லேவி 18:27 |
| 13 | உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய். | ஆதி 6:9 ஆதி 17:1 யோபு 1:1 யோபு 1:8 சங் 37:37 மத் 5:48 பிலிப் 3:12 பிலிப் 3:15 வெளிப் 3:2 |
| 14 | நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார். | உபா 18:10 ஆதி 20:6 சங் 147:19 சங் 147:20 அப் 14:16 |
| 15 | உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. | உபா 18:18 உபா 18:19 யோவா 1:45 அப் 3:22 அப் 3:23 அப் 7:37 |
| 16 | ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார். | உபா 9:10 |
| 17 | அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே. | உபா 5:28 |
| 18 | உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். | உபா 18:15 யோவா 1:45 |
| 19 | என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். | மாற் 16:16 அப் 3:22 அப் 3:23 எபிரெ 2:3 எபிரெ 3:7 எபிரெ 10:26 எபிரெ 12:25 எபிரெ 12:26 |
| 20 | சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். | உபா 13:1-5 எரே 14:14 எரே 14:15 எரே 23:13-15 எரே 23:31-15 எரே 27:15 எசே 13:6 மத் 7:15 2பேது 2:12 |
| 21 | கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், | 1தெச 5:24 1யோவா 4:1-3 வெளிப் 2:2 |
| 22 | ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம். | ஏசா 41:22 எரே 28:1-14 |