| 1 | ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக. | உபா 31:10 யாத் 21:2 யாத் 23:10 யாத் 23:11 லேவி 25:2-4 ஏசா 61:1-3 எரே 36:8-18 லூக் 4:18 லூக் 4:19 |
| 2 | விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன். | நெகே 5:7-11 ஏசா 58:3 ஆமோ 8:4-6 மத் 6:12 மத் 6:14 மத் 6:15 மத் 18:25-35 லூக் 6:34-38 லூக் 7:42 யாக் 2:13 |
| 3 | அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது. | உபா 23:20 யாத் 22:25 மத் 17:25 மத் 17:26 யோவா 8:35 1கொரி 6:6 1கொரி 6:7 கலா 6:10 |
| 4 | எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்., | உபா 14:29 உபா 28:1-8 உபா 28:11-8 நீதி 11:24 நீதி 11:25 நீதி 14:21 நீதி 28:27 ஏசா 58:10 ஏசா 58:11 |
| 5 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார். | உபா 4:9 உபா 11:13-15 உபா 28:1-15 லேவி 26:3-14 யோசு 1:7 சங் 19:11 ஏசா 1:19 ஏசா 1:20 பிலிப் 1:27 |
| 6 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை. | உபா 28:12 உபா 28:44 சங் 37:21 சங் 37:26 சங் 112:5 நீதி 22:7 லூக் 6:35 |
| 7 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், | உபா 15:9 நீதி 21:13 மத் 18:30 யாக் 2:15 யாக் 2:16 1யோவா 3:16 1யோவா 3:17 |
| 8 | அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக. |
| 9 | விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். | நீதி 4:23 எரே 17:10 மத் 15:19 மாற் 7:21 மாற் 7:22 ரோம 7:8 ரோம 7:9 யாக் 4:5 |
| 10 | அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். | மத் 25:40 அப் 20:35 ரோம 12:8 2கொரி 9:5-7 1தீமோ 6:18 1தீமோ 6:19 1பேது 4:11 |
| 11 | தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். | நீதி 22:2 மத் 26:11 மாற் 14:7 யோவா 12:8 |
| 12 | உன் சதோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடுவாயாக. | உபா 15:1 யாத் 21:2-6 லேவி 25:39-41 எரே 34:14 யோவா 8:35 யோவா 8:36 |
| 13 | அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல், | ஆதி 31:42 யாத் 3:21 லேவி 25:42-44 நீதி 3:27 நீதி 3:28 எரே 22:13 மல்கி 3:5 கொலோ 4:1 |
| 14 | உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக. | நெகே 8:10 சங் 68:10 நீதி 10:22 அப் 20:35 1கொரி 16:2 |
| 15 | நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவு கூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன். | உபா 5:14 உபா 5:15 உபா 16:12 யாத் 20:2 ஏசா 51:1 மத் 6:14 மத் 6:15 மத் 18:32 மத் 18:33 எபே 1:7 எபே 2:12 எபே 4:32 எபே 5:1 எபே 5:2 தீத் 2:14 1யோவா 3:16 1யோவா 4:9-11 |
| 16 | ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில், | யாத் 21:5 யாத் 21:6 சங் 40:6 சங் 40:8 |
| 17 | நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய். | லேவி 25:39-42 1சாமு 1:22 |
| 18 | அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார். | ஏசா 16:14 ஏசா 21:16 லூக் 17:7 லூக் 17:8 |
| 19 | உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலை கொள்ளாமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரியாமலும் இருப்பாயாக. | யாத் 13:2 யாத் 13:12 யாத் 34:19 லேவி 27:26 எண் 3:13 எண் 18:17 ரோம 8:29 எபிரெ 12:23 |
| 20 | கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள். | உபா 12:5-7 உபா 12:17-7 |
| 21 | அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிட வேண்டாம். | உபா 17:1 லேவி 22:20 லேவி 22:24 மல்கி 1:7 மல்கி 1:8 |
| 22 | அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும், வெளிமானையும், புசிப்பதுபோலப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப்புசிக்கலாம். | உபா 12:15 உபா 12:21 உபா 12:22 |
| 23 | அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய். | உபா 12:16 உபா 12:23 லேவி 7:26 1சாமு 14:32 எசே 33:25 |