இணை வசன வேதாகமம்

Click to Subscribe

மல்கியா 4

                   
புத்தகங்களைக் காட்டு
1இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.மல்கி 4:5 மல்கி 3:2 எசே 7:10 யோவே 2:1 யோவே 2:31 செப் 1:14 சகரி 14:1 லூக் 19:43 லூக் 21:20 2பேது 3:7
2ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.மல்கி 3:16 சங் 85:9 ஏசா 50:10 ஏசா 66:1 ஏசா 66:2 லூக் 1:50 அப் 13:26 வெளிப் 11:18
3துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.ஆதி 3:15 யோசு 10:24 யோசு 10:25 2சாமு 22:43 யோபு 40:12 சங் 91:13 ஏசா 25:10 ஏசா 26:6 ஏசா 63:3-6 தானி 7:18 தானி 7:27 மீகா 5:8 மீகா 7:10 சகரி 10:5 ரோம 16:20 வெளிப் 11:15 வெளிப் 14:20
4ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.யாத் 20:3-21 உபா 4:5 உபா 4:6 சங் 147:19 சங் 147:20 ஏசா 8:20 ஏசா 42:21 மத் 5:17-20 மத் 19:16-22 மத் 22:36-40 மாற் 12:28-34 லூக் 10:25-28 லூக் 16:29-31 யோவா 5:39-47 ரோம 3:31 ரோம 13:1-10 கலா 5:13 கலா 5:14 கலா 5:24 கலா 5:25 யாக் 2:9-13
5இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.மல்கி 3:1 ஏசா 40:3 மத் 11:13 மத் 11:14 மத் 17:10-13 மத் 27:47-49 மாற் 9:11-13 லூக் 1:17 லூக் 7:26-28 லூக் 9:30 யோவா 1:21 யோவா 1:25
6நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.லூக் 1:16 லூக் 1:17 லூக் 1:76
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.