| 1 | இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். | ஏசா 2:12 ஏசா 13:6 ஏசா 13:9 யோவே 2:31 யோவே 3:14 மல்கி 4:5 அப் 2:20 வெளிப் 16:14 |
| 2 | எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. | உபா 28:9-14 ஏசா 5:26 எரே 34:1 தானி 2:40-43 யோவே 3:2 மத் 22:7 லூக் 2:1 |
| 3 | கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். | சகரி 2:8 சகரி 2:9 சகரி 10:4 சகரி 10:5 சகரி 12:2-6 சகரி 12:9-6 ஏசா 63:1-6 ஏசா 66:15 ஏசா 66:16 தானி 2:34 தானி 2:35 தானி 2:44 தானி 2:45 யோவே 3:2 யோவே 3:9-17 செப் 3:19 ஆகா 2:21 ஆகா 2:22 வெளிப் 6:4-17 வெளிப் 8:7-13 |
| 4 | அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். | சகரி 14:7 எசே 11:23 எசே 43:2 அப் 1:11 அப் 1:12 |
| 5 | அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். | எண் 16:34 வெளிப் 11:13 வெளிப் 16:18-21 |
| 6 | அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும். | சங் 97:10 சங் 97:11 சங் 112:4 நீதி 4:18 நீதி 4:19 ஏசா 50:10 ஏசா 60:1-3 ஓசி 6:3 லூக் 1:78 லூக் 1:79 யோவா 1:5 யோவா 12:46 எபே 5:8-14 கொலோ 1:12 2பேது 1:19 வெளிப் 11:3 வெளிப் 11:15 |
| 7 | ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். | வெளிப் 21:23 வெளிப் 22:5 |
| 8 | அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும். | எசே 47:1-12 யோவே 3:18 லூக் 24:47 யோவா 4:10 யோவா 4:14 யோவா 7:38 வெளிப் 22:1 வெளிப் 22:2 வெளிப் 22:17 |
| 9 | அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். | சகரி 8:20-23 ஆதி 49:10 1சாமு 2:10 சங் 2:6-8 சங் 22:27-31 சங் 47:2-9 சங் 67:4 சங் 72:8-11 சங் 72:17-11 சங் 86:9 ஏசா 2:2-4 ஏசா 45:22-25 ஏசா 49:6 ஏசா 49:7 ஏசா 54:5 ஏசா 60:12-14 தானி 2:44 தானி 2:45 தானி 7:27 ஆமோ 9:12 மீகா 4:1-3 மீகா 5:4 செப் 3:9 வெளிப் 11:15 |
| 10 | தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும். | சகரி 4:6 சகரி 4:7 ஏசா 40:3 ஏசா 40:4 லூக் 3:4-6 |
| 11 | அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும். | எண் 21:3 ஏசா 60:18 எரே 31:40 எசே 37:26 யோவே 3:17 யோவே 3:20 ஆமோ 9:15 வெளிப் 21:4 வெளிப் 22:3 |
| 12 | எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும். | சகரி 14:3 சகரி 12:9 சங் 110:5 சங் 110:6 ஏசா 34:1-17 ஏசா 66:15 ஏசா 66:16 எசே 38:18-22 எசே 39:4-6 எசே 39:17-20 யோவே 3:1 யோவே 3:2 மீகா 4:11-13 மீகா 5:8 மீகா 5:9 மீகா 7:16 மீகா 7:17 வெளிப் 16:1-21 வெளிப் 19:17-21 |
| 13 | அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும். | சகரி 12:4 நியா 7:22 1சாமு 14:15-23 2நாளா 20:22-24 எசே 38:21 வெளிப் 17:12-17 |
| 14 | யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும். | சகரி 10:4 சகரி 10:5 சகரி 12:5-7 |
| 15 | அந்தப்பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும். |
| 16 | பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள். | சகரி 8:20-23 சகரி 9:7 ஏசா 60:6-9 ஏசா 66:18-21 ஏசா 66:23-21 யோவே 2:32 அப் 15:17 ரோம 9:23 ரோம 9:24 ரோம 11:5 ரோம 11:16 ரோம 11:26 வெளிப் 11:13 வெளிப் 11:15-17 |
| 17 | அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை. | சங் 2:8-12 சங் 110:5 சங் 110:6 ஏசா 45:23 ஏசா 60:12 எரே 10:25 ரோம 14:10 ரோம 14:11 |
| 18 | மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும்வரும். | உபா 11:10 உபா 11:11 |
| 19 | இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை. | யோவா 3:19 |
| 20 | அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும். | நீதி 21:3 நீதி 21:4 ஏசா 23:18 ஒபதி 1:17 செப் 2:11 மல்கி 1:11 லூக் 11:41 அப் 10:15 அப் 10:28 அப் 11:9 அப் 15:9 ரோம 14:17 ரோம 14:18 கொலோ 3:17 கொலோ 3:22-24 தீத் 1:15 தீத் 1:16 1பேது 4:11 |
| 21 | அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை. | சகரி 7:6 உபா 12:7 உபா 12:12 நெகே 8:10 ரோம 14:6 ரோம 14:7 1கொரி 10:31 1தீமோ 4:3-5 |