| 1 | யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை. | மீகா 1:14 மீகா 1:15 எரே 26:18 |
| 2 | சகல ஜனங்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார். | மீகா 6:1 மீகா 6:2 உபா 32:1 சங் 49:1 சங் 49:2 சங் 50:1 ஏசா 1:2 எரே 22:29 மாற் 7:14-16 வெளிப் 2:7 வெளிப் 2:11 வெளிப் 2:17 வெளிப் 2:29 வெளிப் 3:6 வெளிப் 3:13 வெளிப் 3:22 |
| 3 | இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார். | ஏசா 26:21 ஏசா 64:1 ஏசா 64:2 எசே 3:12 ஓசி 5:14 ஓசி 5:15 |
| 4 | மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். | நியா 5:4 சங் 97:5 ஏசா 64:1-3 ஆமோ 9:5 நாகூ 1:5 ஆபகூ 3:6 ஆபகூ 3:10 2பேது 3:10-12 வெளிப் 20:11 |
| 5 | இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ? | 2இரா 17:7-23 2நாளா 36:14-16 ஏசா 50:1 ஏசா 50:2 ஏசா 59:1-15 எரே 2:17 எரே 2:19 எரே 4:18 எரே 5:25 எரே 6:19 புலம் 5:16 1தெச 2:15 1தெச 2:16 |
| 6 | ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழப்பண்ணி, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன். | மீகா 3:12 2இரா 19:25 ஏசா 25:2 ஏசா 25:12 எரே 9:11 எரே 51:37 ஓசி 13:16 |
| 7 | அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப்போகும். | லேவி 26:30 2இரா 23:14 2இரா 23:15 2நாளா 31:1 2நாளா 34:6 2நாளா 34:7 ஏசா 27:9 ஓசி 8:6 ஓசி 10:5 ஓசி 10:6 |
| 8 | இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன். | ஏசா 16:9 ஏசா 21:3 ஏசா 22:4 எரே 4:19 எரே 9:1 எரே 9:10 எரே 9:19 எரே 48:36-39 |
| 9 | அதின் காயம் ஆறாதது; அது யூதா மட்டும் வந்தது: என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது. | ஏசா 1:5 ஏசா 1:6 எரே 15:18 எரே 30:11-15 |
| 10 | அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு. | 2சாமு 1:20 ஆமோ 5:13 ஆமோ 6:10 |
| 11 | சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது. | ஏசா 16:2 எரே 48:6 எரே 48:9 |
| 12 | மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது. | ரூத் 1:20 |
| 13 | லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது. | யோசு 15:39 2இரா 18:13 2இரா 18:14 2இரா 18:17 2நாளா 11:9 2நாளா 32:9 ஏசா 37:8 |
| 14 | ஆகையால் மோர்ஷேக்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும். | 2சாமு 8:2 2இரா 16:8 2இரா 18:14-16 2நாளா 16:1-3 ஏசா 30:6 |
| 15 | மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான். | ஏசா 7:17-25 ஏசா 10:5 ஏசா 10:6 எரே 49:1 |
| 16 | உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள். | யோபு 1:20 ஏசா 15:2 ஏசா 22:12 எரே 6:26 எரே 7:29 எரே 16:6 ஆமோ 8:10 |