1அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:2நாளா 33:11-13 சங் 50:15 சங் 91:15 ஏசா 26:16 ஓசி 5:15 ஓசி 6:1-3 யாக் 5:13 2என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.ஆதி 32:7-12 ஆதி 32:24-28 1சாமு 30:6 சங் 4:1 சங் 18:4-6 சங் 22:24 சங் 34:6 சங் 65:2 சங் 120:1 சங் 142:1-3 லூக் 22:44 எபிரெ 5:7 3சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.யோனா 1:12-16 சங் 69:1 சங் 69:2 சங் 69:14 சங் 69:15 சங் 88:5-8 புலம் 3:54 4நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.சங் 31:22 சங் 77:1-7 ஏசா 38:10-14 ஏசா 38:17-14 ஏசா 49:14 எசே 37:11 5தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.சங் 40:2 சங் 69:1 சங் 69:2 புலம் 3:54 6பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.உபா 32:22 சங் 65:6 சங் 104:6 சங் 104:8 ஏசா 40:12 ஆபகூ 3:6 ஆபகூ 3:10 7என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.சங் 22:14 சங் 27:13 சங் 119:81-83 எபிரெ 12:3 8பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.1சாமு 12:21 2இரா 17:15 சங் 31:6 எரே 2:13 எரே 10:8 எரே 10:14 எரே 10:15 எரே 16:19 ஆபகூ 2:18-20 9நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.ஆதி 35:3 சங் 50:14 சங் 50:23 சங் 66:13-15 சங் 107:22 சங் 116:17 சங் 116:18 எரே 33:11 ஓசி 14:2 ரோம 12:1 எபிரெ 13:15 10கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.யோனா 1:17 ஆதி 1:3 ஆதி 1:7 ஆதி 1:9 ஆதி 1:11 ஆதி 1:14 சங் 33:9 சங் 105:31 சங் 105:34 ஏசா 50:2 மத் 8:8 மத் 8:9 மத் 8:26 மத் 8:27