| 1 | சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களும் சமாரியாவின் பர்வதத்தை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும், ஜாதிகளின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ! | நியா 18:7 ஏசா 32:9-11 ஏசா 33:14 எரே 48:11 எரே 49:31 லூக் 6:24 லூக் 6:25 லூக் 12:17-20 யாக் 5:5 1பேது 5:7 |
| 2 | நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப்போய், பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள். | எரே 2:10 எரே 2:11 நாகூ 3:8 |
| 3 | தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து, | ஆமோ 5:18 ஆமோ 9:10 பிரச 8:11 ஏசா 47:7 ஏசா 56:12 எசே 12:22 எசே 12:27 மத் 24:48 1தெச 5:3 2பேது 3:4 வெளிப் 18:17 |
| 4 | தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, | ஏசா 5:11 ஏசா 5:12 ஏசா 22:13 லூக் 16:19 ரோம 13:13 ரோம 13:14 யாக் 5:5 |
| 5 | தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, | ஆதி 31:27 யோபு 21:11 யோபு 21:12 பிரச 2:8 ஏசா 5:12 1பேது 4:3 வெளிப் 18:22 |
| 6 | பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள். | ஓசி 3:1 1தீமோ 5:23 |
| 7 | ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும். | ஆமோ 5:5 ஆமோ 5:27 ஆமோ 7:11 உபா 28:41 லூக் 21:24 |
| 8 | நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரமனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். | ஆமோ 4:2 எரே 51:14 எபிரெ 6:13-17 |
| 9 | ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாயிருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள். | ஆமோ 5:3 1சாமு 2:33 எஸ்தர் 5:11 எஸ்தர் 9:10 யோபு 1:2 யோபு 1:19 யோபு 20:28 சங் 109:13 ஏசா 14:21 |
| 10 | அவர்களுடைய இனத்தானாவது பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான். | ஆமோ 8:3 1சாமு 31:12 2இரா 23:16 எரே 16:6 |
| 11 | இதோ, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை வெடிப்புகள் உண்டாகவும் அடிப்பார். | ஆமோ 3:6 ஆமோ 3:7 ஆமோ 9:1 ஆமோ 9:9 சங் 105:16 சங் 105:31 சங் 105:34 ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 13:3 ஏசா 46:10 ஏசா 46:11 ஏசா 55:11 எசே 29:18-20 நாகூ 1:14 |
| 12 | கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள். | ஏசா 48:4 எரே 5:3 எரே 6:29 எரே 6:30 சகரி 7:11 சகரி 7:12 |
| 13 | நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக்கொம்புகளை உண்டாக்கிக்கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள். | யாத் 32:18 யாத் 32:19 நியா 9:19 நியா 9:20 நியா 9:27 நியா 16:23-25 1சாமு 4:5 யோபு 31:25 யோபு 31:29 பிரச 11:9 ஏசா 8:6 எரே 9:23 எரே 50:11 யோனா 4:6 ஆபகூ 1:15 ஆபகூ 1:16 செப் 3:11 லூக் 12:19 லூக் 12:20 யோவா 16:20 யாக் 4:16 வெளிப் 11:10 |
| 14 | இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு ஜாதியை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் பிரவேசிக்கிற வழி தொடங்கிச் சமனான நாட்டின் ஆறுமட்டாக உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். | 2இரா 15:29 2இரா 17:6 ஏசா 7:20 ஏசா 8:4-8 ஏசா 10:5 ஏசா 10:6 எரே 5:15-17 ஓசி 10:5 |