| 1 | இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள். | 2நாளா 20:15 ஏசா 46:3 ஏசா 48:12 ஓசி 4:1 ஓசி 5:1 மீகா 3:1 வெளிப் 2:29 |
| 2 | பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன். | யாத் 19:5 யாத் 19:6 உபா 7:6 உபா 10:15 உபா 26:18 உபா 32:9 சங் 147:19 ஏசா 63:19 |
| 3 | இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ? | ஆதி 5:22 ஆதி 6:9 ஆதி 17:1 2கொரி 6:14-16 |
| 4 | தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடியாமல் இருக்கும்போது பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ? | ஆமோ 3:8 ஆமோ 1:2 சங் 104:21 ஓசி 11:10 |
| 5 | குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ? | பிரச 9:12 எரே 31:28 தானி 9:14 |
| 6 | ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? | எரே 4:5 எரே 6:1 எசே 33:3 ஓசி 5:8 செப் 1:16 |
| 7 | கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். | ஆதி 6:13 ஆதி 18:17 1இரா 22:19-23 2இரா 3:17-20 2இரா 6:12 2இரா 22:13 2இரா 22:20 சங் 25:14 தானி 9:22-27 தானி 10:21 தானி 11:2 யோவா 15:15 வெளிப் 1:1 வெளிப் 1:19 வெளிப் 4:1 வெளிப் 6:1-20 |
| 8 | சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? | ஆமோ 3:4 ஆமோ 1:2 வெளிப் 5:5 |
| 9 | நீங்கள் சமாரியாவின் பர்வதங்களில் வந்துகூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள். | 2சாமு 1:20 எரே 2:10 எரே 2:11 எரே 31:7-9 எரே 46:14 எரே 50:2 |
| 10 | அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | சங் 14:4 எரே 4:22 எரே 5:4 2பேது 3:5 |
| 11 | ஆகையால் சத்துரு வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன் பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்; அப்பொழுது உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | ஆமோ 6:14 2இரா 15:19 2இரா 15:29 2இரா 17:3-6 2இரா 18:9-11 ஏசா 7:17-25 ஏசா 8:7 ஏசா 8:8 ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 10:9-11 ஓசி 11:5 ஓசி 11:6 |
| 12 | மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | 1சாமு 17:34-37 ஏசா 31:4 |
| 13 | நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், | உபா 8:19 உபா 30:18 உபா 30:19 2இரா 17:13 2இரா 17:15 2நாளா 24:19 அப் 2:40 அப் 18:5 அப் 18:6 அப் 20:21 எபே 4:17 1தெச 4:6 |
| 14 | நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும். | யாத் 32:34 |
| 15 | மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 36:22 |