| 1 | தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள். | எரே 1:1 எரே 7:27 |
| 2 | கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும். | ஆமோ 3:7 ஆமோ 3:8 நீதி 20:2 ஏசா 42:13 எரே 25:30 ஓசி 13:8 யோவே 2:11 யோவே 3:16 |
| 3 | கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தார்களே. | ஆமோ 1:6 ஆமோ 1:9 ஆமோ 1:11 ஆமோ 1:13 ஆமோ 2:1 ஆமோ 2:4 ஆமோ 2:6 யோபு 5:19 யோபு 19:3 நீதி 6:16 பிரச 11:2 |
| 4 | ஆசகேலின் வீட்டிலே தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரமனைகளைப் பட்சிக்கும். | ஆமோ 1:7 ஆமோ 1:10 ஆமோ 1:12 ஆமோ 1:14 ஆமோ 2:2 ஆமோ 2:5 நியா 9:19 நியா 9:20 நியா 9:57 எரே 17:27 எரே 49:27 எசே 30:8 எசே 39:6 ஓசி 8:14 |
| 5 | நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்; அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 43:14 எரே 50:36 எரே 51:30 புலம் 2:9 நாகூ 3:13 |
| 6 | கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே. | ஆமோ 1:3 ஆமோ 1:9 ஆமோ 1:11 |
| 7 | காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரமனைகளைப் பட்சிக்கும். | உபா 32:35 உபா 32:41-43 சங் 75:7 சங் 75:8 சங் 94:1-5 செப் 2:4 ரோம 12:19 |
| 8 | நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | ஏசா 20:1 எரே 47:5 எசே 25:16 |
| 9 | மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்புவித்தார்களே. | ஏசா 23:1-18 எரே 47:4 எசே 26:1-28 யோவே 3:4-8 சகரி 9:2-4 |
| 10 | தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஆமோ 1:4 ஆமோ 1:7 எசே 26:12 சகரி 9:4 |
| 11 | மேலும்: ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே. | ஏசா 21:11 ஏசா 21:12 ஏசா 34:1-17 ஏசா 63:1-7 எரே 49:7-22 எசே 25:12-14 எசே 35:1-15 ஒபதி 1:1-14 மல்கி 1:4 |
| 12 | தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஆதி 36:11 எரே 49:7 எரே 49:20 ஒபதி 1:9 ஒபதி 1:10 |
| 13 | கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே. | உபா 2:19 எரே 49:1-6 எசே 25:2-7 செப் 2:8 |
| 14 | ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புசலாகவும் அதின் அரமனைகளைப் பட்சிக்கும். | உபா 3:11 2சாமு 12:26 எரே 49:2 எசே 25:5 |
| 15 | அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 49:3 |