| 1 | கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, | தானி 1:21 தானி 5:31 தானி 6:1 தானி 6:28 தானி 11:1 |
| 2 | தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன். | தானி 8:15 தானி 8:16 சங் 119:24 சங் 119:99 சங் 119:100 மத் 24:15 மாற் 13:14 அப் 8:34 1தீமோ 4:13 2தீமோ 3:15-17 1பேது 1:10-12 2பேது 1:19-21 வெளிப் 1:3 |
| 3 | நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி, | தானி 6:10 நெகே 1:4-11 சங் 102:13-17 எரே 29:10-13 எரே 33:3 எசே 36:37 யாக் 5:16-18 |
| 4 | என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே. | தானி 9:5-12 லேவி 26:40-42 1இரா 8:47-49 2நாளா 7:14 நெகே 9:2 நெகே 9:3 சங் 32:5 எரே 3:13 1யோவா 1:8-10 |
| 5 | நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். | தானி 9:15 1இரா 8:47-50 2நாளா 6:37-39 எஸ்றா 9:6 நெகே 1:6-8 நெகே 9:33 நெகே 9:34 சங் 106:6 ஏசா 64:5-7 எரே 3:25 எரே 14:7 |
| 6 | உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம். | தானி 9:10 2இரா 17:13 2இரா 17:14 2நாளா 33:10 2நாளா 36:15 2நாளா 36:16 ஏசா 30:10 ஏசா 30:11 எரே 6:16 எரே 6:17 எரே 7:13 எரே 7:25 எரே 7:26 எரே 25:3-7 எரே 26:5 எரே 29:19 எரே 32:32 எரே 32:33 எரே 44:4 எரே 44:5 எரே 44:16 சகரி 1:4-6 சகரி 7:8-12 மத் 21:34-40 மத் 23:37 லூக் 20:10-12 அப் 7:51 அப் 7:52 அப் 13:27 1தெச 2:15 1தெச 2:16 |
| 7 | ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே. வெட்கம் எங்களுக்கே உரியது. | தானி 9:8 தானி 9:14 உபா 32:4 எஸ்றா 9:13 நெகே 9:33 சங் 51:4 சங் 51:14 சங் 119:137 எரே 12:1 லூக் 23:40 லூக் 23:41 |
| 8 | ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம். | தானி 9:6 தானி 9:7 |
| 9 | அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். | தானி 9:7 யாத் 34:6 யாத் 34:7 எண் 14:18 எண் 14:19 நெகே 9:17 நெகே 9:31 சங் 62:12 சங் 86:5 சங் 86:15 சங் 130:4 சங் 130:7 சங் 145:8 சங் 145:9 ஏசா 55:7 ஏசா 63:7 புலம் 3:22 புலம் 3:23 யோனா 4:2 மீகா 7:18 மீகா 7:19 எபே 1:6-8 எபே 2:4-7 |
| 10 | ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. | தானி 9:6 2இரா 17:13 2இரா 18:12 எஸ்றா 9:10 எஸ்றா 9:11 நெகே 9:13-17 எபிரெ 1:1 |
| 11 | இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன. | 2இரா 17:18-23 ஏசா 1:4-6 எரே 8:5-10 எரே 9:26 எசே 22:26-31 |
| 12 | எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார். | ஏசா 44:26 புலம் 2:17 எசே 13:6 சகரி 1:8 மத் 5:18 ரோம 15:8 |
| 13 | மோசேயின் நியாயப்பிரமாணப்புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நாங்கள் எங்கள் அக்கிரமங்களைவிட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை. | தானி 9:11 லேவி 26:14-46 உபா 28:15-68 ஏசா 42:9 புலம் 2:15-17 யோவா 10:35 |
| 14 | ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து, அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். | எரே 31:28 எரே 44:27 |
| 15 | இப்போதும் உமது ஜனத்தைப்பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்குக் கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம். | யாத் 6:1 யாத் 6:6 யாத் 14:1-15 யாத் 32:11 1இரா 8:51 நெகே 1:10 எரே 32:20-23 2கொரி 1:10 |
| 16 | ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்தபர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம். | 1சாமு 2:7 நெகே 9:8 சங் 31:1 சங் 71:2 சங் 143:1 மீகா 6:4 மீகா 6:5 2தெச 1:6 1யோவா 1:9 |
| 17 | இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். | எண் 6:23-26 சங் 4:6 சங் 67:1 சங் 80:1 சங் 80:3 சங் 80:7 சங் 80:19 சங் 119:135 வெளிப் 21:23 |
| 18 | என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம். | 1இரா 8:29 2இரா 19:16 சங் 17:6 சங் 17:7 ஏசா 37:17 ஏசா 63:15-19 ஏசா 64:12 |
| 19 | ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும், என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன். | எண் 14:19 1இரா 8:30-39 2நாளா 6:21 2நாளா 6:25-30 2நாளா 6:39-30 ஆமோ 7:2 லூக் 11:8 |
| 20 | இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன். | தானி 10:2 சங் 32:5 சங் 145:18 ஏசா 58:9 ஏசா 65:24 அப் 4:31 அப் 10:30 அப் 10:31 |
| 21 | அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். | தானி 8:16 தானி 10:16 லூக் 1:19 |
| 22 | அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். | தானி 9:24-27 தானி 8:16 தானி 10:21 சகரி 1:9 சகரி 1:14 சகரி 6:4 சகரி 6:5 வெளிப் 4:1 |
| 23 | நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். | தானி 10:12 |
| 24 | மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. | லேவி 25:8 எண் 14:34 எசே 4:6 |
| 25 | இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டுவாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். | தானி 9:23 மத் 13:23 மத் 24:15 மாற் 13:14 அப் 8:30 |
| 26 | அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. | சங் 22:15 ஏசா 53:8 மாற் 9:12 லூக் 24:26 லூக் 24:46 யோவா 11:51 யோவா 11:52 யோவா 12:32-34 2கொரி 5:21 கலா 3:13 1பேது 2:21 1பேது 2:24 1பேது 3:18 |
| 27 | அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான். | ஏசா 42:6 ஏசா 53:11 ஏசா 55:3 எரே 31:31-34 எரே 32:40-42 எசே 16:60-63 மத் 26:28 ரோம 5:15 ரோம 5:19 ரோம 15:8 ரோம 15:9 கலா 3:13-17 எபிரெ 6:13-18 எபிரெ 8:8-13 எபிரெ 9:15-20 எபிரெ 9:28-20 எபிரெ 10:16-18 எபிரெ 13:20 எபிரெ 13:21 |