| 1 | பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான். | தானி 1:21 தானி 6:28 2நாளா 36:22 2நாளா 36:23 எஸ்றா 1:1 எஸ்றா 1:2 எஸ்றா 1:7 எஸ்றா 1:8 எஸ்றா 3:7 எஸ்றா 4:3 எஸ்றா 4:5 எஸ்றா 5:13-17 எஸ்றா 6:3 எஸ்றா 6:14 ஏசா 44:28 ஏசா 45:1 |
| 2 | அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். | எஸ்றா 9:4 எஸ்றா 9:5 நெகே 1:4 சங் 42:9 சங் 43:2 சங் 137:1-5 ஏசா 66:10 எரே 9:1 மத் 9:15 ரோம 9:2 யாக் 4:9 வெளிப் 11:5 |
| 3 | அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை. | தானி 6:18 ஏசா 24:6-11 1கொரி 9:27 |
| 4 | முதலாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, | தானி 8:2 எசே 1:3 |
| 5 | என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன். | தானி 12:6 தானி 12:7 யோசு 5:13 சகரி 1:8 வெளிப் 1:13-15 |
| 6 | அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது. | யாத் 28:20 எசே 1:16 எசே 10:9 வெளிப் 21:20 |
| 7 | தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷரோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளித்துக்கொண்டார்கள். | 2இரா 6:17 அப் 9:7 அப் 22:9 |
| 8 | நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன். | ஆதி 32:24 யாத் 3:3 யோவா 16:32 2கொரி 12:2 2கொரி 12:3 |
| 9 | அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தேன். | தானி 8:18 ஆதி 2:21 ஆதி 15:12 யோபு 4:13 யோபு 33:15 உன்ன 5:2 லூக் 9:32 லூக் 22:45 |
| 10 | இதோ, ஒருவன் கை என்னைத் தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது. | தானி 10:16 தானி 10:18 தானி 8:18 தானி 9:21 எரே 1:9 வெளிப் 1:17 |
| 11 | அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன். | தானி 9:23 யோவா 13:23 யோவா 21:20 |
| 12 | அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன். | தானி 10:19 ஏசா 35:4 ஏசா 41:10 ஏசா 41:14 மத் 28:5 மத் 28:10 மாற் 16:6 லூக் 1:13 லூக் 1:30 லூக் 2:10 லூக் 24:38 அப் 18:9 அப் 18:10 அப் 27:24 வெளிப் 1:17 |
| 13 | பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன். | தானி 10:20 எஸ்றா 4:4-6 எஸ்றா 4:24-6 சகரி 3:1 சகரி 3:2 எபே 6:12 1தெச 2:18 |
| 14 | இப்போதும் கடைசி நாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான். | தானி 2:28 ஆதி 49:1 உபா 4:30 உபா 31:21 ஏசா 2:2 ஓசி 3:5 மீகா 4:1 2தீமோ 3:1 |
| 15 | அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன். | தானி 10:9 தானி 8:18 எசே 24:27 எசே 33:22 லூக் 1:20 |
| 16 | அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என்வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன். | தானி 10:5 தானி 10:6 தானி 10:18 தானி 8:15 தானி 9:21 எசே 1:26 பிலிப் 2:7 பிலிப் 2:8 வெளிப் 1:13 |
| 17 | ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன். | மத் 22:43 மத் 22:44 மாற் 12:36 |
| 18 | அப்பொழுது மனுஷரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி, | தானி 10:10 தானி 10:16 தானி 8:18 |
| 19 | பிரியமான புருஷனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன். | தானி 10:11 தானி 9:23 யோவா 11:3 யோவா 11:5 யோவா 11:36 யோவா 15:9-14 யோவா 19:26 யோவா 21:20 |
| 20 | அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான். | தானி 10:13 ஏசா 37:36 அப் 12:23 |
| 21 | சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை. | தானி 8:26 தானி 11:1-12 ஏசா 41:22 ஏசா 41:23 ஏசா 43:8 ஏசா 43:9 ஆமோ 3:7 அப் 15:15 அப் 15:18 |