| 1 | ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறுமுழ அகலமுமான ஒருபொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான். | தானி 2:31 தானி 2:32 தானி 5:23 யாத் 20:23 யாத் 32:2-4 யாத் 32:31-4 உபா 7:25 நியா 8:26 நியா 8:27 1இரா 12:28 2இரா 19:17 2இரா 19:18 சங் 115:4-8 சங் 135:15 ஏசா 2:20 ஏசா 30:22 ஏசா 40:19-31 ஏசா 46:6 எரே 10:9 எரே 16:20 ஓசி 8:4 ஆபகூ 2:19 அப் 17:29 அப் 19:26 வெளிப் 9:20 |
| 2 | பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான். | யாத் 32:4-6 எண் 25:2 நியா 16:23 1இரா 12:32 நீதி 29:12 வெளிப் 17:2 |
| 3 | அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள். | சங் 82:1-8 அப் 19:34 அப் 19:35 ரோம 1:21-28 ரோம 3:11 1கொரி 1:24-26 வெளிப் 13:13-16 வெளிப் 17:13 வெளிப் 17:17 |
| 4 | கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: | தானி 4:14 நீதி 9:13-15 ஏசா 40:9 ஏசா 58:1 |
| 5 | எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள். | தானி 3:10 தானி 3:15 |
| 6 | எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான். | தானி 3:11 தானி 3:15 யாத் 20:5 ஏசா 44:17 மத் 4:9 வெளிப் 13:15-17 |
| 7 | ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள். | எரே 51:7 அப் 14:16 1யோவா 5:19 வெளிப் 12:9 வெளிப் 13:3 வெளிப் 13:8 வெளிப் 13:14 வெளிப் 17:8 வெளிப் 19:20 |
| 8 | அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி, | தானி 6:12 தானி 6:13 எஸ்றா 4:12-16 எஸ்தர் 3:6 எஸ்தர் 3:8 எஸ்தர் 3:9 அப் 16:20-22 அப் 17:6-8 அப் 28:22 1பேது 4:3 1பேது 4:4 |
| 9 | ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க. | தானி 3:4 தானி 3:5 |
| 10 | எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும், | தானி 3:4-7 தானி 6:12 யாத் 1:16 யாத் 1:22 எஸ்தர் 3:12-14 சங் 94:20 பிரச 3:16 ஏசா 10:1 யோவா 11:57 வெளிப் 13:16 வெளிப் 13:17 |
| 11 | எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே. |
| 12 | பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள். | தானி 2:49 தானி 6:13 1சாமு 18:7-11 எஸ்தர் 3:8 நீதி 27:4 பிரச 4:4 |
| 13 | அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது, | தானி 3:19 தானி 2:12 ஆதி 4:5 1சாமு 20:30-33 எஸ்தர் 3:5 எஸ்தர் 3:6 நீதி 17:12 நீதி 27:3 நீதி 29:22 லூக் 6:11 |
| 14 | நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா? | யாத் 21:13 யாத் 21:14 |
| 15 | இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான். | லூக் 4:7 லூக் 4:8 |
| 16 | சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவுசொல்ல எங்களுக்கு அவசியமில்லை. |
| 17 | நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். | தானி 4:35 தானி 6:20-22 தானி 6:27-22 ஆதி 17:1 ஆதி 18:14 1சாமு 17:37 1சாமு 17:46 யோபு 5:19 யோபு 34:29 சங் 27:1 சங் 27:2 சங் 62:1-6 சங் 73:20 சங் 115:3 சங் 121:5-7 சங் 18:10 சங் 18:11 ஏசா 12:2 ஏசா 26:3 ஏசா 26:4 ஏசா 54:14 லூக் 1:37 அப் 20:24 அப் 21:13 அப் 27:20-25 ரோம 8:31 எபிரெ 7:25 |
| 18 | விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். | யோபு 13:15 நீதி 28:1 ஏசா 51:12 ஏசா 51:13 மத் 10:28 மத் 10:32 மத் 10:33 மத் 10:39 மத் 16:2 லூக் 12:3-9 அப் 4:10-13 அப் 4:19-13 அப் 5:29-32 வெளிப் 2:10 வெளிப் 2:11 வெளிப் 12:11 |
| 19 | அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து, | தானி 3:13 நீதி 21:24 ஏசா 51:23 லூக் 12:4 லூக் 12:5 அப் 5:33 அப் 7:54 |
| 20 | சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலேபோடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான். | தானி 3:15 அப் 12:4 அப் 12:5 அப் 16:23 அப் 16:25 |
| 21 | அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், நிசார்களோடும், பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். |
| 22 | ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது. | யாத் 12:33 |
| 23 | சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள். | தானி 6:16 தானி 6:17 சங் 34:19 சங் 66:11 சங் 66:12 சங் 124:1-5 எரே 38:6 புலம் 3:52-54 2கொரி 1:8-10 2கொரி 4:17 1பேது 4:12 1பேது 4:13 |
| 24 | அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். | தானி 5:6 அப் 5:23-25 அப் 9:6 அப் 12:13 |
| 25 | அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். | ஏசா 43:2 |
| 26 | அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள். | தானி 3:17 தானி 2:47 தானி 6:20 எஸ்றா 5:11 அப் 16:17 அப் 27:23 கலா 1:10 வெளிப் 19:5 |
| 27 | தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷனுடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள். | தானி 3:2 தானி 3:3 1சாமு 17:46 1சாமு 17:47 2இரா 19:19 சங் 83:18 சங் 96:7-9 ஏசா 26:11 அப் 2:6-12 அப் 26:26 |
| 28 | அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார். | தானி 2:47 தானி 4:34 தானி 6:26 ஆதி 9:26 எஸ்றா 1:3 எஸ்றா 7:23-28 |
| 29 | ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்த பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான். | தானி 6:26 தானி 6:27 |
| 30 | பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான். | 1சாமு 2:30 சங் 91:14 யோவா 12:26 ரோம 8:31 |