| 1 | மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். | எசே 6:2 எசே 6:3 எசே 33:28 எசே 34:14 எசே 37:22 |
| 2 | கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; பகைஞன் உங்களைக்குறித்து ஆ ஆ, நித்திய மேடுகள் எங்கள் வசமாயிற்று என்று சொல்லுகிறபடியினால், | எசே 36:5 எசே 25:3 எசே 26:2 |
| 3 | நீ தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப் பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும், | எசே 13:10 லேவி 26:43 |
| 4 | இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட அவாந்தர இடங்களுக்கும், வெறுமையாய் விடப்பட்ட பட்டணங்களுக்கும் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான புறஜாதிகளுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாய்ப்போனபடியினால், | எசே 36:1 எசே 36:6 உபா 11:11 |
| 5 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என் தேசத்தைக் கொள்ளையிடப்பட்ட வெளியாக்கும்படிக்கு அதை முழு இருதயத்தின் சந்தோஷத்தோடும் கர்வமான மனதோடும் தங்களுக்குச் சுதந்தரமாக நியமித்துக்கொண்ட புறஜாதிகளில் மீதியானவர்களுக்கு விரோதமாகவும் ஏதோம் அனைத்துக்கும் விரோதமாகவும், என் அக்கினியான எரிச்சலினால் பேசினேன் என்று நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். | எசே 38:19 உபா 4:24 ஏசா 66:15 ஏசா 66:16 செப் 3:8 சகரி 1:15 |
| 6 | ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, நீங்கள் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமந்தபடியினால் நான் என் எரிச்சலினாலும் என் உக்கிரத்தினாலும் பேசினேன், | எசே 36:4 எசே 36:5 எசே 36:15 எசே 34:29 சங் 74:10 சங் 74:18 சங் 74:23 சங் 123:3 சங் 123:4 |
| 7 | ஆதலால், கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் கரத்தை உயர்த்துவேன், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகள் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய்ச் சுமப்பார்கள் என்று சொல்லுகிறேன். | எசே 20:5 எசே 20:15 உபா 32:40 வெளிப் 10:5 வெளிப் 10:6 |
| 8 | இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்கள் கொப்புகளைவிட்டு, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு உங்கள் கனிகளைக் கொடுப்பீர்கள்; அவர்கள் சமீபமாய் வந்துவிட்டார்கள். | எசே 34:26-29 சங் 67:6 சங் 85:12 ஏசா 4:2 ஏசா 27:6 ஏசா 30:23 ஓசி 2:21-23 ஆமோ 9:13-15 |
| 9 | இதோ, நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள். | சங் 46:11 சங் 99:8 ஓசி 2:21-23 யோவே 3:18 ஆகா 2:19 சகரி 8:12 மல்கி 3:10 மல்கி 3:11 ரோம 8:31 |
| 10 | நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும். | எசே 36:37 ஏசா 27:6 ஏசா 41:17-23 எரே 30:19 எரே 31:27 எரே 31:28 எரே 33:12 சகரி 8:3-6 |
| 11 | உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். | எரே 31:27 எரே 33:12 |
| 12 | நான் உங்கள்மேல் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மனுஷரை நடமாடப்பண்ணுவேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சுதந்தரமாயிருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை. | எரே 32:15 எரே 32:44 ஒபதி 1:17-21 |
| 13 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால், |
| 14 | நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதுமில்லை, இனிமேல் உன் ஜனங்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | எசே 37:25-28 ஏசா 60:21 ஆமோ 9:15 |
| 15 | நான் இனிமேல் புறஜாதிகள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கப்பண்ணுவதுமில்லை, நீ ஜனங்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன் ஜாதிகளைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். | எசே 36:6 எசே 34:29 ஏசா 54:4 ஏசா 60:14 மீகா 7:8-10 செப் 3:19 செப் 3:20 |
| 16 | பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 17 | மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது. | லேவி 18:24-28 எண் 35:33 எண் 35:34 சங் 106:37 சங் 106:38 ஏசா 24:5 எரே 2:7 எரே 3:1 எரே 3:2 எரே 3:9 எரே 16:18 மீகா 2:10 |
| 18 | ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்தினிமித்தமும், அதை அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தினதினிமித்தமும் நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றி, | எசே 7:8 எசே 14:19 எசே 21:31 2நாளா 34:21 2நாளா 34:26 ஏசா 42:25 எரே 7:20 எரே 44:6 புலம் 2:4 புலம் 4:11 நாகூ 1:6 வெளிப் 14:10 வெளிப் 16:1-21 |
| 19 | அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன். | எசே 5:12 எசே 22:15 லேவி 26:38 உபா 28:64 ஆமோ 9:9 |
| 20 | அவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபோது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்தநாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள். | ஏசா 52:5 ரோம 2:24 |
| 21 | ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் தாங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்திலே பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்தநாமத்தினிமித்தமாகவே இரங்குகிறேன். | எசே 20:9 எசே 20:14 எசே 20:22 உபா 32:26 உபா 32:27 சங் 74:18 ஏசா 37:35 ஏசா 48:9 |
| 22 | ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தம் அல்ல, நீங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன். | எசே 36:32 உபா 7:7 உபா 7:8 உபா 9:5-7 சங் 106:8 சங் 115:1 சங் 115:2 |
| 23 | புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | எசே 20:41 எசே 38:22 எசே 38:23 எண் 20:12 எண் 20:13 சங் 46:10 ஏசா 5:16 1பேது 3:15 |
| 24 | நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். | எசே 11:17 எசே 34:13 எசே 37:21 எசே 37:25 எசே 39:27 எசே 39:28 உபா 30:3-5 சங் 107:2 சங் 107:3 ஏசா 11:11-16 ஏசா 27:12 ஏசா 27:13 ஏசா 43:5 ஏசா 43:6 எரே 23:3-8 எரே 30:3 எரே 30:18 எரே 31:8 எரே 32:37 எரே 50:17-20 ஓசி 1:11 ஆமோ 9:14 ஆமோ 9:15 ரோம 11:25 ரோம 11:26 |
| 25 | அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். | லேவி 14:5-7 எண் 8:7 எண் 19:13-20 சங் 51:7 ஏசா 52:15 யோவா 3:5 தீத் 3:5 தீத் 3:6 எபிரெ 9:13 எபிரெ 9:14 எபிரெ 9:19 எபிரெ 10:22 1யோவா 5:6 |
| 26 | உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். | உபா 30:6 சங் 51:10 எரே 32:39 யோவா 3:3-5 2கொரி 3:18 2கொரி 5:17 கலா 6:15 எபே 2:10 வெளிப் 21:5 |
| 27 | உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். | எசே 37:14 எசே 39:29 நீதி 1:23 ஏசா 44:3 ஏசா 44:4 ஏசா 59:21 யோவே 2:28 யோவே 2:29 சகரி 12:10 லூக் 11:13 ரோம 8:9 ரோம 8:14-16 1கொரி 3:16 கலா 5:5 கலா 5:22 கலா 5:23 எபே 1:13 எபே 1:14 2தெச 2:13 தீத் 3:3-6 1பேது 1:2 1பேது 1:22 1யோவா 3:24 |
| 28 | உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து, | எசே 36:10 எசே 28:25 எசே 37:25 எசே 39:28 |
| 29 | உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகப்பண்ணி, | எசே 36:25 எரே 33:8 ஓசி 14:2 ஓசி 14:4 ஓசி 14:8 யோவே 3:21 மீகா 7:19 சகரி 13:1 மத் 1:21 யோவா 1:7-9 ரோம 6:14 ரோம 11:26 தீத் 2:14 |
| 30 | நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன். | உபா 29:23-28 யோவே 2:17 யோவே 2:26 |
| 31 | அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள். | எசே 6:9 எசே 16:61-63 எசே 20:43 லேவி 26:39 எஸ்றா 9:6-15 நெகே 9:26-35 எரே 31:18-20 தானி 9:4-20 |
| 32 | நான் இப்படிச் செய்வது உங்கள் நிமித்தமாக அல்லவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு அறியப்பட்டிருக்கக்கடவது; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் வழிகளினிமித்தம் வெட்கி நாணுங்கள். | எசே 36:22 உபா 9:5 தானி 9:18 தானி 9:19 2தீமோ 1:9 தீத் 3:3-6 |
| 33 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும். | சகரி 8:7 சகரி 8:8 |
| 34 | பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும். | எசே 6:14 உபா 29:23-28 2நாளா 36:21 எரே 25:9-11 |
| 35 | பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். | சங் 58:11 சங் 64:9 சங் 126:2 எரே 33:9 |
| 36 | கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன். | எசே 17:24 எசே 34:30 எசே 37:28 எசே 39:27-29 மீகா 7:15-17 |
| 37 | கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன். | எசே 14:3 எசே 20:3 எசே 20:31 சங் 10:17 சங் 102:17 ஏசா 55:6 ஏசா 55:7 எரே 29:11-13 எரே 50:4 எரே 50:5 சகரி 10:6 சகரி 10:9 சகரி 13:9 மத் 7:7 மத் 7:8 பிலிப் 4:6 எபிரெ 4:16 எபிரெ 10:21 எபிரெ 10:22 யாக் 4:2 யாக் 4:3 1யோவா 5:14 |
| 38 | பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார். | யாத் 23:17 யாத் 34:23 உபா 16:16 2நாளா 7:8 2நாளா 30:21-27 2நாளா 35:7-19 சகரி 8:19-23 அப் 2:5-11 |