| 1 | பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார். | எசே 3:10 எசே 2:8 எசே 2:9 1தீமோ 4:15 வெளிப் 10:9 வெளிப் 10:10 |
| 2 | அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து: | எரே 25:17 அப் 26:19 |
| 3 | மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது. | எசே 2:10 யோபு 32:18 யோபு 32:19 எரே 6:11 எரே 20:9 யோவா 7:38 கொலோ 3:16 |
| 4 | பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்திலே சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு. | எசே 3:11 எசே 2:3 எசே 2:7 மத் 10:5 மத் 10:6 மத் 15:24 அப் 1:8 |
| 5 | விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய். | யோனா 1:2 யோனா 3:2-4 அப் 26:17 அப் 26:18 |
| 6 | விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ? | யோனா 3:5-10 மத் 11:20-24 மத் 12:41 மத் 12:42 லூக் 11:30-32 அப் 27:28 ரோம 9:30-33 |
| 7 | இஸ்ரவேல் வீட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள். | 1சாமு 8:7 எரே 25:3 எரே 25:4 எரே 44:4 எரே 44:5 எரே 44:16 லூக் 10:16 லூக் 13:34 லூக் 19:14 யோவா 5:40-47 யோவா 15:20-24 |
| 8 | இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன். | யாத் 4:15 யாத் 4:16 யாத் 11:4-8 1இரா 21:20 ஏசா 50:7 எரே 1:18 எரே 15:20 மீகா 3:8 அப் 7:51-56 எபிரெ 11:27 எபிரெ 11:32-37 |
| 9 | உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன், கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு என்றார். | சகரி 7:12 |
| 10 | பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, | எசே 3:1-3 எசே 2:8 யோபு 22:22 சங் 119:11 நீதி 8:10 நீதி 19:20 லூக் 8:15 1தெச 2:13 1தெச 4:1 |
| 11 | நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார். | எசே 3:15 எசே 11:24 எசே 11:25 தானி 6:13 |
| 12 | அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன். | எசே 3:14 எசே 2:2 எசே 8:3 எசே 11:1 எசே 11:24 எசே 40:1 எசே 40:2 1இரா 18:12 2இரா 2:16 அப் 8:39 |
| 13 | ஒன்றோடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன். | எசே 1:24 எசே 10:5 2சாமு 5:24 |
| 14 | ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது. | எசே 3:12 எசே 8:3 எசே 37:1 |
| 15 | கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன். | எசே 3:23 எசே 1:1 எசே 10:15 எசே 43:3 |
| 16 | ஏழுநாள் முடிந்தபின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 17 | மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. | எசே 33:2-9 1கொரி 12:28 |
| 18 | சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். | எசே 18:4 எசே 18:13 எசே 18:20 எசே 33:6 எசே 33:8 ஆதி 2:17 ஆதி 3:3 ஆதி 3:4 எண் 26:65 2இரா 1:4 ஏசா 3:11 லூக் 13:3 லூக் 13:5 எபே 5:5 எபே 5:6 |
| 19 | நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய். | 2இரா 17:13-23 2நாளா 36:15 2நாளா 36:16 நீதி 29:1 எரே 42:19-22 எரே 44:4 எரே 44:5 லூக் 10:10 லூக் 10:11 அப் 18:5 அப் 18:6 1தெச 4:6 எபிரெ 2:1-3 எபிரெ 12:25 |
| 20 | அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். | எசே 18:24 எசே 18:26 எசே 33:12 எசே 33:13 2நாளா 24:2 2நாளா 24:17-22 சங் 36:3 சங் 125:5 செப் 1:6 மத் 13:20 மத் 13:21 எபிரெ 10:38 2பேது 2:18-22 1யோவா 2:19 |
| 21 | நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார். | மத் 24:24 மத் 24:25 அப் 20:31 1கொரி 4:14 1கொரி 10:12 கலா 1:6-10 கலா 5:2-7 எபே 4:17-21 எபே 5:5 எபே 5:6 கொலோ 1:28 கொலோ 3:5-8 1தெச 4:6-8 1தெச 5:14 தீத் 2:15 1யோவா 3:6-9 வெளிப் 3:19 |
| 22 | அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார். | எசே 3:14 எசே 1:3 எசே 37:1 |
| 23 | அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமைக்குச் சரியாக அங்கே கர்த்தருடைய மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன். | எசே 1:4 எசே 1:28 எசே 9:3 எசே 10:18 எண் 16:19 எண் 16:42 அப் 7:55 |
| 24 | உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன் வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு. | எசே 2:2 எசே 37:10 தானி 10:8-10 தானி 10:19-10 |
| 25 | இதோ, மனுபுத்திரனே, உன் மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம். | எசே 4:8 மாற் 3:21 யோவா 21:18 அப் 9:16 அப் 20:23 அப் 21:11-13 |
| 26 | நான் உன் நாவை உன் மேல்வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்து கொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார். | எசே 24:27 சங் 51:15 சங் 137:6 எரே 1:17 லூக் 1:20-22 |
| 27 | நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார். | எசே 11:25 எசே 24:27 எசே 29:21 எசே 33:32 யாத் 4:11 யாத் 4:12 லூக் 21:15 எபே 6:19 |