இணை வசன வேதாகமம்

Click to Subscribe

எசேக்கியேல் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.எசே 2:3 எசே 2:6 எசே 2:8 எசே 3:1 எசே 3:4 எசே 3:10 எசே 3:17 எசே 4:1 எசே 5:1 எசே 7:2 எசே 12:3 எசே 13:2 எசே 14:3 எசே 14:13 எசே 15:2 எசே 16:2 எசே 17:2 எசே 20:3 எசே 37:3 சங் 8:4 தானி 8:17 மத் 16:13-16 யோவா 3:13 யோவா 3:16
2இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன்.எசே 3:12 எசே 3:14 எசே 3:24 எசே 36:27 எண் 11:25 எண் 11:26 நியா 13:25 1சாமு 16:13 நெகே 9:30 யோவே 2:28 யோவே 2:29 வெளிப் 11:11
3அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள்.எசே 3:4-8 2நாளா 36:15 2நாளா 36:16 ஏசா 6:8-10 எரே 1:7 எரே 7:2 எரே 25:3-7 எரே 26:2-6 எரே 36:2 மாற் 12:2-5 லூக் 24:47 லூக் 24:48 யோவா 20:21 யோவா 20:22 ரோம 10:15
4அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு.எசே 3:7 உபா 10:16 உபா 31:27 2நாளா 30:8 2நாளா 36:13 சங் 95:8 ஏசா 48:4 எரே 3:3 எரே 5:3 எரே 6:15 எரே 8:12 மத் 10:16
5கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.எசே 2:7 எசே 3:10 எசே 3:11 எசே 3:27 மத் 10:12-15 அப் 13:46 ரோம 3:3 2கொரி 2:15-17
6மனுபுத்திரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.எசே 3:8 எசே 3:9 2இரா 1:15 ஏசா 51:12 எரே 1:8 எரே 1:17 மீகா 3:8 மத் 10:28 லூக் 12:4 அப் 4:13 அப் 4:19 அப் 4:29 எபே 6:19 பிலிப் 1:28 2தீமோ 1:7
7கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.எசே 3:10 எசே 3:17 எரே 1:7 எரே 1:17 எரே 23:28 எரே 26:2 யோனா 3:2 மத் 28:20
8மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார்.லேவி 10:3 எண் 20:10-13 எண் 20:24-13 1இரா 13:21 1இரா 13:22 ஏசா 50:5 1பேது 5:3
9அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச்சுருள் இருந்தது.எசே 8:3 எரே 1:9 தானி 5:5 தானி 10:10 தானி 10:16-18
10அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.ஏசா 30:8-11 ஆபகூ 2:2
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.