| 1 | நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி, | எசே 19:14 எசே 2:10 எசே 26:17 எசே 27:2 எசே 32:16 எசே 32:18 எரே 9:1 எரே 9:10 எரே 9:17 எரே 9:18 எரே 13:17 எரே 13:18 |
| 2 | சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகளை வளர்த்தாள். | நாகூ 2:11 நாகூ 2:12 செப் 3:1-4 |
| 3 | தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது. | எசே 19:6 2இரா 23:31 2இரா 23:32 2நாளா 36:1 2நாளா 36:2 |
| 4 | புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள். | 2இரா 23:31 2இரா 23:33 2இரா 23:34 2நாளா 36:4 2நாளா 36:6 எரே 22:11 எரே 22:12 எரே 22:18 |
| 5 | தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய்ப் போயிற்றென்று கண்டு, அது தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதை பாலசிங்கமாக வைத்தது. | எசே 19:3 2இரா 23:34-37 |
| 6 | அது சிங்கங்களுக்குள்ளே சஞ்சரித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது. | 2இரா 24:1-7 2நாளா 36:5 எரே 22:13-17 எரே 26:1-24 எரே 36:1-32 |
| 7 | அவர்களுடைய பாழான அரமனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கிற்று; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்துக்கு தேசமும் அதிலுள்ள யாவும் திகைத்தது. | எசே 22:25 நீதி 19:12 நீதி 28:3 நீதி 28:15 நீதி 28:16 |
| 8 | அப்பொழுது சுற்றுப்புறத்து ஜாதிகள் அதற்கு விரோதமாக எழும்பிவந்து, தங்கள் வலையை அதின்மேல் வீசினார்கள்; அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது. | 2இரா 24:1-6 |
| 9 | அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்குட்படுத்தி, அதைப் பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் பர்வதங்களின்மேல் கேட்கப்படாதபடிக்கு அதை அரணான இடங்களில் கொண்டுபோய் அடைத்தார்கள். | 2நாளா 36:6 எரே 22:18 எரே 22:19 எரே 36:30 எரே 36:31 |
| 10 | நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சச்செடியாயிருந்தாள். | எசே 19:2 ஓசி 2:2 ஓசி 2:5 |
| 11 | ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்தகொப்புகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன் உயர்த்தியினாலே தன் திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றிற்று. | எசே 19:12 எசே 19:14 எசே 21:10 எசே 21:13 ஆதி 49:10 எண் 24:7-9 எண் 24:17-9 எஸ்றா 4:20 எஸ்றா 5:11 சங் 2:8 சங் 2:9 சங் 80:15 சங் 80:17 சங் 110:2 ஏசா 11:1 |
| 12 | ஆனாலும் அது உக்கிரமாய்ப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் கனி காய்ந்துபோயிற்று; அதின் பலத்த கொப்புகள் முறிந்து, பட்டுப்போயின; அக்கினி அவைகளைப் பட்சித்தது. | எசே 15:6-8 சங் 52:5 சங் 80:12 சங் 80:13 சங் 80:16 சங் 89:40-45 ஏசா 5:5 ஏசா 5:6 எரே 31:28 |
| 13 | இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருக்கிறது. | எசே 19:10 உபா 28:47 உபா 28:48 எரே 52:27-31 |
| 14 | அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து அக்கினி புறப்பட்டு, அதின் கனியைப் பட்சித்தது; ஆளுகிற செங்கோலுக்கேற்ற பலத்த கொப்பு இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாயிருக்கும் என்றார். | எசே 17:18-20 நியா 9:15 2இரா 24:20 2நாளா 36:13 ஏசா 9:18 ஏசா 9:19 எரே 38:23 எரே 52:3 |