| 1 | கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும். | புலம் 1:20 புலம் 2:20 புலம் 3:19 நெகே 1:8 யோபு 7:7 யோபு 10:9 எரே 15:15 ஆபகூ 3:2 லூக் 23:42 |
| 2 | எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார் வசமாகவும் தாண்டிப்போயின. | உபா 28:30-68 சங் 79:1 சங் 79:2 ஏசா 1:7 ஏசா 5:17 ஏசா 63:18 எரே 6:12 எசே 7:21 எசே 7:24 செப் 1:13 |
| 3 | திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள். | யாத் 22:24 எரே 18:21 ஓசி 14:3 |
| 4 | எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக்குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது. | உபா 28:48 ஏசா 3:1 எசே 4:9-17 |
| 5 | பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை. | புலம் 1:14 புலம் 4:19 உபா 28:48 உபா 28:65 உபா 28:66 எரே 27:2 எரே 27:8 எரே 27:11 எரே 27:12 எரே 28:14 மத் 11:29 அப் 15:10 |
| 6 | அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம். | ஆதி 24:2 2இரா 10:15 எரே 50:15 எசே 17:18 |
| 7 | எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம். | யாத் 20:5 எரே 16:12 எரே 31:29 எசே 18:2 மத் 23:32-36 |
| 8 | அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை. | ஆதி 9:25 உபா 28:43 நெகே 2:19 நெகே 5:15 நீதி 30:22 |
| 9 | வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தை தேடுகிறோம். | நியா 6:11 2சாமு 23:17 எரே 40:9-12 எரே 41:1-10 எரே 41:18-10 எரே 42:14 எரே 42:16 எசே 4:16 எசே 4:17 எசே 12:18 எசே 12:19 |
| 10 | பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று. | புலம் 3:4 புலம் 4:8 யோபு 30:30 சங் 119:83 |
| 11 | சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள். | உபா 28:30 ஏசா 13:16 சகரி 14:2 |
| 12 | பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை. | புலம் 2:10 புலம் 2:20 புலம் 4:16 ஏசா 47:6 எரே 39:6 எரே 39:7 எரே 52:10 எரே 52:11 எரே 52:25-27 |
| 13 | வாலிபரை எந்திரம் அரைக்கக்கொண்டுபோனார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள். | யாத் 11:5 நியா 16:21 யோபு 31:10 ஏசா 47:2 |
| 14 | முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று. | புலம் 1:4 புலம் 1:19 புலம் 2:10 உபா 16:18 யோபு 29:7-17 யோபு 30:1 ஏசா 3:2 ஏசா 3:3 |
| 15 | எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று. | சங் 30:11 ஆமோ 6:4-7 ஆமோ 8:10 யாக் 4:9 யாக் 4:10 |
| 16 | எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே. | புலம் 1:1 யோபு 19:9 சங் 89:39 எரே 13:18 எசே 21:26 வெளிப் 2:10 வெளிப் 3:11 |
| 17 | அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின. | புலம் 1:13 புலம் 1:22 லேவி 26:36 ஏசா 1:5 எரே 8:18 எரே 46:5 எசே 21:7 எசே 21:15 மீகா 6:13 |
| 18 | பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது. | புலம் 2:8 புலம் 2:9 1இரா 9:7 1இரா 9:8 சங் 74:2 சங் 74:3 எரே 17:3 எரே 26:9 எரே 52:13 மீகா 3:12 |
| 19 | கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். | உபா 33:27 சங் 9:7 சங் 10:16 சங் 29:10 சங் 90:2 சங் 102:12 சங் 102:25-27 ஆபகூ 1:12 1தீமோ 1:17 1தீமோ 6:15 1தீமோ 6:16 எபிரெ 1:10-12 எபிரெ 13:8 வெளிப் 1:4 வெளிப் 1:8 வெளிப் 1:17 வெளிப் 1:18 |
| 20 | தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன? | சங் 13:1 சங் 44:24 சங் 74:1 சங் 77:7-10 சங் 79:5 சங் 85:5 சங் 89:46 சங் 94:3 சங் 94:4 ஏசா 64:9-12 எரே 14:19-21 |
| 21 | கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும். | 1இரா 18:37 சங் 80:3 சங் 80:7 சங் 80:19 சங் 85:4 எரே 31:18 எரே 32:39 எரே 32:40 எசே 11:19 எசே 11:20 எசே 36:25-27 எசே 36:37-27 ஆபகூ 3:2 |
| 22 | எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே! | சங் 44:9 சங் 60:1 சங் 60:2 எரே 15:1-5 எசே 37:11 ஓசி 1:6 |