| 1 | ஐயோ! பொன் மங்கி, பசும்பொன் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே. | 2இரா 25:9 2இரா 25:10 ஏசா 1:21 ஏசா 14:12 எசே 7:19-22 |
| 2 | ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே. | ஏசா 51:18 சகரி 9:13 |
| 3 | திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே. | புலம் 2:20 புலம் 4:10 லேவி 26:29 உபா 28:52-57 2இரா 6:26-29 ஏசா 49:15 எரே 19:9 எசே 5:10 லூக் 23:28 லூக் 23:29 |
| 4 | குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பாரில்லை. | சங் 22:15 சங் 137:6 |
| 5 | ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்ளுகிறார்கள். | உபா 28:54-56 ஏசா 3:16-26 ஏசா 24:6-12 ஏசா 32:9-14 எரே 6:2 எரே 6:3 ஆமோ 6:3-7 லூக் 7:25 1தீமோ 5:6 வெளிப் 18:7-9 |
| 6 | கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப்பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது. | ஏசா 1:9 ஏசா 1:10 எசே 16:48-50 மத் 11:23 மத் 11:24 லூக் 10:12 லூக் 12:47 |
| 7 | அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப்பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள். | எண் 6:2-21 நியா 13:5 நியா 13:7 நியா 16:17 ஆமோ 2:11 ஆமோ 2:12 லூக் 1:15 |
| 8 | இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று. | புலம் 5:10 யோபு 30:17-19 யோபு 30:30-19 யோவே 2:6 நாகூ 2:10 |
| 9 | பசியினால் கொலையுண்டவர்களைப்பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்து போகிறார்கள். | லேவி 26:39 எசே 24:23 எசே 33:10 |
| 10 | இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின. | புலம் 4:3 புலம் 2:20 2இரா 6:26-29 |
| 11 | கர்த்தர் தமது கோபத்தை நிறைவேற்றி, தமது உக்கிரகோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களைப் பட்சித்துப்போட்டது. | புலம் 4:22 புலம் 2:8 புலம் 2:17 உபா 32:21-25 எரே 6:11 எரே 6:12 எரே 7:20 எரே 9:9-11 எரே 13:14 எரே 14:15 எரே 14:16 எரே 15:1-4 எரே 19:3-11 எரே 23:19 எரே 23:20 எரே 24:8-10 எசே 20:47 எசே 20:48 எசே 22:31 தானி 9:12 சகரி 1:6 லூக் 21:22 |
| 12 | சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள். | உபா 29:24-28 1இரா 9:8 1இரா 9:9 சங் 48:4-6 |
| 13 | அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது. | புலம் 2:14 எரே 5:31 எரே 6:13 எரே 14:14 எரே 23:11-21 எசே 22:26-28 மீகா 3:11 மீகா 3:12 செப் 3:3 செப் 3:4 |
| 14 | குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக்கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள். | உபா 28:28 உபா 28:29 ஏசா 29:10-12 ஏசா 56:10 ஏசா 59:9-11 மீகா 3:6 மீகா 3:7 மத் 15:14 எபே 4:18 |
| 15 | விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனி தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது. |
| 16 | கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் நோக்கார்; ஆசாரியருடைய முகத்தைப் பாராமலும் முதியோரை மதியாமலும்போனார்கள். | ஆதி 49:7 லேவி 26:33-39 உபா 28:25 உபா 28:64 உபா 28:65 உபா 32:26 எரே 15:4 எரே 24:9 |
| 17 | இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப்போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். | புலம் 1:19 2இரா 24:7 ஏசா 20:5 ஏசா 30:1-7 ஏசா 31:1-3 எரே 2:18 எரே 2:36 எரே 8:20 எரே 37:7-10 எசே 29:6 எசே 29:7 எசே 29:16 |
| 18 | நாங்கள் எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு சமீபித்தது; எங்கள் நாட்கள் நிறைவேறிப்போயின; எங்கள் முடிவு வந்துவிட்டது. | புலம் 3:52 1சாமு 24:14 2இரா 25:4 2இரா 25:5 யோபு 10:16 சங் 140:11 எரே 16:16 எரே 39:4 எரே 39:5 எரே 52:7-9 |
| 19 | எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைப்பார்க்கிலும் வேகமாயிருந்தார்கள்; பர்வதங்கள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; வனாந்தரத்தில் எங்களுக்குப் பதிவிருந்தார்கள். | உபா 28:49 ஏசா 5:26-28 ஏசா 30:16 ஏசா 30:17 எரே 4:13 ஓசி 8:1 ஆபகூ 1:8 மத் 24:27 மத் 24:28 |
| 20 | கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே. | புலம் 2:9 ஆதி 2:7 ஆதி 44:30 2சாமு 18:3 |
| 21 | ஊத்ஸ்தேசவாசியாகிய ஏதோம் குமாரத்தியே, சந்தோஷித்துக் களிகூரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் தாண்டிவரும், அப்பொழுது நீ வெறித்து, மானபங்கமாய்க்கிடப்பாய். | சங் 83:3-12 சங் 137:7 பிரச 11:9 எசே 25:6 எசே 25:8 எசே 26:2 எசே 35:11-15 ஒபதி 1:10-16 |
| 22 | சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார். | புலம் 4:6 ஏசா 40:2 எரே 46:27 எரே 46:28 எரே 50:20 |