இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 32

                   
புத்தகங்களைக் காட்டு
1இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 40:1-5 2சாமு 23:3 2நாளா 31:20 2நாளா 31:21 சங் 45:1 சங் 45:6 சங் 45:7 சங் 72:1 சங் 72:2 சங் 99:4 எரே 23:5 எரே 23:6 எரே 33:15 ஓசி 3:5 சகரி 9:9 ரோம 5:21 எபிரெ 1:8 எபிரெ 1:9 வெளிப் 19:11
2அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.ஏசா 7:14 ஏசா 8:10-14 ஏசா 9:6 சங் 146:3-5 மீகா 5:4 மீகா 5:5 சகரி 13:7 1தீமோ 3:16
3அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.ஏசா 29:18 ஏசா 29:24 ஏசா 30:26 ஏசா 35:5 ஏசா 35:6 ஏசா 54:13 ஏசா 60:1 ஏசா 60:2 எரே 31:34 மத் 13:11 மாற் 7:37 மாற் 8:22-25 அப் 26:18 2கொரி 4:6 1யோவா 2:20 1யோவா 2:21
4பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.ஏசா 29:24 நெகே 8:8-12 மத் 11:25 மத் 16:17 அப் 6:7 அப் 26:9-11 கலா 1:23
5மூடன் இனி தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.ஏசா 5:20 சங் 15:4 மல்கி 3:18
6ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.1சாமு 24:13 1சாமு 25:10 1சாமு 25:11 எரே 13:23 மத் 12:34-36 மத் 15:19 யாக் 3:5 யாக் 3:6
7லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.ஏசா 1:23 ஏசா 5:23 எரே 5:26-28 மீகா 2:11 மீகா 7:3 மத் 26:14-16 மத் 26:59-16 மத் 26:60-16
8தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.2சாமு 9:1-13 யோபு 31:16-21 சங் 112:9 நீதி 11:24 லூக் 6:33-35 அப் 9:39 அப் 11:29 அப் 11:30 2கொரி 8:2 2கொரி 9:6-11
9சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.ஏசா 3:16 ஏசா 47:7 ஏசா 47:8 உபா 28:56 எரே 6:2-6 எரே 48:11 எரே 48:12 புலம் 4:5 ஆமோ 6:1-6
10நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போகும்; அறுப்புக்காலம் வராது.ஏசா 3:17-26 ஏசா 24:7-12 எரே 25:10 எரே 25:11 ஓசி 3:4
11சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்; உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.ஏசா 2:19 ஏசா 2:21 ஏசா 22:4 ஏசா 22:5 ஏசா 33:14 லூக் 23:27-30 யாக் 5:5
12செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.புலம் 2:11 புலம் 4:3 புலம் 4:4
13என் ஜனத்தினுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.ஏசா 6:11 ஏசா 7:23 ஏசா 34:13 சங் 107:34 ஓசி 9:6 ஓசி 10:8
14அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.ஏசா 5:9 ஏசா 24:1-3 ஏசா 24:10-3 ஏசா 24:12-3 ஏசா 25:2 ஏசா 27:10 2இரா 25:9 லூக் 21:20 லூக் 21:24
15உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.ஏசா 11:2 ஏசா 11:3 ஏசா 44:3 ஏசா 45:8 ஏசா 59:19-21 ஏசா 63:11 சங் 104:30 சங் 107:33 நீதி 1:23 எசே 39:29 யோவே 2:28 யோவே 2:29 சகரி 12:10 லூக் 24:49 யோவா 7:39 அப் 2:17 அப் 2:18 அப் 2:33 2கொரி 3:8 தீத் 3:5 தீத் 3:6
16வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.ஏசா 35:8 ஏசா 42:4 ஏசா 56:6-8 ஏசா 60:21 சங் 94:14 சங் 94:15 ஓசி 3:5 1கொரி 6:9-11 தீத் 2:11 தீத் 2:12 1பேது 2:9-12 1பேது 4:1-4
17நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.ஏசா 26:3 ஏசா 48:18 ஏசா 54:13 ஏசா 54:14 ஏசா 55:12 ஏசா 57:19 ஏசா 66:12 சங் 72:2 சங் 72:3 சங் 85:8 சங் 119:165 ரோம 14:17 பிலிப் 4:6-9 யாக் 3:17 யாக் 3:18
18என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.ஏசா 33:20-22 ஏசா 35:9 ஏசா 35:10 ஏசா 60:17 ஏசா 60:18 எரே 23:5 எரே 23:6 எரே 33:16 எசே 34:25 எசே 34:26 ஓசி 2:18-23 சகரி 2:5 சகரி 2:8 எபிரெ 4:9 1யோவா 4:16
19ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோகும்.ஏசா 25:4 ஏசா 28:2 ஏசா 28:17 ஏசா 30:30 ஏசா 37:24 யாத் 9:18-26 எசே 13:11-13 மத் 7:25 வெளிப் 8:7
20மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.ஏசா 19:5-7 ஏசா 30:23 ஏசா 55:10 ஏசா 55:11 பிரச 11:1 அப் 2:41 அப் 4:4 அப் 5:14 1கொரி 3:6 யாக் 3:18
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.