| 1 | எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்து போகும். | எரே 25:19 எரே 43:8-13 எரே 44:29 எரே 44:30 எரே 46:1-28 எசே 29:1-32 யோவே 3:19 சகரி 10:11 சகரி 14:18 |
| 2 | சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும், ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன். | ஏசா 19:13 ஏசா 19:14 ஏசா 9:21 நியா 7:22 நியா 9:23 1சாமு 14:16 1சாமு 14:20 2நாளா 20:22 2நாளா 20:23 எசே 38:21 மத் 12:25 வெளிப் 17:12-17 |
| 3 | அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை முழுகிப்போகப்பண்ணுவேன்; அப்பொழுது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும், சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள். | ஏசா 19:1 ஏசா 19:11-13 ஏசா 57:16 1சாமு 25:37 சங் 76:12 எரே 46:15 எசே 21:7 எசே 22:14 |
| 4 | நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்புவிப்பேன்; கடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | 1சாமு 23:7 சங் 31:8 |
| 5 | அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம். | எரே 51:36 எசே 30:12 சகரி 10:11 சகரி 14:18 |
| 6 | ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோகும்; கொறுக்கையும் நாணலும் வாடும். | ஏசா 37:25 2இரா 19:24 |
| 7 | நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோகும்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோகும். | ஏசா 32:20 எரே 14:4 எசே 19:13 யோவே 1:17 யோவே 1:18 |
| 8 | மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிற யாவரும் துக்கிப்பார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள். | யாத் 7:21 எண் 11:5 எசே 47:10 ஆபகூ 1:15 |
| 9 | மெல்லிய சணலைப் பக்குவப்படுத்துகிறவர்களும், சல்லாக்களை நெய்கிறவர்களும் நாணுவார்கள். | 1இரா 10:28 நீதி 7:16 எசே 27:7 |
| 10 | மீன் வளர்க்கிற குளங்களைக் கூலிக்கு அணைக்கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோகும். | யாத் 7:19 யாத் 8:5 உபா 11:10 |
| 11 | சோவான் பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்? | ஏசா 19:3 ஏசா 19:13 ஏசா 29:14 ஏசா 44:25 யோபு 5:12 யோபு 5:13 யோபு 12:17 சங் 33:10 எரே 49:7 எசே 7:26 1கொரி 1:19 1கொரி 1:20 |
| 12 | அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் கர்த்தர் எகிப்தைக்குறித்துப்பண்ணின யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும். | ஏசா 5:21 ஏசா 47:10-13 நியா 9:38 எரே 2:28 1கொரி 1:20 |
| 13 | சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பப்பண்ணுகிறார்கள். | ஏசா 19:11 ரோம 1:22 |
| 14 | கர்த்தர் அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரப்பண்ணினார்; ஆனதுகொண்டு வெறியன் வாந்திபண்ணி, தள்ளாடித் திரிகிறதுபோல, அவர்கள் எகிப்தை அதின் எல்லாச்செய்கையிலும் தள்ளாடித் திரியப்பண்ணுகிறார்கள். | ஏசா 19:2 ஏசா 29:10 ஏசா 29:14 ஏசா 47:10 ஏசா 47:11 1இரா 22:20-23 யோபு 12:16 எசே 14:7-9 2தெச 2:11 |
| 15 | எகிப்தில் தலையாகிலும் வாலாகிலும் கிளையாகிலும் நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது. | ஏசா 9:14 ஏசா 9:15 சங் 128:2 நீதி 14:23 ஆபகூ 3:17 ஆகா 1:11 1தெச 4:11 1தெச 4:12 |
| 16 | அக்காலத்திலே எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து, சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவினாலே அஞ்சி நடுங்குவார்கள். | ஏசா 30:17 சங் 48:6 எரே 30:5-7 எரே 50:37 எரே 51:30 நாகூ 3:13 |
| 17 | சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையினிமித்தம் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் திடுக்கிடுவான். | ஏசா 36:1 எரே 25:19 எரே 25:27-31 எரே 43:8-13 எரே 44:28-30 எசே 29:6 எசே 29:7 |
| 18 | அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று நிர்மூலமான பட்டணம் என்னப்படும். | ஏசா 19:19 ஏசா 19:21 ஏசா 2:11 சகரி 2:11 |
| 19 | அக்காலத்திலே எகிப்து தேசத்தின் நடுவிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே கர்த்தருக்கு ஒரு ஸ்தம்பமும் உண்டாயிருக்கும். | ஏசா 66:23 ஆதி 12:7 ஆதி 28:18 யாத் 24:4 யோசு 22:10 யோசு 22:26 சகரி 6:15 எபிரெ 13:10 |
| 20 | அது எகிப்துதேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார். | ஏசா 55:13 யோசு 4:20 யோசு 4:21 யோசு 22:27 யோசு 22:28 யோசு 22:34 யோசு 24:26 யோசு 24:27 |
| 21 | அப்பொழுது கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, கர்த்தருக்குப் பொருத்தனைகளைப் பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள். | ஏசா 11:9 ஏசா 37:20 ஏசா 55:5 1சாமு 17:46 1இரா 8:43 சங் 67:2 சங் 98:2 சங் 98:3 ஆபகூ 2:14 யோவா 17:3 கலா 4:8 கலா 4:9 |
| 22 | கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார். | ஏசா 19:1-15 உபா 32:39 யோபு 5:18 ஓசி 5:15 ஓசி 6:2 எபிரெ 12:11 |
| 23 | அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிறபெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள். | ஏசா 11:16 ஏசா 35:8-10 ஏசா 40:3-5 எபே 2:18-22 எபே 3:6-8 |
| 24 | அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும். | ஏசா 6:13 ஏசா 49:6 ஏசா 49:22 ஏசா 65:8 ஏசா 65:22 ஏசா 66:12 ஏசா 66:19-21 உபா 32:43 சங் 117:1 சங் 117:2 சகரி 2:10 சகரி 2:11 சகரி 8:20-23 லூக் 2:32 ரோம 10:11-13 ரோம 15:9-12 ரோம 15:27-12 |
| 25 | அவர்களைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார். | ஏசா 61:9 ஏசா 65:23 எண் 6:24 எண் 6:27 எண் 24:1 சங் 67:6 சங் 67:7 சங் 115:15 எபே 1:3 |