| 1 | ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்டபாரம். | ஏசா 14:28 ஏசா 15:1 ஏசா 17:1 ஏசா 19:1 ஏசா 21:1 ஏசா 21:11 ஏசா 21:13 ஏசா 22:1 ஏசா 22:25 ஏசா 23:1 எரே 23:33-38 எசே 12:10 நாகூ 1:1 ஆபகூ 1:1 சகரி 9:1 சகரி 12:1 மல்கி 1:1 |
| 2 | உயர்ந்த பர்வதத்தின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு ஜனங்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் பிரவேசிப்பதற்குச் சைகை காட்டுங்கள். | ஏசா 5:26 ஏசா 11:12 ஏசா 18:3 எரே 50:2 எரே 51:27 எரே 51:28 |
| 3 | நான் பரிசுத்தமாக்கினவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார். | ஏசா 23:11 ஏசா 44:27 ஏசா 44:28 ஏசா 45:4 ஏசா 45:5 எரே 50:21-46 |
| 4 | திரளான ஜனங்களின் சத்தத்துக்கொத்த வெகு கூட்டத்தின் இரைச்சலும், கூட்டப்பட்ட ஜாதிகளுடைய ராஜ்யங்களின் அமளியான இரைச்சலும் மலைகளில் கேட்கப்படுகிறது; சேனைகளின் கர்த்தர் யுத்தராணுவத்தை இலக்கம்பார்க்கிறார். | ஏசா 22:1-9 எரே 50:2 எரே 50:3 எரே 50:21-46 எரே 51:11 எரே 51:27 எரே 51:28 எசே 38:3-23 யோவே 3:14 சகரி 14:1-3 சகரி 14:13-3 சகரி 14:14-3 வெளிப் 19:11-21 |
| 5 | கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது. | ஏசா 13:17 எரே 50:3 எரே 50:9 எரே 51:11 எரே 51:27 எரே 51:28 மத் 24:31 |
| 6 | அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும். | ஏசா 14:31 ஏசா 23:1 ஏசா 52:5 ஏசா 65:14 எரே 25:34 எரே 49:3 எரே 51:8 எசே 21:12 எசே 30:2 யோவே 1:5 யோவே 1:11 யோவே 1:13 செப் 1:14 யாக் 5:1 வெளிப் 18:10 |
| 7 | ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோகும். | ஏசா 10:3 ஏசா 10:4 ஏசா 37:27 ஏசா 51:20 எரே 50:43 எசே 7:17 எசே 21:7 நாகூ 1:6 |
| 8 | அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப்பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் பிரமித்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும். | ஏசா 21:3 ஏசா 21:4 ஏசா 26:17 சங் 48:5 சங் 48:6 எரே 30:6 எரே 50:43 தானி 5:5 தானி 5:6 1தெச 5:3 |
| 9 | இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது. | ஏசா 13:15-18 ஏசா 47:10-15 எரே 6:22 எரே 6:23 எரே 50:40-42 எரே 51:35-58 நாகூ 1:2 நாகூ 1:6 மல்கி 4:1 வெளிப் 17:16 வெளிப் 17:17 வெளிப் 18:8 வெளிப் 19:17-21 |
| 10 | வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோகும்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும். | ஏசா 5:30 ஏசா 24:21 ஏசா 24:23 எசே 32:7 எசே 32:8 யோவே 2:10 யோவே 2:31 யோவே 3:15 ஆமோ 8:9 ஆமோ 8:10 செப் 1:15 செப் 1:16 மத் 24:29 மாற் 13:24 லூக் 21:25 வெளிப் 6:12-14 வெளிப் 8:12 |
| 11 | பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன். | ஏசா 14:21 ஏசா 24:4-6 எரே 51:34-38 வெளிப் 12:9 வெளிப் 12:10 வெளிப் 18:2 வெளிப் 18:3 |
| 12 | புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூர்வமாக்குவேன். | ஏசா 13:15-18 ஏசா 4:1 ஏசா 24:6 சங் 137:9 |
| 13 | இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன். | யோவே 3:16 ஆகா 2:6 ஆகா 2:7 ஆகா 2:21 ஆகா 2:22 மத் 24:29 எபிரெ 12:26 எபிரெ 12:27 வெளிப் 6:13 வெளிப் 6:14 |
| 14 | துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப்போக முகத்தைத்திருப்பி, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள். | ஏசா 17:13 1இரா 22:17 1இரா 22:36 |
| 15 | அகப்பட்டவனெவனும் குத்துண்டு, அவர்களைச் சேர்ந்திருந்தவனெவனும் பட்டயத்தால் விழுவான். | ஏசா 14:19-22 ஏசா 47:9-14 எரே 50:27 எரே 50:35-42 எரே 51:3 |
| 16 | அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள். | சங் 137:8 சங் 137:9 ஓசி 10:14 நாகூ 3:10 |
| 17 | இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும், | ஏசா 13:3-5 ஏசா 21:2 ஏசா 41:25 எரே 50:9 எரே 51:11 எரே 51:27 எரே 51:28 தானி 5:28-31 |
| 18 | வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை. | ஏசா 13:16 2இரா 8:12 ஓசி 13:16 நாகூ 2:1 நாகூ 3:10 |
| 19 | ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும். | ஏசா 14:4-6 ஏசா 14:12-15 எரே 51:41 தானி 2:37 தானி 2:38 தானி 4:30 |
| 20 | இனி ஒருபோதும், அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை. | ஏசா 14:23 எரே 50:3 எரே 50:13 எரே 50:21 எரே 50:39 எரே 50:45 எரே 51:25 எரே 51:29 எரே 51:43 எரே 51:62-64 வெளிப் 18:21-23 |
| 21 | காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும். | ஏசா 34:11-15 வெளிப் 18:2 |
| 22 | அவர்கள் பாழான மாளிகைகளில் ஓரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் செல்விக்கையான அரமனைகளில் ஏகமாய்க் கூடும்; அதின் காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடித்திராது என்கிறார். | ஏசா 35:7 |