இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.நீதி 1:8 நீதி 6:20-23 சங் 34:11 1தெச 2:11 1தெச 2:12
2நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.நீதி 8:6-9 நீதி 22:20 நீதி 22:21 உபா 32:2 யோபு 33:3 சங் 49:1-3 யோவா 7:16 யோவா 7:17 1தீமோ 4:6 தீத் 1:9
3நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.2சாமு 12:24 2சாமு 12:25 1இரா 1:13-17 1நாளா 3:5 1நாளா 22:5 1நாளா 29:1 எரே 10:23 ரோம 12:16
4அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.நீதி 22:6 ஆதி 18:19 1நாளா 22:11-16 1நாளா 28:9 எபே 6:4 2தீமோ 1:5 2தீமோ 3:15
5ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.நீதி 1:22 நீதி 1:23 நீதி 2:2-4 நீதி 3:13-18 நீதி 8:5 நீதி 17:16 நீதி 18:1 நீதி 19:8 நீதி 23:23 யாக் 1:5
6அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.நீதி 4:21 நீதி 4:22 நீதி 2:10-12 எபே 3:17 2தெச 2:10
7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.பிரச 7:12 பிரச 9:16-18 மத் 13:44-46 லூக் 10:42 பிலிப் 3:8
8நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.நீதி 3:35 நீதி 22:4 1சாமு 2:30 1இரா 3:5-13 தானி 12:3
9அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.நீதி 1:9 நீதி 3:22 1தீமோ 2:9 1தீமோ 2:10 1பேது 3:4
10என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.நீதி 8:10 நீதி 19:20 யோபு 22:22 எரே 9:20 யோவா 3:32 யோவா 3:33 1தெச 2:13 1தீமோ 1:15
11ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.நீதி 4:4 உபா 4:5 1சாமு 12:24 பிரச 12:9
12நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.நீதி 6:22 2சாமு 22:37 யோபு 18:7 யோபு 18:8 சங் 18:36
13புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.நீதி 3:18 நீதி 23:23 அப் 2:42 அப் 11:23 1தெச 5:21 எபிரெ 2:1 வெளிப் 2:13 வெளிப் 12:11
14துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.நீதி 1:10 நீதி 1:15 நீதி 2:11 நீதி 2:12 நீதி 9:6 நீதி 13:20 சங் 1:1 சங் 26:4 சங் 26:5 1கொரி 15:33
15அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.நீதி 5:8 நீதி 6:5 யாத் 23:7 யோபு 11:14 யோபு 22:23 ஏசா 33:15 எபே 5:11 1தெச 5:22
16பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோகும்.நீதி 1:16 சங் 36:4 ஏசா 57:20 மீகா 2:1 லூக் 22:66 யோவா 18:28 2பேது 2:14
17அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.நீதி 9:17 நீதி 20:17 யோபு 24:5 யோபு 24:6 சங் 14:4 எரே 5:26-28 எசே 22:25-29 ஆமோ 8:4-6 மீகா 3:5 மீகா 6:12 செப் 3:3 மத் 23:14 யாக் 5:4 யாக் 5:5
18நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.2சாமு 23:4 யோபு 11:17 யோபு 23:10 சங் 84:7 ஓசி 6:3 சகரி 14:6 சகரி 14:7 மத் 5:14 மத் 5:16 மத் 5:45 யோவா 8:12 2கொரி 3:18 பிலிப் 2:15 2பேது 1:19 2பேது 3:18 வெளிப் 21:23 வெளிப் 22:5
19துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.1சாமு 2:9 யோபு 5:14 யோபு 12:25 யோபு 18:5 யோபு 18:6 யோபு 18:18 ஏசா 59:9 ஏசா 59:10 எரே 13:16 எரே 23:12 மத் 7:23 மத் 15:14 யோவா 12:35 1யோவா 2:11
20என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.நீதி 5:1 நீதி 6:20 நீதி 6:21 நீதி 7:1 சங் 78:1 சங் 90:12 ஏசா 55:3 மத் 17:5
21அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.நீதி 3:3 நீதி 3:21
22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.நீதி 4:4 நீதி 4:10
23எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்.நீதி 22:5 நீதி 23:19 நீதி 28:26 உபா 4:9 சங் 139:23 சங் 139:24 எரே 17:9 மாற் 14:38 எபிரெ 12:15
24வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.யோபு 11:14 எசே 18:31 எபே 4:25-31 கொலோ 3:8 யாக் 1:21 யாக் 1:26 1பேது 2:1
25உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.நீதி 23:5 நீதி 23:33 யோபு 31:1 சங் 119:37 மத் 6:22
26உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.நீதி 5:6 சங் 119:59 எசே 18:28 ஆகா 1:5 ஆகா 1:7 எபே 5:15 எபே 5:17
27வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.உபா 5:32 உபா 12:32 உபா 28:14 யோசு 1:7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.