இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 48

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.2நாளா 20:1-37 சங் 30:1
2வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.சங் 50:2 எரே 3:19 புலம் 2:15 தானி 8:9 தானி 11:16
3அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.சங் 76:1-5 சங் 125:1 2நாளா 12:7 2நாளா 14:9-15 2நாளா 20:1-37 ஏசா 4:5 ஏசா 4:6 ஏசா 37:33-36 சகரி 2:4 சகரி 2:5
4இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.சங் 83:2-8 2சாமு 10:6 2சாமு 10:14 2சாமு 10:16-19 ஏசா 7:1 ஏசா 8:8-10 ஏசா 10:8 ஏசா 29:5-8 வெளிப் 17:12-14 வெளிப் 19:20 வெளிப் 20:8 வெளிப் 20:9
5அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.யாத் 14:25 2இரா 7:6 2இரா 7:7 2இரா 19:35-37
6அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.யாத் 15:15 யாத் 15:16 ஏசா 13:6-8 தானி 5:6
7கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.எசே 27:25 எசே 27:26
8நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா)சங் 44:1 சங் 44:2 சங் 78:3-6 ஏசா 38:19
9தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.சங் 26:3 சங் 77:10 சங் 77:11 சங் 104:34 சங் 105:5 சங் 105:6
10தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.சங் 113:3 சங் 138:2-4 யாத் 3:13-15 யாத் 34:5-7 உபா 28:58 யோசு 7:9 மல்கி 1:11 மல்கி 1:14
11உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.சங் 97:8 உன்ன 1:5 உன்ன 2:7 உன்ன 3:5 உன்ன 5:16 ஏசா 37:22 சகரி 9:9 லூக் 23:28
12சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.நெகே 12:31-40 மத் 24:1 மத் 24:2
13பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.ஏசா 58:12 ஆமோ 9:11 அப் 15:14-16
14இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.சங் 16:2 சங் 31:14 சங் 73:24 சங் 73:26 புலம் 3:21
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.