| 1 | பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையவை. | சங் 50:12 யாத் 9:29 யாத் 19:5 உபா 10:14 1நாளா 29:11 யோபு 41:11 தானி 4:25 1கொரி 10:26 |
| 2 | ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். | சங் 33:6 சங் 95:4 சங் 104:5 சங் 104:6 சங் 136:6 ஆதி 1:9 ஆதி 1:10 யோபு 38:4 எரே 10:11-16 2பேது 3:5-7 |
| 3 | யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? | சங் 15:1 சங் 68:18 யோவா 13:36 யோவா 20:17 எபே 4:8-10 |
| 4 | கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. | சங் 18:20 சங் 26:6 யோபு 9:30 யோபு 17:9 ஏசா 1:15 ஏசா 1:16 ஏசா 33:15 ஏசா 33:16 1தீமோ 2:8 யாக் 4:8 |
| 5 | அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். | சங் 50:23 சங் 67:6 சங் 67:7 சங் 72:17 சங் 115:12 சங் 115:13 சங் 128:1-5 எண் 6:24-27 ஏசா 33:15-17 மத் 5:3-12 யோவா 7:17 ரோம 4:6-9 கலா 3:9 கலா 3:14 எபே 1:3 1பேது 3:9 |
| 6 | இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா) | சங் 22:30 சங் 73:15 ஏசா 53:10 ரோம 4:16 1பேது 2:9 |
| 7 | வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார். | சங் 118:19 சங் 118:20 ஏசா 26:2 |
| 8 | யார் இந்த மகிமையின் இராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே. | சங் 45:3-6 சங் 50:1 சங் 93:1 ஏசா 9:6 ஏசா 19:24-25 ஏசா 63:1-6 கொலோ 2:15 வெளிப் 6:2 வெளிப் 19:11-21 |
| 9 | வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார். |
| 10 | யார் இந்த மகிமையின் இராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் இராஜா. (சேலா) | ஏசா 6:3-5 ஏசா 54:5 ஓசி 12:3-5 சகரி 2:8-11 யோவா 12:40 யோவா 14:9 |