| 1 | முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா, | நெகே 9:38 |
| 2 | செராயா, அசரியா, எரேமியா, | நெகே 3:23 நெகே 11:11 நெகே 12:1 நெகே 12:33 நெகே 12:34 |
| 3 | பஸ்கூர், அமரியா, மல்கிஜா, | நெகே 11:12 |
| 4 | அத்தூஸ், செபனியா, மல்லூக், | நெகே 3:10 |
| 5 | ஆரீம், மெரெமோத், ஒபதியா, | நெகே 3:11 |
| 6 | தானியேல், கிநேதோன், பாருக், | நெகே 12:4 |
| 7 | மெசுல்லாம், அபியா, மீயாமின், | நெகே 3:6 நெகே 8:4 நெகே 11:11 நெகே 12:13 நெகே 12:25-33 |
| 8 | மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும், | நெகே 12:5 |
| 9 | லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும், | நெகே 3:19 நெகே 7:43 நெகே 8:7 நெகே 9:4 |
| 10 | அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான், | நெகே 8:7 நெகே 9:4 நெகே 9:5 எஸ்றா 10:23 |
| 11 | மீகா, ரேகோப், அசபியா, | நெகே 11:15 நெகே 11:22 நெகே 12:24 எஸ்றா 8:19 எஸ்றா 8:24 |
| 12 | சக்கூர், செரெபியா, செபனியா, | நெகே 8:7 நெகே 9:4 நெகே 12:8 |
| 13 | ஒதியா, பானி, பெனினு என்பவர்களும், |
| 14 | ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி, | நெகே 3:11 நெகே 7:8 நெகே 7:11-13 |
| 15 | புன்னி, அஸ்காத், பெபாயி, | நெகே 7:16 நெகே 7:17 எஸ்றா 2:11 எஸ்றா 2:12 எஸ்றா 8:11 எஸ்றா 8:12 எஸ்றா 10:28 |
| 16 | அதோனியா, பிக்வாய், ஆதின், | நெகே 7:19-21 எஸ்றா 2:14-16 எஸ்றா 8:14 |
| 17 | ஆதேர், இஸ்கியா, அசூர், |
| 18 | ஒதியா, ஆசூம், பெத்சாய், | நெகே 7:22-73 எஸ்றா 2:17-70 |
| 19 | ஆரீப், ஆனதோத், நெபாய், |
| 20 | மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர், |
| 21 | மெஷெசாபெயேல், சாதோக், யதுவா, |
| 22 | பெலத்தியா, ஆனான், ஆனாயா, |
| 23 | ஓசெயா, அனனியா, அசூப், |
| 24 | அல்லோகேஸ், பிலகா, சோபேக், |
| 25 | ரேகூம், அஷபனா, மாசெயா, | நெகே 3:17-32 |
| 26 | அகியா, கானான், ஆனான், |
| 27 | மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே. |
| 28 | ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும், | நெகே 7:72 நெகே 7:73 எஸ்றா 2:36-43 எஸ்றா 2:70-43 |
| 29 | தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும், | ஏசா 14:1 அப் 11:23 அப் 17:34 ரோம 12:9 |
| 30 | நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக்கொள்ளாமலும் இருப்போம் என்றும், | யாத் 34:16 உபா 7:3 எஸ்றா 9:1-3 எஸ்றா 9:12-14 எஸ்றா 10:10-12 |
| 31 | தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத்தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள். | நெகே 13:15-22 யாத் 20:10 லேவி 23:3 உபா 5:12-14 ஏசா 58:13 ஏசா 58:14 எரே 17:21 எரே 17:22 |
| 32 | மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்திய போஜனபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும், | ஆதி 28:22 நீதி 3:9 |
| 33 | எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம். | லேவி 24:5 2நாளா 2:4 |
| 34 | நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும். லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம். | 1நாளா 24:5 1நாளா 24:7 1நாளா 25:8 1நாளா 25:9 நீதி 18:18 |
| 35 | நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும், | யாத் 23:19 யாத் 34:26 லேவி 19:23-26 எண் 18:2 எண் 18:12 உபா 26:2 2நாளா 31:3-10 நீதி 3:9 நீதி 3:10 மல்கி 3:8-12 |
| 36 | நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும், | யாத் 13:2 யாத் 13:12-15 யாத் 34:19 லேவி 27:26 லேவி 27:27 எண் 18:15 எண் 18:16 உபா 12:6 |
| 37 | நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்துக்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும், | லேவி 23:17 எண் 15:19-21 எண் 18:12 எண் 18:13 உபா 18:4 உபா 26:2 |
| 38 | லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம். | எண் 18:26-28 |
| 39 | பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும், வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம். | உபா 12:6-11 உபா 12:17-11 உபா 14:23-27 2நாளா 31:12 |