| 1 | யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள். | 1நாளா 2:5 ஆதி 38:29 ஆதி 46:12 எண் 26:20 எண் 26:21 ரூத் 4:18 மத் 1:3 லூக் 3:33 |
| 2 | சோபாலின் குமாரன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும், லாகாதையும் பெற்றான்; சோராத்தியரின் வம்சங்கள் இவைகளே. | 1நாளா 2:52 |
| 3 | ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பேர் அத்செலெல்போனி; | நியா 15:11 2நாளா 11:6 |
| 4 | கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர். | 1நாளா 4:18 1நாளா 4:39 யோசு 15:36 |
| 5 | தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு பெண்ஜாதிகள் இருந்தார்கள். | 1நாளா 2:24 |
| 6 | நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் குமாரர்கள் இவர்களே. |
| 7 | ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள். |
| 8 | கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் குமாரனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான். |
| 9 | யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். | ஆதி 34:19 ஏசா 43:4 அப் 17:11 |
| 10 | யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். | 1நாளா 16:8 ஆதி 12:8 யோபு 12:4 சங் 55:16 சங் 99:6 சங் 116:2-4 எரே 33:3 ரோம 10:12-14 1கொரி 1:2 |
| 11 | சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன். |
| 12 | எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனுஷர். |
| 13 | கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத். | யோசு 15:17 நியா 1:13 நியா 3:9-11 |
| 14 | மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள். | 2இரா 24:14 நெகே 11:35 |
| 15 | எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர், ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ். | எண் 13:6 எண் 13:30 எண் 14:6-10 எண் 14:24-10 எண் 14:30-10 யோசு 14:6-14 யோசு 15:13-20 நியா 1:12-14 |
| 16 | எகலெலேலின் குமாரர், சீப், சீப்பா, திரியா, அசாரெயேல். |
| 17 | எஸ்றாவின் குமாரர் யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் பெண்ஜாதி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள். | 1நாளா 4:19 1நாளா 6:57 யோசு 15:50 |
| 18 | அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே. | 1நாளா 4:4 1நாளா 4:39 1நாளா 2:42 யோசு 15:58 |
| 19 | நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய பெண்ஜாதியின் குமாரர், கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தேமோவாவுமே. | யோசு 15:44 1சாமு 23:1-13 |
| 20 | ஷீமோனின் குமாரர், அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் குமாரர், சோகேதும் பென்சோகேதுமே. |
| 21 | யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேசாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும், | 1நாளா 2:3 1நாளா 9:5 ஆதி 38:5 ஆதி 46:12 எண் 26:20 நெகே 11:5 |
| 22 | யோக்கீமும், கோசேபாவின் மனுஷரும், மோவாபியரை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் பூர்வகாலத்தின் செய்திகள். |
| 23 | இவர்கள் குயவராயிருந்து, நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள். | 1நாளா 4:14 சங் 81:6 |
| 24 | சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள். | ஆதி 46:10 யாத் 6:15 |
| 25 | இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா. |
| 26 | மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி. |
| 27 | சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரரைப்போலப் பெருகினதுமில்லை. | எண் 2:4 எண் 2:13 எண் 26:14 எண் 26:22 |
| 28 | அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும், | யோசு 15:28 யோசு 15:29 யோசு 19:2 யோசு 19:3 யோசு 19:9 |
| 29 | பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும், | யோசு 19:3 |
| 30 | பெத்தூவேலிலும், ஒர்மாவிலும், சிக்லாகிலும், | யோசு 19:4 |
| 31 | பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது. | யோசு 19:5 யோசு 19:6 |
| 32 | அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள். | யோசு 19:7 |
| 33 | அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே. | யோசு 19:8 |
| 34 | மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும், |
| 35 | யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் குமாரன் ஏகூவும், |
| 36 | எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும், |
| 37 | செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் புத்திரனாகிய சீப்பியின் குமாரன் சீசாவும் என்று, |
| 38 | பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் தங்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள்; இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள். | 1நாளா 5:24 ஆதி 6:4 |
| 39 | தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய், | 1நாளா 4:4 1நாளா 4:18 யோசு 12:13 |
| 40 | நல்ல செழிப்பான மேய்ச்சலையும், அமரிக்கையும், சுகமுமுள்ள விஸ்தாரமான தேசத்தையும் கண்டுபிடித்தார்கள்; பூர்வத்திலே காமின் சந்ததியார் அங்கே குடியிருந்தார்கள். | நியா 18:7-10 |
| 41 | பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள். | 2இரா 18:8-12 ஏசா 14:28-32 |
| 42 | சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய், | ஆதி 36:8 ஆதி 36:9 உபா 1:2 |
| 43 | அமலேக்கியரில் தப்பி மீதியாயிருந்தவர்களை மடங்கடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள். | யாத் 17:14-16 உபா 25:17-19 1சாமு 15:7 1சாமு 15:8 1சாமு 30:17 2சாமு 8:12 |