| 1 | தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகிநோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த கீலேயாப் இரண்டாம் குமாரன். | 2சாமு 3:2-5 |
| 2 | கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன். | 2சாமு 13:1 2சாமு 13:20-28 2சாமு 13:38-28 2சாமு 18:14 2சாமு 18:18 2சாமு 18:33 2சாமு 19:4-10 |
| 3 | அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன். | 2சாமு 3:5 |
| 4 | இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழு வருஷமும் ஆறு மாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான். | 2சாமு 2:11 2சாமு 5:4 2சாமு 5:5 1இரா 2:11 |
| 5 | எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சேபாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும், | 1நாளா 14:4 2சாமு 5:14 |
| 6 | இப்கார், எலிசாமா, எலிப்பெலேத், | 1நாளா 14:5 2சாமு 5:15 |
| 7 | நோகா, நேபேக், யப்பியா, | 2சாமு 5:15 2சாமு 5:16 |
| 8 | எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே. | 1நாளா 14:7 |
| 9 | மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர். | 2சாமு 5:13 |
| 10 | சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத். | 1இரா 11:43 1இரா 14:31 1இரா 15:6 மத் 1:7 |
| 11 | இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ். | 1இரா 22:50 2நாளா 21:1 |
| 12 | இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம். | 2இரா 14:1 2நாளா 25:1 |
| 13 | இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே. | 2இரா 16:1 2நாளா 28:1-8 மத் 1:9 |
| 14 | இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா. | 2இரா 21:19 2நாளா 33:20 2நாளா 33:21 |
| 15 | யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே. |
| 16 | யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா. | 2இரா 24:6 2இரா 24:8 2இரா 25:27 2நாளா 36:9 |
| 17 | கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல், | எஸ்றா 3:2 எஸ்றா 3:8 எஸ்றா 5:2 |
| 18 | மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள். |
| 19 | பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள். | எஸ்றா 2:2 எஸ்றா 3:2 ஆகா 1:12-14 ஆகா 2:2 ஆகா 2:4 சகரி 4:6-9 மத் 1:12 |
| 20 | அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேருமே. |
| 21 | அனனியாவின் குமாரர், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா. | நெகே 10:22 |
| 22 | செக்கனியாவின் குமாரர் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர். | எஸ்றா 8:2 |
| 23 | நெயாரியாவின் குமாரர், எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர். |
| 24 | எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர். |