| 1 | தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான். | 2சாமு 7:1 2சாமு 7:2-17 2நாளா 6:7-9 தானி 4:4 தானி 4:29 தானி 4:30 |
| 2 | அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான். | 1நாளா 22:7 1நாளா 28:2 யோசு 9:14 1சாமு 16:7 சங் 20:4 1கொரி 13:9 |
| 3 | அன்று இராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்: | எண் 12:6 2இரா 20:1-5 ஏசா 30:21 ஆமோ 3:7 |
| 4 | நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம். | ஏசா 55:8 ஏசா 55:9 ரோம 11:33 ரோம 11:34 |
| 5 | நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன். | 2சாமு 7:6 1இரா 8:27 2நாளா 2:6 2நாளா 6:18 ஏசா 66:1 ஏசா 66:2 அப் 7:44-50 |
| 6 | நான் சகல இஸ்ரவேலோடும் உலாவி வந்த எவ்விடத்திலாகிலும், நான் என் ஜனத்தை மேய்க்கக் கற்பித்த இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் யாதொருவனை நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று யாதொரு வார்த்தை சொன்னது உண்டோ? | யாத் 33:14 யாத் 33:14 யாத் 33:15 யாத் 40:35-38 லேவி 26:11 லேவி 26:12 எண் 10:33-36 உபா 23:14 2கொரி 6:16 வெளிப் 2:1 |
| 7 | இப்போதும், நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து, | யாத் 3:1-10 1சாமு 16:11 1சாமு 16:12 1சாமு 17:15 2சாமு 7:8 சங் 78:70 சங் 78:71 ஆமோ 7:14 ஆமோ 7:15 மத் 4:18-22 லூக் 5:10 |
| 8 | நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். | 1நாளா 17:2 ஆதி 28:15 1சாமு 18:14 1சாமு 18:28 2சாமு 7:9 2சாமு 8:6 2சாமு 8:8 2சாமு 8:14 சங் 46:7 சங் 46:11 |
| 9 | நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன். | எரே 31:3-12 எசே 34:13 |
| 10 | உன் சத்துருக்களையெல்லாம் கீழ்ப்படுத்தினேன். இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன். | நியா 2:14-18 நியா 3:8 நியா 4:3 நியா 6:3-6 1சாமு 13:5 1சாமு 13:6 1சாமு 13:19 1சாமு 13:20 |
| 11 | நீ உன் பிதாக்களிடத்திலே போக, உன் நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப்பின்பு உன் புத்திரரில் ஒருவனாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். | 1நாளா 29:15 1நாளா 29:28 அப் 13:36 |
| 12 | அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். | 1நாளா 22:9 1நாளா 22:10 1நாளா 28:6-10 1இரா 5:5 2நாளா 3:1-4 எஸ்றா 5:11 சகரி 6:12 சகரி 6:13 யோவா 2:19-21 அப் 7:47 அப் 7:48 கொலோ 2:9 |
| 13 | நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; உனக்கு முன்னிருந்தவனைவிட்டு என் கிருபையை நான் விலகப்பண்ணினதுபோல, அவனைவிட்டு விலகப்பண்ணாமல், | 2சாமு 7:14 சங் 89:26-28 சங் 89:29-37 ஏசா 55:3 எபிரெ 1:5 |
| 14 | அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்; அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார். | சங் 2:6 சங் 72:17 சங் 89:36 லூக் 1:32 லூக் 1:33 எபிரெ 3:6 |
| 15 | நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான். | 2சாமு 7:17 எரே 23:28 அப் 20:27 |
| 16 | அப்பொழுது தாவீது ராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? | 2சாமு 7:18 2இரா 19:14 |
| 17 | தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்சக்காரியமாயிருக்கிறது என்று தேவனான கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகுதூரமாயிருக்கும் காலத்துச் செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தீர். | 1நாளா 17:7 1நாளா 17:8 2சாமு 7:19 2சாமு 12:8 2இரா 3:18 ஏசா 49:6 |
| 18 | உமது அடியானுக்கு உண்டாகும் கனத்தைப்பற்றி, தாவீது அப்புறம் உம்மோடே சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர். | 1சாமு 2:30 2சாமு 7:20-24 |
| 19 | கர்த்தாவே, உமது அடியானின் நிமித்தமும், உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியப்பண்ணும்படிக்கு, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர். | ஏசா 37:35 ஏசா 42:1 ஏசா 49:3 ஏசா 49:5 ஏசா 49:6 தானி 9:17 |
| 20 | கர்த்தாவே, நாங்கள் எங்கள் காதுகளால் கேட்ட எல்லாவற்றின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறே தேவனும் இல்லை. | யாத் 15:11 யாத் 18:11 உபா 3:24 உபா 33:26 சங் 86:8 சங் 89:6 சங் 89:8 ஏசா 40:18 ஏசா 40:25 எரே 10:6 எரே 10:7 எபே 3:20 |
| 21 | உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்தில் இந்த ஒரே ஜாதியை தேவனாகிய நீர் உமக்கு ஜனமாக மீட்கும்படி, பயங்கரமான பெரிய காரியங்களினால் உமக்குக் கீர்த்தியை உண்டாக்கி, நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது ஜனத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்தி, | உபா 4:7 உபா 4:32-34 உபா 33:26-29 சங் 147:20 |
| 22 | உமது ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உமது ஜனமாயிருப்பதற்கு அவர்களை நிலைப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்கு தேவனானீர். | ஆதி 17:7 யாத் 19:5 யாத் 19:6 உபா 7:6-8 உபா 26:18 உபா 26:19 1சாமு 12:22 எரே 31:31-34 சகரி 13:9 ரோம 9:4-6 ரோம 9:25-6 ரோம 9:26-6 ரோம 11:1 ரோம 11:2-12 1பேது 2:9 |
| 23 | இப்போதும் கர்த்தாவே, தேவரீர் அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைவரப்பட்டிருப்பதாக; தேவரீர் சொன்னபடியே செய்தருளும். | ஆதி 32:12 2சாமு 7:25-29 சங் 119:49 எரே 11:5 லூக் 1:38 |
| 24 | ஆம், அது நிலைவரப்பட்டிருக்கவும், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலுக்கு தேவன் என்றும், உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாகத் திடமானதென்றும் சொல்லப்படுவதினால், உமது நாமம் என்றைக்கும் மகிமைப்படவும்கடவது. | 2நாளா 6:33 சங் 21:13 சங் 72:19 மத் 6:9 மத் 6:13 யோவா 12:28 யோவா 17:1 பிலிப் 2:11 1பேது 4:11 |
| 25 | உனக்கு வீடு கட்டுவேன் என்று என் தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்பண்ண, உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது. | 1சாமு 9:15 |
| 26 | இப்போதும் கர்த்தாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர். | யாத் 34:6 யாத் 34:7 தீத் 1:2 எபிரெ 6:18 |
| 27 | இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான். | ஆதி 27:33 சங் 72:17 ரோம 11:29 எபே 1:3 |