| 1 | தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி, | 1நாளா 12:14 1நாளா 12:20 1நாளா 12:32 2சாமு 6:1 2இரா 23:1 2நாளா 29:20 2நாளா 34:29 2நாளா 34:30 |
| 2 | இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி: உங்களுக்குச் சம்மதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேலின் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்றச் சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளிநிலங்களில் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, | 1இரா 12:7 2இரா 9:15 நீதி 15:22 பிலேமோ 1:8 பிலேமோ 1:9 |
| 3 | நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான். | 1சாமு 7:1 1சாமு 7:2 சங் 132:6 |
| 4 | இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள். | 1சாமு 18:20 2சாமு 3:36 2நாளா 30:4 எஸ்தர் 8:5 |
| 5 | அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி, | 1சாமு 7:1 2சாமு 6:1 |
| 6 | கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத் யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப் போனார்கள். | யோசு 15:9 யோசு 15:60 2சாமு 6:2 |
| 7 | அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள். | 1நாளா 15:2 1நாளா 15:13 எண் 4:15 1சாமு 6:7 2சாமு 6:3 |
| 8 | தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழு பலத்தோடும் தேவனுக்கு முன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள். | 1நாளா 15:10-24 1சாமு 10:5 2சாமு 6:5-23 2இரா 3:15 சங் 47:5 சங் 68:25-27 சங் 150:3-5 |
| 9 | அவர்கள் கீதோனின் களமட்டும் வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான். | 2சாமு 6:6 |
| 10 | அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான். | 1நாளா 15:13 1நாளா 15:15 எண் 4:15 யோசு 6:6 |
| 11 | அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ் ஊசா என்னும் பேரிட்டு, | 2சாமு 6:7 2சாமு 6:9 யோனா 4:4 யோனா 4:9 |
| 12 | அன்றையதினம் தேவனுக்குப் பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி, | எண் 17:12 எண் 17:13 1சாமு 5:10 1சாமு 5:11 1சாமு 6:20 சங் 119:120 ஏசா 6:5 லூக் 5:8 லூக் 5:9 |
| 13 | பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டிலே சேர்த்தான். | 1நாளா 15:18 1நாளா 16:5 1நாளா 26:4 1நாளா 26:8 2சாமு 6:10 2சாமு 6:11 |
| 14 | தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். | 1நாளா 26:5 ஆதி 30:27 ஆதி 39:5 நீதி 3:9 நீதி 3:10 நீதி 10:22 மல்கி 3:10 மல்கி 3:11 |