| 1 | ஆதாம், சேத், ஏனோஸ், | ஆதி 4:25 ஆதி 4:26 ஆதி 5:3 ஆதி 5:8 லூக் 3:38 |
| 2 | கேனான், மகலாலெயேல், யாரேத், | ஆதி 5:12-14 லூக் 3:37 |
| 3 | ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, | ஆதி 5:21-24 எபிரெ 11:5 யூதா 1:14 |
| 4 | நோவா, சேம், காம், யாப்பேத், | ஆதி 5:32 ஆதி 6:8 ஆதி 6:9 ஆதி 7:1 ஆதி 9:29 ஏசா 54:9 ஏசா 54:10 எசே 14:14 மத் 24:37 மத் 24:38 லூக் 3:36 லூக் 17:26 |
| 5 | யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். | ஆதி 10:1-5 எசே 27:13 எசே 38:2 எசே 38:3 எசே 38:6 எசே 39:1 |
| 6 | கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். | ஆதி 10:3 |
| 7 | யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். | சங் 72:10 ஏசா 66:19 |
| 8 | காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள். | ஆதி 10:6 ஆதி 10:7 |
| 9 | கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள். |
| 10 | கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். | ஆதி 10:8-12 மீகா 5:6 |
| 11 | மிஸ்ராயிம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும், | ஆதி 10:13 ஆதி 10:14 |
| 12 | பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான். | உபா 2:23 எரே 47:4 ஆமோ 9:7 |
| 13 | கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும், | ஆதி 9:22 ஆதி 9:25 ஆதி 9:26 ஆதி 10:15-19 |
| 14 | எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும், | ஆதி 15:21 யாத் 33:2 யாத் 34:11 நியா 1:21 நியா 19:11 2சாமு 24:16 சகரி 9:7 |
| 15 | ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும், | யாத் 3:8 யாத் 3:17 யாத் 13:5 1இரா 9:20 |
| 16 | அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான். | எண் 34:8 1இரா 8:65 |
| 17 | சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள். | ஆதி 10:22-32 ஆதி 11:10 |
| 18 | அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான். | ஆதி 10:24 ஆதி 11:12-15 |
| 19 | ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான். | ஆதி 10:21 ஆதி 10:25 ஆதி 11:16 ஆதி 11:17 எண் 24:24 |
| 20 | யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும், | ஆதி 10:26 ஆதி 10:27 |
| 21 | அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், |
| 22 | ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், | ஆதி 10:28 |
| 23 | ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர். | ஆதி 10:29 1இரா 9:28 1இரா 10:11 1நாளா 29:4 யோபு 22:24 சங் 45:9 ஏசா 13:12 |
| 24 | சேம், அர்பக்சாத், சாலா, | ஆதி 11:10-26 |
| 25 | ஏபேர், பேலேகு, ரெகூ, | லூக் 3:35 |
| 26 | செரூகு, நாகோர், தேராகு, | லூக் 3:35 |
| 27 | ஆபிராமாகிய ஆபிரகாம். | ஆதி 11:27-32 ஆதி 17:5 யோசு 24:2 நெகே 9:7 |
| 28 | ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள். | ஆதி 17:19-21 ஆதி 21:2-5 ஆதி 21:12-5 |
| 29 | இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம், | ஆதி 25:12-16 |
| 30 | மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, | ஏசா 21:11 |
| 31 | யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர். |
| 32 | ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள். | ஆதி 25:1-4 |
| 33 | மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர். | ஏசா 60:6 |
| 34 | ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள். | ஆதி 21:2 ஆதி 21:3 மத் 1:2 லூக் 3:34 அப் 7:8 |
| 35 | ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். | ஆதி 36:4 ஆதி 36:5 ஆதி 36:9 ஆதி 36:10 |
| 36 | எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள். | 1நாளா 1:53 ஆதி 36:11-15 எரே 49:7 எரே 49:20 ஆமோ 1:12 ஒபதி 1:9 ஆபகூ 3:3 |
| 37 | ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள். |
| 38 | சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள். | ஆதி 36:20 ஆதி 36:29 ஆதி 36:30 |
| 39 | லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். | உபா 2:12 உபா 2:22 |
| 40 | சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள். | ஆதி 36:23 |
| 41 | ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். | ஆதி 36:25 |
| 42 | ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர் ஊத்ஸ், அரான் என்பவர்கள். | ஆதி 36:27 |
| 43 | இஸ்ரவேல் புத்திரரை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா. | ஆதி 36:31-39 ஆதி 49:10 எண் 24:17-19 |
| 44 | பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான். | ஏசா 34:6 ஏசா 63:1 எரே 49:13 ஆமோ 1:12 மீகா 2:12 |
| 45 | யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான். |
| 46 | ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத். |
| 47 | ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் இராஜாவானான். |
| 48 | சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான். | ஆதி 36:37 |
| 49 | சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான். |
| 50 | பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்; இவன் பட்டணத்தின் பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல். | ஆதி 36:39 |
| 51 | ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு, | ஆதி 36:40 |
| 52 | அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, |
| 53 | கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, |
| 54 | மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள். | ஆதி 36:41-43 |