| 1 | அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்து போனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார் யாவரையும் சங்காரம்பண்ணினாள். | 2நாளா 22:10 2நாளா 24:7 |
| 2 | யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளியறையில் ஒளித்துவைத்தார்கள். | 2நாளா 22:11 |
| 3 | இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள். | 2நாளா 22:12 சங் 12:8 மல்கி 3:15 |
| 4 | ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக்கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து, | 2நாளா 23:1-15 |
| 5 | அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும். | 1நாளா 9:25 1நாளா 23:3-6 1நாளா 23:32-6 1நாளா 24:3-6 லூக் 1:8 லூக் 1:9 |
| 6 | மூன்றில் ஒரு பங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒரு பங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும். | 1நாளா 26:13-19 2நாளா 23:4 2நாளா 23:5 |
| 7 | இப்படியே ஓய்வு நாளில் முறைப்படியே உங்களில் இரண்டு பங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும். | 2இரா 11:5 2நாளா 23:6 |
| 8 | நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்று கொண்டிருக்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன் கொலை செய்யப்படக்கடவன்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான். | 2இரா 11:15 யாத் 21:14 1இரா 2:28-31 2நாளா 23:7 |
| 9 | ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள். | 2இரா 11:4 1நாளா 26:26 2நாளா 23:8 |
| 10 | ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீது ராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான். | 1சாமு 21:9 2சாமு 8:7 1நாளா 26:26 1நாளா 26:27 2நாளா 5:1 2நாளா 23:9 2நாளா 23:10 |
| 11 | காவலாளர் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலதுபக்கம் தொடங்கி அதின் இடது பக்கமட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள். | 2இரா 11:8 2இரா 11:10 |
| 12 | அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம் பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள். | 2இரா 11:2 2இரா 11:4 2நாளா 23:11 |
| 13 | ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து, | 2நாளா 23:12-15 |
| 14 | இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள். | 2இரா 23:3 2நாளா 34:31 |
| 15 | ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறு பேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான். | 2இரா 11:4 2இரா 11:9 2இரா 11:10 2நாளா 23:9 2நாளா 23:14 |
| 16 | அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்று போட்டார்கள். | 2நாளா 23:15 |
| 17 | அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கை பண்ணவும் செய்து, | 2இரா 11:4 உபா 5:2 உபா 5:3 உபா 29:1-15 யோசு 24:25 2நாளா 15:12-14 2நாளா 29:10 2நாளா 34:31 எஸ்றா 10:3 நெகே 5:12 நெகே 5:13 நெகே 9:38 நெகே 10:28 நெகே 10:29 2கொரி 8:5 |
| 18 | பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான். | 2இரா 9:25-28 2இரா 10:26 2இரா 18:4 2இரா 23:4-6 2இரா 23:10-6 2இரா 23:14-6 2நாளா 23:17 2நாளா 34:4 2நாளா 34:7 |
| 19 | நூறுபேருக்கு அதிபதிகளையும், தலைவரையும், காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான். | 2இரா 11:5 2நாளா 23:5 2நாளா 23:19 |
| 20 | தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து நகரம் அமைதலாயிற்று. அத்தாலியாளையோ ராஜாவின் அரமனையண்டையில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள். | 2இரா 11:14 2நாளா 23:21 நீதி 11:10 நீதி 29:2 |
| 21 | யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான். | 2இரா 11:4 2இரா 22:1 2நாளா 24:1-14 |