| 1 | சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு, | 1இரா 6:37 1இரா 6:38 1இரா 7:1 1இரா 7:51 2நாளா 7:11-22 |
| 2 | கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார். | 1இரா 3:5 1இரா 11:9 2நாளா 1:7-12 2நாளா 7:12 |
| 3 | கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும். | 2இரா 20:5 சங் 10:17 சங் 66:19 சங் 116:1 தானி 9:23 யோவா 11:42 அப் 10:31 1யோவா 5:14 |
| 4 | நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால், | 1இரா 3:14 1இரா 8:25 1இரா 11:4 1இரா 11:6 1இரா 11:38 1இரா 14:8 1இரா 15:5 ஆதி 17:1 உபா 28:1 2நாளா 7:17 2நாளா 7:18 யோபு 23:11 யோபு 23:12 சங் 15:2 சங் 26:1 சங் 26:11 நீதி 20:7 சகரி 3:7 லூக் 1:6 1தெச 4:1 1தெச 4:2 |
| 5 | இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். | 1இரா 2:4 1இரா 6:12 1இரா 8:15 1இரா 8:20 2சாமு 7:12 2சாமு 7:16 1நாளா 22:9 1நாளா 22:10 சங் 89:28-39 சங் 132:11 சங் 132:12 |
| 6 | நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில், | 1சாமு 2:30 2சாமு 7:14-16 1நாளா 28:9 2நாளா 7:19-22 2நாளா 15:2 |
| 7 | நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் இருப்பார்கள். | லேவி 18:24-28 உபா 4:26 உபா 29:26-28 2இரா 17:20-23 2இரா 25:9 2இரா 25:21 எரே 7:15 எரே 24:9 எசே 33:27-29 லூக் 21:24 |
| 8 | அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு: கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள். | 2நாளா 7:21 ஏசா 64:11 எரே 19:8 எரே 49:17 எரே 50:13 தானி 9:12 |
| 9 | அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டு. வேறே தேவர்களைப் பற்றிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார். | உபா 29:25-28 2நாளா 7:22 எரே 2:10-13 எரே 2:19-13 எரே 5:19 எரே 16:10-13 எரே 50:7 புலம் 2:16 புலம் 2:17 புலம் 4:13-15 எசே 36:17-20 செப் 1:4 செப் 1:5 |
| 10 | சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே, | 1இரா 9:1 1இரா 6:37 1இரா 6:38 1இரா 7:1 2நாளா 8:1-18 |
| 11 | தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான். | 1இரா 5:6-10 2நாளா 2:8-10 2நாளா 2:16-10 |
| 12 | ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை. | எண் 22:34 நியா 14:3 |
| 13 | அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கி வருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான். | 1இரா 5:1 1இரா 5:2 ஆமோ 1:9 |
| 14 | ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான். | 1இரா 9:11 1இரா 9:28 1இரா 10:10 1இரா 10:14 1இரா 10:21 |
| 15 | பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான். | 1இரா 9:21 1இரா 5:13 |
| 16 | கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர் பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான். | 1இரா 9:24 1இரா 3:1 |
| 17 | சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும், | யோசு 16:3 யோசு 19:44 யோசு 21:22 2நாளா 8:4-6 2நாளா 8:7-18 |
| 18 | பாலாத்தையும், வனாந்தர வெளியிலுள்ள தத்மோரையும், | யோசு 19:44 |
| 19 | தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான். | 1இரா 4:26-28 யாத் 1:11 |
| 20 | இஸ்ரவேல் புத்திரர் சங்காரம் பண்ணக்கூடாமல் மீந்திருந்த இஸ்ரவேல் புத்திரரின் ஜாதியல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியருமான சகல ஜனத்திலும், | 2நாளா 8:7 2நாளா 8:8-18 |
| 21 | அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, அமஞ்சி வேலை செய்ய அடிமைப்படுத்திக்கொண்டான். | நியா 1:21 நியா 1:27-35 நியா 2:20-23 நியா 3:1-4 சங் 106:34-36 |
| 22 | இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தமனுஷரும், அவனுக்குப் பணிவிடைக்காரரும், பிரபுக்களும், சேர்வைக்காரரும், இரதவீரரும், குதிரைவீரருமாயிருந்தார்கள். | லேவி 25:39 |
| 23 | ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள். | 1இரா 5:16 2நாளா 2:18 2நாளா 8:10 |
| 24 | பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான். | 1இரா 9:16 1இரா 3:1 1இரா 7:8 2நாளா 8:11 |
| 25 | சாலொமோன் கர்த்தரின் ஆலயத்தை முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் வருஷத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் இட்டு, கர்த்தரின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபங்காட்டிவந்தான். | யாத் 23:14-17 யாத் 34:23 உபா 16:16 2நாளா 8:12 2நாளா 8:13 |
| 26 | ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான். | 2நாளா 8:12 2நாளா 8:17 2நாளா 8:18-11 |
| 27 | அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான். | 1இரா 5:6 1இரா 5:9 1இரா 22:49 2நாளா 20:36 2நாளா 20:37 |
| 28 | அவர்கள் ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள். | 1இரா 10:11 ஆதி 10:29 1நாளா 29:4 2நாளா 8:18 2நாளா 9:10 யோபு 22:24 யோபு 28:16 சங் 45:9 ஏசா 13:12 |