| 1 | கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக, | 2நாளா 9:1-12 மத் 12:42 லூக் 11:31 |
| 2 | மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலோமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங்குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள். | 2இரா 5:5 2இரா 5:9 ஏசா 60:6-9 அப் 25:23 |
| 3 | அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான். அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. | 2நாளா 9:2 நீதி 1:5 நீதி 1:6 நீதி 13:20 ஏசா 42:16 மத் 13:11 யோவா 7:17 1கொரி 1:30 கொலோ 2:3 |
| 4 | சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும், | 1இரா 3:28 1இரா 4:29-31 2நாளா 9:3 2நாளா 9:4 பிரச 12:9 மத் 12:42 |
| 5 | அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவன் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு, | 1இரா 4:22 1இரா 4:23 |
| 6 | ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று. | 2நாளா 9:5 2நாளா 9:6 |
| 7 | நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது. | ஏசா 64:4 சகரி 9:17 மாற் 16:11 யோவா 20:25-29 1கொரி 2:9 1யோவா 3:2 |
| 8 | உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள். | 2நாளா 9:7 2நாளா 9:8 நீதி 3:13 நீதி 3:14 நீதி 8:34 நீதி 10:21 நீதி 13:20 லூக் 10:39-42 லூக் 11:28 லூக் 11:31 |
| 9 | உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள். | 1இரா 5:7 சங் 72:17-19 |
| 10 | அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை. | 1இரா 10:2 1இரா 9:14 சங் 72:10 சங் 72:15 மத் 2:11 |
| 11 | ஓப்பீரிலிருந்து பொன்னைக்கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது. | 1இரா 9:27 1இரா 9:28 2நாளா 8:18 சங் 45:9 |
| 12 | அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனை மரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை. | 1நாளா 23:5 1நாளா 25:1-31 சங் 92:1-3 சங் 150:3-5 வெளிப் 14:2 வெளிப் 14:3 |
| 13 | ராஜாவாகிய சாலொமோன் தானே சந்தோஷமாய்ச் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள். | 1இரா 10:2 1இரா 9:1 சங் 20:4 சங் 37:4 மத் 15:28 யோவா 14:13 யோவா 14:14 எபே 3:20 |
| 14 | சாலொமோனுக்கு வியாபாரிகளாலும், சுகந்த திரவிய வர்த்தகராலும், அரபிதேசத்து சகல ராஜாக்களாலும், மாகாணங்களின் அதிபதிகளாலும் வந்த பொன்னையல்லாமல், | 1இரா 9:28 |
| 15 | ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது. | 1நாளா 9:24 2நாளா 9:13 2நாளா 9:14 சங் 72:10 ஏசா 21:13 கலா 4:25 |
| 16 | சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது. | 1இரா 14:26-28 2நாளா 9:15 2நாளா 9:16 2நாளா 12:9 2நாளா 12:10 |
| 17 | அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான். | 1இரா 7:2 |
| 18 | ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான். | 2நாளா 9:17-19 சங் 45:6 சங் 110:1 சங் 122:5 எபிரெ 1:3 எபிரெ 1:8 வெளிப் 20:11 |
| 19 | அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது. |
| 20 | ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை. | ஆதி 49:9 எண் 23:24 எண் 24:9 வெளிப் 5:5 |
| 21 | ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை. | 2நாளா 9:20-22 |
| 22 | ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். | 1இரா 22:48 ஆதி 10:4 2நாளா 9:21 2நாளா 20:36 2நாளா 20:37 சங் 48:7 சங் 72:10 ஏசா 2:16 ஏசா 23:1 ஏசா 23:6 ஏசா 23:10 ஏசா 60:9 ஏசா 66:19 எசே 27:12 யோனா 1:3 |
| 23 | பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான். | 1இரா 3:12 1இரா 3:13 1இரா 4:29-34 2நாளா 9:22 2நாளா 9:23 சங் 89:27 எபே 3:8 கொலோ 1:18 கொலோ 1:19 கொலோ 2:2 கொலோ 2:3 |
| 24 | சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள். | 1இரா 3:9 1இரா 3:12 1இரா 3:28 நீதி 2:6 தானி 1:17 தானி 2:21 தானி 2:23 தானி 5:11 யாக் 1:5 |
| 25 | வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டு வருவார்கள். | 1இரா 10:10 நியா 3:15 1சாமு 10:27 2சாமு 8:2 2சாமு 8:10 2நாளா 26:8 யோபு 42:11 சங் 72:10 சங் 72:15 ஏசா 36:16 மத் 2:11 |
| 26 | சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்துநானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான். | 1இரா 4:26 உபா 17:16 2நாளா 1:14 2நாளா 9:25 ஏசா 2:7 |
| 27 | எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான். | 2நாளா 1:15-17 2நாளா 9:27 யோபு 22:24 யோபு 22:25 |
| 28 | சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள். | உபா 17:16 2நாளா 1:16 2நாளா 1:17 2நாளா 9:28 ஏசா 31:1-3 ஏசா 36:9 |
| 29 | எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக் காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது. | யோசு 1:4 2இரா 7:6 |