| 1 | பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான். | ஆதி 31:8 ஆதி 31:9 யோபு 31:31 சங் 57:4 சங் 64:3 சங் 64:4 சங் 120:3-5 நீதி 14:30 நீதி 27:4 பிரச 4:4 எசே 16:44 தீத் 3:3 |
| 2 | லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான். | ஆதி 4:5 உபா 28:54 1சாமு 18:9-11 தானி 3:19 |
| 3 | கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார். | ஆதி 28:15 ஆதி 28:20 ஆதி 28:21-29 ஆதி 32:9 ஆதி 35:1 ஆதி 46:2 ஆதி 46:3 ஆதி 50:24 சங் 46:1 சங் 50:15 சங் 90:15 |
| 4 | அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து, |
| 5 | அவர்களை நோக்கி உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார். | ஆதி 31:2 ஆதி 31:3 |
| 6 | என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். | ஆதி 31:38-42 ஆதி 30:29 எபே 6:5-8 கொலோ 3:22-25 தீத் 2:9 தீத் 2:10 1பேது 2:18 |
| 7 | உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை. | லேவி 26:26 எண் 14:22 நெகே 4:12 யோபு 19:8 ஏசா 4:1 சகரி 8:23 |
| 8 | புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது. | ஆதி 30:32 |
| 9 | இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார். | ஆதி 31:1 ஆதி 31:16 எஸ்தர் 8:1 எஸ்தர் 8:2 சங் 50:10 நீதி 13:22 மத் 20:15 |
| 10 | ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன். | ஆதி 31:24 ஆதி 20:6 ஆதி 28:12 எண் 12:6 உபா 13:1 1இரா 3:5 |
| 11 | அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். | ஆதி 31:5 ஆதி 31:13 ஆதி 16:7-13 ஆதி 18:1 ஆதி 18:17 ஆதி 48:15 ஆதி 48:16 |
| 12 | அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். | ஆதி 30:37-43 |
| 13 | நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான். | ஆதி 28:12-22 ஆதி 35:7 |
| 14 | அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ? | ரூத் 4:11 |
| 15 | அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார். | ஆதி 31:41 ஆதி 29:15-20 ஆதி 29:27-30 ஆதி 30:26 யாத் 21:7-11 நெகே 5:8 |
| 16 | ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள். | ஆதி 31:1 ஆதி 31:9 ஆதி 30:35-43 |
| 17 | அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி, | ஆதி 24:10 ஆதி 24:61 1சாமு 30:17 |
| 18 | தான் பதான் அராமிலே சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டான். | ஆதி 27:1 ஆதி 27:2 ஆதி 27:41 ஆதி 28:21 ஆதி 35:27-29 |
| 19 | லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள். | ஆதி 31:30 ஆதி 31:32 ஆதி 35:2 யோசு 24:2 நியா 17:4 நியா 17:5 நியா 18:14-24 நியா 18:31-24 1சாமு 19:13 எசே 21:21 ஓசி 3:4 |
| 20 | யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான். |
| 21 | இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான். | ஆதி 2:14 ஆதி 15:18 யோசு 24:2 யோசு 24:3 |
| 22 | யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது. | ஆதி 30:36 யாத் 14:5-31 யோபு 5:12 யோபு 5:13 |
| 23 | அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்து போய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான். | ஆதி 13:8 ஆதி 24:27 யாத் 2:11 யாத் 2:13 |
| 24 | அன்று ராத்திரி தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார். | ஆதி 28:5 உபா 26:5 ஓசி 12:12 |
| 25 | லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு மலையிலே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரரோடேகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான். | ஆதி 12:8 ஆதி 33:18 எபிரெ 11:9 |
| 26 | அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை? | ஆதி 31:36 ஆதி 3:13 ஆதி 4:10 ஆதி 12:18 ஆதி 20:9 ஆதி 20:10 ஆதி 26:10 யோசு 7:19 1சாமு 14:43 1சாமு 17:29 யோவா 18:35 |
| 27 | நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே. | ஆதி 31:3-5 ஆதி 31:20-5 ஆதி 31:21-5 ஆதி 31:31-5 நியா 6:27 |
| 28 | என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய். | ஆதி 31:55 ஆதி 29:13 யாத் 4:27 ரூத் 1:9 ரூத் 1:14 1இரா 19:20 அப் 20:37 |
| 29 | உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று இராத்திரி என்னோடே சொன்னார். | சங் 52:1 யோவா 19:10 யோவா 19:11 |
| 30 | இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய் என்று கேட்டான். | ஆதி 31:19 யாத் 12:12 எண் 33:4 நியா 6:31 நியா 18:24 1சாமு 5:2-6 2சாமு 5:21 ஏசா 37:19 ஏசா 46:1 ஏசா 46:2 எரே 10:11 எரே 43:12 |
| 31 | யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன். | ஆதி 31:26 ஆதி 31:27 ஆதி 20:11 நீதி 29:25 |
| 32 | ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்ததை யாக்கோபு அறியாதிருந்தான். | ஆதி 31:19 ஆதி 31:30 ஆதி 44:9-12 |
| 33 | அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான். | ஆதி 24:28 ஆதி 24:67 |
| 34 | ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை. | ஆதி 31:17 ஆதி 31:19 |
| 35 | அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக்குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை. | ஆதி 18:12 யாத் 20:12 லேவி 19:3 எபே 6:1 1பேது 2:18 1பேது 3:6 |
| 36 | அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன? | ஆதி 30:2 ஆதி 34:7 ஆதி 49:7 எண் 16:15 2இரா 5:11 2இரா 13:19 நீதி 28:1 மாற் 3:5 எபே 4:26 யாக் 1:19 யாக் 1:20 |
| 37 | என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும். | ஆதி 31:32 யோசு 7:23 1சாமு 12:3 1சாமு 12:4 மத் 18:16 1கொரி 6:4 1கொரி 6:5 1தெச 2:10 எபிரெ 13:18 1பேது 2:12 1பேது 3:16 |
| 38 | இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை. | ஆதி 30:27 ஆதி 30:30 யாத் 23:26 உபா 28:4 |
| 39 | பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர். | யாத் 22:10 யாத் 22:31 லேவி 22:8 1சாமு 17:34 1சாமு 17:35 யோவா 10:12 யோவா 10:13 |
| 40 | பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன். | யாத் 2:19-22 யாத் 3:1 சங் 78:70 சங் 78:71 ஓசி 12:12 லூக் 2:8 யோவா 21:15-17 எபிரெ 13:7 1பேது 5:2-4 |
| 41 | இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர். | ஆதி 31:38 ஆதி 29:18-30 ஆதி 30:33-40 1கொரி 15:10 2கொரி 11:26 |
| 42 | என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று இராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான். | ஆதி 31:24 ஆதி 31:29 சங் 124:1-3 |
| 43 | அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்? |
| 44 | இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான். | ஆதி 15:18 ஆதி 21:22-32 ஆதி 26:28-31 1சாமு 20:14-17 |
| 45 | அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான். | ஆதி 28:18-22 |
| 46 | பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம் பண்ணினார்கள். | ஆதி 31:23 ஆதி 31:32 ஆதி 31:37 ஆதி 31:54 |
| 47 | லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான். | எபிரெ 12:1 |
| 48 | இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது. | யோசு 24:27 |
| 49 | அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்; | நியா 10:17 நியா 11:11 நியா 11:29 |
| 50 | நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர்பெற்றது. | லேவி 18:18 மத் 19:5 மத் 19:6 |
| 51 | பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார். |
| 52 | தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி. | ஆதி 31:44 ஆதி 31:45 ஆதி 31:48 |
| 53 | ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான். | ஆதி 11:24-29 ஆதி 11:31-29 ஆதி 17:7 ஆதி 22:20-24 ஆதி 24:3 ஆதி 24:4 யாத் 3:6 யோசு 24:2 |
| 54 | பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள். | ஆதி 21:8 ஆதி 26:30 ஆதி 37:25 யாத் 18:12 2சாமு 3:20 2சாமு 3:21 |
| 55 | லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான். | ஆதி 31:28 ஆதி 33:4 ரூத் 1:14 |