வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 67

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும். தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!
2தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன். நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும்.
3தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்! எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
4எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்! ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர். நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர்.
5தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும். எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
6தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும். எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும்.
7தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும். பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.