| 1 | பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும். |
| 2 | அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்! துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்! |
| 3 | அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்! தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது! உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள். அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள். |
| 4 | உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும். ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும். |
| 5 | தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்! அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும். |
| 6 | தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார். மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள். |
| 7 | தேவன், அவரது மிகுந்த வல்லமையயால் உலகத்தை ஆளுகிறார். எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார். ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது. |
| 8 | ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள், உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள். |
| 9 | தேவன் நமக்கு உயிரைத் தந்தார். தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார். |
| 10 | ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரி சோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார். |
| 11 | தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர். கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர். |
| 12 | எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர். நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர். ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர். |
| 13 | எனவே நான் உமது ஆலயத்திற்குப் பலிகளைக் கொண்டுவருவேன். நான் தொல்லையில் சிக்குண்டபோது உதவிக்காக உம்மைக் கேட்டேன். |
| 14 | உமக்குப் பல பொருத்தனைகளைப் பண்ணினேன். இப்போது, நான் பொருத்தனைப் பண்ணினதை உமக்குக் கொடுக்கிறேன். |
| 15 | நான் பாவப்பரிகார பலிகளை உமக்குக் கொடுக்கிறேன். நான் ஆட்டுக் கடாக்களோடு நறுமணப்பொருட்களைப் புகையிடுவேன். நான் உமக்குக் காளைகளையும் செம்மறி ஆடுகளையும் தருவேன். |
| 16 | தேவனைத் தொழுதுக்கொள்கிற எல்லா ஜனங்களே, வாருங்கள். தேவன் எனக்குச் செய்தவற்றை உங்களுக்குக் கூறுவேன். |
| 17 | நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன். |
| 18 | என் இருதயம் தூய்மையாயிருந்தது. எனவே என்ஆண்டவர்நான்கூறியவற்றைக் கேட்டார். |
| 19 | தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார். தேவன் என் ஜெபத்தைக் கேட்டார். |
| 20 | தேவனைத் துதியுங்கள், தேவன் என்னிடம் பாராமுகமாக இருக்கவில்லை, அவர் என் ஜெபத்தைக் கேட்டார். தேவன் அவரது அன்பை என்னிடம் காட்டியருளினார். |