வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 54

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, உமது வல்லமையான நாமத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும். உமது வல்லமையை பயன்படுத்தி என்னை விடுதலை யாக்கும்.
2தேவன், என் ஜெபத்தைக்கேளும். நான் கூறும் காரியங்களைக் கேளும்.
3தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர் கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கி றார்கள்.
4பாருங்கள், என் தேவன் எனக்கு உதவு வார். என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.
5எனக்கு எதிராகத் திரும்பியுள்ள ஜனங் களை என் தேவன் தண்டிப்பார். தேவன் எனக்கு உண்மையானவராக இருப்பார். அவர் அந்த ஜனங்களை அறவே அழிப்பார்.
6தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக் கைகளை உமக்குத் தருவேன். கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
7என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண் டுகிறேன். எனது பகைவர்கள் தோற்கடிக்கப் படுவதை நான் பார்க்கட்டும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.