| 1 | சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள், தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள். |
| 2 | உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர். பூமியெங்கும் அவர் பேரரசர். |
| 3 | பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார். அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார். |
| 4 | தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந் தெடுத்தார். தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார். |
| 5 | எக்காளமும் கொம்பும் முழங்க, கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார். |
| 6 | தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள். நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள். |
| 7 | அகில உலகத்திற்கும் தேவனே அரசர். துதிப் பாடல்களைப் பாடுங்கள். |
| 8 | பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார். எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார். |
| 9 | ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத் தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள். எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள். தேவனே எல்லோரிலும் மேன்மையானவர். |